- Friday
- January 10th, 2025
அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகருக்கு பொது மன்னிப்பளிப்பது தொடர்பில் உரிய நடவடிக்கையை முன்னெடுப்பதாக அவரது இரண்டு பிள்ளைகளிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை ஆனந்தசுதாகரின் புதல்வனும் புதல்வியும் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் ரணில் விக்ரமசிங்க பாரபட்சம் வழங்கவோ அல்லது காப்பாற்றவோ மாட்டார் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக்...
இலங்கையில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமைக்கு சர்வதேச அமைப்புகள் பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் அண்மையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனங்களுக்கு இடையிலான மோதலை தொடர்ந்து, வெறுப்பூட்டும் பிரசாரங்களை தவிர்க்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தன. கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகிய மூவரையும் படுகொலைச் செய்வதற்கு சூழ்ச்சிகளை மேற்கொண்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இவருவர் விடுவிக்கப்பட்டனர். அவ்விருவருக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன்...
யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அதிக விலை மதிப்பான குண்டு துளைக்காத ஆடம்பர கார்கள், ஜீப்கள் உட்பட 8 வாகனங்கள், விடுதலைப் புலிகளின் வேலின் என்ற கப்பல் என்பன நேற்று நீர்கொழும்புக்கு அருகில் மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மூழ்கடித்து அழிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த தொடர்பாடல் கருவிகள் உட்பட...
பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜுலை மாதத்திற்குள் வேலை வழங்காவிடின் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக, உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.குஷையின் முபாரக் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு...
தந்தையுடன் இணைந்து வாழ வழியமைக்குமாறு கோரி அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் கொழும்பிற்கு சென்றுள்ளனர். கொழும்பிற்கு சென்றுள்ள அவர்கள் இன்று (சனிக்கிழமை) வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஆனந்தசுதாகரின் விடுதலைக்காக பல்வேறுபட்ட தரப்பினர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தந்தையை மீட்கும் முயற்சியில் அவரது பிள்ளைகள் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட...
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். விடுதலைப்புலிகளுக்கு வாகனம் எடுத்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தார்....
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது. வேதன உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) 18ஆவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் பணிப்புறக்கணிப்பை கைவிட்டு, பணிக்கு செல்லுமாறு பல்கலைக்கழக மானியங்கள்...
உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 11 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் நேற்று இரவு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக தலைவர் லியனகே தெரிவித்துள்ளார். ஏனைய மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் இன்றைய தினத்திற்குள் வெளியிடப்படவுள்ளது.
இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை, முற்றாக நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பிரகாரம், இன்று (வியாழக்கிழமை) சமூக ஊடகங்களின் பாவனை வழமைக்குத் திரும்பியுள்ளது. கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களும் காணொளிகளும் பகிரப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், வன்முறைகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சமூக...
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையை எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதன்போது இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான...
இலங்கை பேஸ்புக் வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பிற்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களை கோபப்படுத்தும் தகவல் பரிமாறுதல் மற்றும் பதிவிடலை தடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த விடயங்களை வெற்றிகரமாக்கிக்...
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடையானது, இலங்கையின் அரச நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தடைக் காலத்தில் ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியன ஒரு தினத்தில் 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, ஃபேஸ்புக்கை கட்டுப்படுத்துவது குறித்த விவாதங்களை...
அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களை தொடர்ந்து ஆண்மையிழக்கச் செய்யும் மருத்துகள் குறித்த விவகாரம் சர்வதேச சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அம்பாறையில் முஸ்லிம்களின் உணவகத்தில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலந்த உணவு வழங்கப்பட்டதாகக் கூறி சிலர் அந்த உணவகத்தை தாக்கியதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏனைய சொத்துக்கள், பள்ளிவாசல் ஆகியவற்றையும் தாக்கினர். பின்னர் கண்டியில் வேறு ஒரு காரணத்தை காட்டி...
இன்று நள்ளிரவு முதல் வைபர் சமூக வலைத்தளமானது இலங்கையில் இயங்கும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர், சுதர்சன குணவர்தன தெரிவித்துள்ளார் இதேவேளை Facebook உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மீதான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தடை வருகின்ற வெள்ளிக்கிழமை நீங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது Facebook நிறுவன அதிகாரிகள் அரச அதிகாரிகளுடன் பேச்சு நடாத்த வியாழன் இலங்கை...
இனங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வகையில் பேஸ்புக் ஊடாக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 26ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அண்மையில் குற்ற விசாரணைப் பிரிவினரால் அந்த மாணவன் கைது செய்யப்பட்டிருந்தார். 18 வயதுடைய...
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் முடக்கப்பட்டிருந்த பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைதளங்களை மீள செயற்படுத்துவது குறித்து இன்று (திங்கட்கிழமை) விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலில், அரச அதிகாரிகள், இலங்கை தொலைதொடர்புகள் மற்றும் ஒழுக்காற்று ஆணைக்குழு அதிகாரிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர். சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே பேஸ்புக்,...
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து அதற்கான உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களினதும் பெண் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் கிடைக்கத் தாமதமாகிது. இந்நிலையில் தற்போது 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக...
கண்டி மாவட்டத்தில் இயல்புநிலை ஏற்பட்டுள்ளது. ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் முப்படையினரும் பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கண்டியில் கடந்த ஒரு வாரகாலமாக நீடித்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. முஸ்லிம்களின் வணிக நிலையங்கள், வீடுகள், உடமைகள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பன சிங்கள இனவாதக் கும்பல்களால்...
Loading posts...
All posts loaded
No more posts