- Monday
- February 24th, 2025

நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சராக பொறுப்பேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பதவியேற்றது. அதன்படி, நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

அரசியலமைப்புக்கு முரணாக ஆட்சிக்கவிழ்ப்பை முன்னெடுத்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கும் மெரும் மக்கள் போராட்டம் கொழும்பில் ஆரம்பமாகி நடைபெற்று வருகி்றது. அலரிமாளிகைக்கு அருகாமையில் ஆரம்பமாகிய இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். “ஜனநாயகத்தை பாதுகாப்போம் :...

நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த விசேட உரையை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்திற்குள் அண்மைய காலமாக இடம்பெற்று வந்த உட்பூசல் தீவிரமடைந்து வந்த நிலையில், நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். எனினும், அரசியலமைப்பின்...

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்தில் தமிழ் மொழிமூல பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. களனி கல்வி வலயத்திற்குட்பட்டதாக அருள் மாணிக்கவாசகம் இந்து பாடசாலை எனும் பெயரில் இந்த தமிழ் மொழிமூல பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இதுதொடர்பான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இதற்கே...

பாரத லக்ஷ்மன் படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய தீர்ப்பாயம் வழங்கிய தூக்குத் தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவருக்கு...

யுத்தத்தில் உயிர்நீத்த தமிழ் மக்களை நினைவுகூருவதில் பிரச்சினை இல்லையென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் மறைவுகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்...

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கோருவது போன்று பொலிஸ் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்க முடியாதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அது ஜனநாயகத்திற்கு ஏற்புடைய செயற்பாடு அல்லவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, பத்தரமுல்லையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....

கூட்டு எதிரணியின் “ஜனபலய” போராட்டம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்கார்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் மது அருந்தியதால் ஏற்பட்ட விளைவால் சுமார் 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 8 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில்...

தெளிவான நோக்கம் இன்றி கூட்டு எதிரணியால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தோல்வியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். பணம் மற்றும் போதைப் பொருட்களை வழங்கி ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த போராட்டத்தில் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியின் பேரணியில், மது போதையில் இருந்த...

வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் - சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அம்பாந்தோட்டையில் இடம்பெற்றுள்ளது. இருவரது உடலும் அங்குணுகொலபெலெஸ்ஸ பொது மயானத்தில் ஒரே குழியில் புதைக்கப்பட்டுள்ளது. அசாரிகம பிரதேசத்தை சேர்ந்த நாலக இரோஷன்( (Nalaka Roshan) (31 வயது) மற்றும் காலி நெழுவ பிரதேசத்தை சேர்ந்த இராஜேந்திர சிவகுமார் (Rajendra...

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது வெள்ளவத்தை பீட்டர்சன் வீதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான பிரியதர்சினி புஷ்பராஜா (வயது -46) என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது கணவர் மருத்துவர்....

ரயில் ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (திங்கட்கிழமை) முடிவுக்கு வந்துள்ளதாக ரயில் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதனால் இன்று முதல் அனைத்து ரயில் சேவைகளும் வழமைப்போன்று இயங்குமெனவும் அத்தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தொழிற்சங்கத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ரயில் இயந்திர ஓட்டுநர்கள்...

ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் பேருந்துகள் இன்று (வியாழக்கிழமை) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவசர சேவையாக இச்சேவை இடம்பெறுமென அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில்வே பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு இவ்வார அமைச்சரவையில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து நேற்று மாலை...

அமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு மஹிந்த அணியினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கடுமையாக வாதிட்டுள்ளனர். இதன்போது குறுக்கிட்டு பதிலளித்த சுமந்திரன், ஐக்கிய மக்கள்...

பொலன்னறுவையில் சில தினங்களுக்கு முன்னர் உடற்பயிற்சி, நடைபாதை வளாகத்தை அரச தலைவர் மைத்திரிபால திறந்து வைத்த பின்னர் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவை 100 தடவை பயிற்சி செய்யுமாறு மைத்திரி பணித்த காணொலி சமூகவலைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. பொலன்னறுவை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உடற் பயிற்சி வளாகமொன்றை மைத்திரி திறந்துவைத்தார். இந்த...

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் 215 சதவீததத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சம் 40 ஆயிரம் ரூபாவாகவும் பிரதி அமைச்சர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம்...

ரயில் சாரதிகள் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக ரயில் சங்கங்கள் அறிவித்துள்ளன. சம்பள முரண்பாடு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமுல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்பில் ரயில் காவலர்களும் கட்டுப்பாட்டாளர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் சமாதிகளை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மஹகரகம பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிசிர ஜயகொடி இதனை தெரிவித்தார். “முன்னாள் விடுதலை புலிகளின் குடும்பங்கள் மற்றும் விடுதலை புலிகளை நினைவுகூறும் தினங்களுக்கு நிதி வழங்கும்...

சிறுவர்கள் மத்தியில் வாய்புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர் பபா பலிஹவடன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகையிலை மற்றும் பாக்கு சார்ந்த உற்பத்திகளின் பாவனை அதிகரித்துள்ளமைக காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சுகாதார நிறுவனங்களால் புகையிலை சார்ந்த உற்பத்திகளின் விற்பனை தடை...

வடக்கில் ஆவா குழுவினர் தென் இந்தியத் திரைப்படங்களை பார்த்து, அதில் உள்ளவாறு செயற்பட்டுள்ளனர் என்று பிரதி அமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் நேற்று (17) தெரிவித்துள்ளார். வடக்கில் ஆவா குழு ஒரு பயங்கரவாத குழுவல்ல என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர்...

All posts loaded
No more posts