- Saturday
- January 11th, 2025
வடக்கு- கிழக்கில் ஆதிக்கம் செலுத்திவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இம்முறை பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் ஈழம் சிறியதாகிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை தொடர்ந்து கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், இத்தேர்தலின் மூலம்...
மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தீட்டிய சதித்திட்டங்களை அம்பலப்படுத்த முயன்றதற்காக பல தடவைகள் என்னைக் கொலை செய்து விட முயற்சி செய்தார்கள் என ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ மேஜர் ஹசித சிரிவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்...
அரசியல்வாதிகள் மக்களின் சொத்தை களவாடுவதே வறுமைக்கான காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதநதிரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கட்சி பார்த்து அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதை நான்...
சேதமடைந்த மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் நிதி திணைக்களத்தின் உயர் அதிகாரி தீபா செனவிரத்ன இதனை தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், நாணயத்தாள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இரண்டுகோடி ரூபாவை அபிவிருத்தி நிதி எனும் பெயரில் பெற்றுக்கொண்டமையை பத்திரிகை ஒன்று ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபா அரசியல் இலஞ்சம் வழங்கப்பட்டதாக தாவல்கள்...
இலங்கையின் 70ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வுகளில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் நாளை காலை 70ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பிரிட்டன் இளைவரசர் எட்வேர்ட் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார். எனினும், சுதந்திர தின விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனோ,...
ஒரே தேசம்’ என்னும் தொனிப்பொருளில் இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெகுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரித்தானிய இளவரசர் எட்வேட் தம்பதியினர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், பிரதமர நீதியரசர் பிரசாத் டெப்,...
உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து விட்டு வாக்களிக்காதவர்களிடம், அதற்கான செலவுத் தொகையை அறவிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து, அதற்கு தகைமை பெற்ற 4 ஆயிரம்...
நாட்டைத் துண்டாடவோ அல்லது பிளவுபடுத்தவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் எவருக்கும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை, செவனபிட்டிய பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில், “இன்று நாட்டிற்குத் தேவையாக இருப்பது மன்னராட்சி...
கடந்த காலங்களில் இனவாதம் பேசி மக்களை உசுப்பேத்தி வாக்குப்பெற்று மாநகரசபை உறுப்பினரானவர்கள் இதுவரை என்ன செய்தார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர். கடந்த காலங்களில் வெறுமனே ஆசனத்தையும் தமது சட்டைப்பையையும் நிரப்பியவர்கள் மீண்டும் என்ன முகத்தோடு மக்கள் முன் வாக்கு கேட்டு வருகின்றார்கள். கடந்த காலங்களில் இவர்கள் வாக்கு கேட்டு வரும் போது பல்வேறு வாக்குறுதிகளை...
வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கொலை செய்யப்பட்டு, கடற்கரை பகுதியில் கொண்டுவந்து போடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இனங்காணப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்,யுவதிகளின் உடலங்கள் கடலில் வீசப்பட்டுள்ளமை மீண்டும் உறுதியாகியுள்ளது.குறிப்பாக கடற்படையினரது வசமிருந்த கட்டுப்பாட்டு பகுதிகளினில் இந்நடவடிக்கைகள் துல்லியமாக கடற்படையின் விசேட பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. தீவத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள வணபிதா ஜிம்பிறவுண் அடிகளாரது என நம்பப்படும் உடல துண்டங்கள் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் மற்றும் ரயில்வே இயந்திர பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிமுதல் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதோடு, காலை 9 மணிமுதல் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். ரயில்வே இயந்திர பொறியியலாளர்கள் ஏற்கனவே கடந்த...
இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இராணுவ ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அண்மைக்காலங்களில் இராணுவத்திற்கு எதிரான செய்திகள் வெளியிடப்படுவது இராணுவத்தின் மீதான கருத்துக்கள் அவதூறு பரப்பும் விதத்தில் காணப்படுகின்றன. இனம்தெரியாத நபர்களினால் குறிப்பாக இராணுவத்தின்...
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பிலான பிரச்சினை மற்றும் வைத்தியர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வினை பெற்றுத்தர தவறியுள்ளமை போன்ற காரணங்களை முன்வைத்து எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் தொடர் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றுக்கு செல்ல அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த...
ஆசிரிய சமூகத்துக்கும், பெண்கள் சமூகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்திய ஊவா மாகாண முதலமைச்சரினதும், கல்வி அதிகாரிகளினதும் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இக்கோரிக்கையை முன்னிறுத்தி பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவும் இலங்கை ஆசிரியர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹற்றன் பேரூந்து நிலையத்திற்கு அருகில் பிற்பகல்...
கொழும்பு – வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) நடந்த விபத்துச் சம்பவமொன்றில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவத்தில் உயிரிழந்த பெண் வவுனியா தாண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த கமலி என்றழைக்கப்படும் கமலவதனா (வயது 35) என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனது மகனுடன் ஒரு ரயிலில் இருந்து இன்னுமொரு ரயிலுக்கு மாறிய வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....
நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைககு புதிய அரசியல் யாப்பினூடாக தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதற்கு கூடுதல் பங்களிப்பு செய்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஒருவேளை அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகள் தோல்வியுற்றால் அதற்கான பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்வதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். கனேடிய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே...
Loading posts...
All posts loaded
No more posts