- Saturday
- January 11th, 2025
வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான...
உள்ளூராட்சி சபைகளை நிறுவும் தினம் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஏற்கனவே எதிர்வரும் 6ஆம் திகதி நிறுவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,...
இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள தியத்தலாவ- கஹகொல்லவில் அண்மையில் படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடட அவர், “ஒரு கைக்குண்டு வெடிப்பின் மூலம் நிச்சயமாக...
மாற்றங்களுடனான புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. உட்பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தொடர்ந்து தாமதிக்கப்பட்டுவந்த அமைச்சரவை மாற்றமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, மாற்றங்களுடனான புதிய அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதேவேளை, புதிய அமைச்சரவை மறுசீரமைப்புடன் ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் உரித்தான பொறுப்புக்கள் விரைவில்...
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிவந்த உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கைக்கான ஐ.நாவின் முதல் பெண் நிரந்தர...
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தாமதிப்பதாகவும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசென்ஸேனிஸ் ஆகியோருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை)...
தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பஸ் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு இராணுவ வீரர் ஒருவரே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்த மூன்று ஆசன வரிசையில் மூவர் அமர்ந்திருந்ததாகவும், அதன் நடுவிலிருந்தவர் எழுந்தபோதே குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகவும் அருகில் அமர்ந்திருந்த இருவரும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் உயர்...
2018ஆம் ஆண்டு, வரவு - செலவுத் திட்டத்துக்கு, ஆதரவு வழங்குவதற்காக, 20 மில்லியன் ரூபாயை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம், நாடாளுமன்றத்தில் நேற்று சூடுபிடித்திருந்தது. இந்தச் சலசலப்பையடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அமருமாறும், இல்லையேல் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றிவிடுவதாகவும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்தார்....
பிணைமுறி அறிக்கை குறித்து சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட்டன இது திட்டமிட்ட சதியென கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தினர். எனினும் நான் முன்வைத்த கோரிக்கை நியாயமானது, சட்ட விதிமுறைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் வாசுதேவ...
மாலபே – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் தற்போது கல்வி கற்றுவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படைத் தகைமைகள்...
சட்டம் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவது உறுதி என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச ஊடகவியலாளர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை உறுதிபடுத்தியுள்ளார். மேலும், அவருக்கான நியமனம் இன்று வழங்கப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ந்துவரும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள்...
யாழ்ப்பாணத்திலிருந்து பண்டாரவளைக்குப் பயணித்த தனியார் பஸ் தீவிபத்துக்குள்ளாகியதில் 19 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 12 பேர் இராணுவத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது. தியதலாவ, கஹகொல்ல என்ற இடத்தில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. “பஸ்ஸில் திடீரென ஏற்பட்ட தீயால் விபத்து இடம்பெற்றது. அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. படுகாயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்”...
தாமரை மொட்டிலிருந்து அமைதியும் இணக்கமும் சுபீட்சமுமே மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றினால், கட்டாயம் தமிழீழம் மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் எச்சரித்ததன் பின்னணியில் நாமல் இந்த கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து நாமல் தனது...
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு தம்மிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றால் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை பெற்றுத் தருவேன்....
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு தீர்வுகாணும் முகமாக விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மைத்திரியை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டே மஹிந்த ராஜபக்ஷ குறித்த அழைப்பினை விடுத்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
அரசியல் யாப்பின் பிரகாரம் தான் பதவி விலக தேவையில்லை என்றும் தொடர்ந்தும் தான் பிரதமராக கடமையற்றுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய அரசாங்கமொன்றில் பிரச்சினைகள் நிலவுவது சாதாரண விடயம் எனவும் இரண்டு தலைவர்கள் இருப்பதனால் நல்லாட்சி பயணத்திற்கு பாதிப்பு இல்லை...
கொழும்பின் முன்னணி தனியார் வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தமை தொடர்பில் கப்டன் தர இராணுவ அதிகாரியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஏற்கனவே மூவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் கப்டன் தரத்தை உடைய மற்றொரு அதிகாரியை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இரானுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் செயற்படும் இராணுவ பொலிஸ் பிரிவின்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாம் வரவேற் கின்றோம். அவரை எம்முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடுக்கின்றோம். அவரை நாம் எதிரியாக எப்பொழுதும் கருதியது இல்லை. அவர் மதிப்பு பெற்ற தலைவன். ஒரு நல்ல கருமத்தை நாட்டில் நிறைவேற்றுவதற்கு அவரது ஒத்துழைப்பு தேவை. இந்த ஒத்துழைப்பை அவர் நல்கவேண்டும் என்று, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும்...
புதிய தேர்தல் முறையின் காரணமாக உள்ளூராட்சி சபைகளில் எந்தவொரு கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறுவது கடினமானதாக மாறியுள்ள நிலையில், ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கில் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், அங்கு ஆட்சியமைக்கும் எந்தவொரு கட்சிக்கும் வெளியிலிருந்து ஆதரவளிக்க...
பிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சில தரப்பினர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தமைக்கு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உள்ளுராட்சி மன்ற தேர்தல்...
Loading posts...
All posts loaded
No more posts