- Saturday
- February 22nd, 2025

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல தடவைகள் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள்...

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டை மற்றையவர்களுக்குத் தெரியும்படியான இடத்தில் காட்சிப்படுத்த வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டையை வேறு யாரும் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட QR...

கோவிட் நோய் தொடர்பில் சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், எனவே நோயைத் தடுப்பதற்கு பொதுமக்களின்...

நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக கடுமையான மழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய,மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும்,தென்மேற்கு கடற்பகுதியிலும் மழை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல்,மத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை...

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டிருந்த கட்டணத் திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. சுமார் 50 பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் நேற்றைய தினம் கருத்துக்களை பெற்றுக் கொண்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மின்சாரக்...

இலங்கை மக்களிடையே இந்த நாட்களில் காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல், தடுமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ள கோவிட், டெங்கு தொற்று அல்லது வேறு...

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் 75 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்கள், வீதிகள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் பாதுகாப்பு...

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் ( QR குறியீடு) இல்லாவிட்டால் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, வாகன இலக்கத் தகட்டின் கடைசி முறைக்கு எரிபொருள் விநியோகம் உள்பட ஏனைய அனைத்து முறைகளும் ஒகஸ்ட் முதலாம்...

பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா பரவுவதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார். முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக இடைவெளி போன்ற சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதும் மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்....

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை டல்ஸிற்கு 82 வாக்குகளும் அனுரவிற்கு 3 வாக்குகளும் கிடைத்தன, இதனை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றில் அறிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலையடுத்து ஏற்பட்ட வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு தாக்கல் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய , பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதனை உறுதிப்படுத்தினார். இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை, தினேஷ் குணவர்தன முன்மொழிய மனுஷ...

03 வாரங்களுக்கு மேலான காலப்பகுதியின் பின்னர், பெற்றோல் ஏற்றிய முதலாவது கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. கப்பலில் உள்ள பெற்றோலின் மாதிரி பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 02 டீசல் கப்பல்களில் கொண்டு வரப்பட்ட டீசலை இறக்கும் பணி இறுதி இலக்கை அடைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்காஞ்சன விஜேசேகர...

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று முதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான...

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார். இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கடிதம் தொடர்பில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்த சபாநாயகர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி முதல் தனது பதவியை சட்டப்பூர்வமாக...

கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன சற்றுமுன் அறிவித்துள்ளார். ஜுலை 14ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமான அவர் பதவி விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்றம் நாளைய தினம் கூடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வியாழக்கிழமை (14) நண்பகல் 12 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அலரி மாளிகையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் காயமடைந்த பெண் ஒருவரின் கழுத்து வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலரி மாளிகையில் மக்கள்...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி - மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (07) இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இந்த மோதலில் ஹபராதுவ - ஸ்வாலுவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்....

கொழும்பு - பம்பலப்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் இன்று (07) உயிரிழந்துள்ளார். வரிசையில் காத்திருந்த குறித்த நபர் திடீர் சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 62 வயதுடைய புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவராவார். சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

பத்தரமுலையில் உள்ள குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி தாயொருவர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை குழந்தையை பிரசவித்துள்ளார். கடவுச்சீட்டு பெற வந்த ஹட்டனை சேர்ந்த பெண்ணுக்கே இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது. வரிசையில் நின்று பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்த இராணுவ வீரர்கள், அவரை காசல் வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர். அதற்குள்...

All posts loaded
No more posts