- Sunday
- April 6th, 2025

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விலைக்கு வாங்கியதுபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மஹிந்த ராஜபக்ஷ விலைக்கு வாங்கியிருக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார...

மக்கள் பிரதிநிதிகள் மக்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து...

நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணான வகையில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதென்றும், அதற்கெதிராக சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அதன் பிரகாரம் எதிர்வரும் 24ஆம் திகதி கண்டியிலும், 27ஆம் திகதி களுத்துறையிலும், டிசம்பர் 3ஆம்...

இலங்கை அரசியலில் நீடிக்கும் குழப்பநிலைக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே இடம்பெற்ற அமர்வுகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்தது. சிலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடந்த...

“நாடாளுமன்றில் சட்டரீதியாக எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறக்க தயாராக இருந்தேன்” என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். பலாத்காரமாக அல்லது வன்முறைகளால் என்னை வெளியேற்றுவது இலகுவான காரியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். வீரகெட்டியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் .தனைத்...

நேற்றையதினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது மகிந்த ராஜபக்ச தரப்பினர் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தினர். குறிப்பாக பொலிஸார் மீதான தாக்குதலில் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த கதிரை பொலிஸார்மீது விழுந்ததனால் பொலிஸார் சிலர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது....

நாடாளுமன்ற அமர்வுகள் 19ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வுகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நேற்று முன்தினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. ஆனால், அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகள் நேற்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது....

அவரது அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பது நிருபணமாகியுள்ள நிலையில்,நாடாளுமன்றத்தில் இன்று தாம் ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளதுடன், மகிந்த ராஜபக்சவை பிரதமராக சிறப்பு உரையாற்ற அனுமதிக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் குழப்பங்கள் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. ”புதிதாக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இச்சந்திப்பு நடைப்பெற்றுள்ளது. இதன்போது எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய இருகட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்...

இந்தியாவிற்கு கொடுத்த திட்டங்கள் ஒன்றும் முறையாக நிறைவேற்றபடாதமையினால் சீனாவிடம் அத்திட்டங்களை கையளித்தோமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியா டுடே செய்திப்பிரிவுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலைய திட்டங்கள் உள்ளிட்ட பலவற்றை ஆரம்பத்தில் இந்தியாவிற்கே கையளித்தோம். ஆனால் அத்திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை...

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. அமைச்சர்களின் செயலாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தியே இந்த முறைப்பாடு இன்று(வியாழக்கிழமை) செய்யப்படவுள்ளது....

11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டதாக எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அந்த கோரிக்கைகளில் 30 சதவீதம் நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிலிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த 11 அம்ச கோரிக்கைகளில் 30 விகிதம்...

ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தெவரப்பெரும மற்றும் கேஷ விதானகே ஆகியோரே சற்றுமுன்னர் அலரி மாளிகைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில்...

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அன்றையதினம் முற்பகல் 10 அளவில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு தயாரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதன் காரணமாக நாடாளுமன்ற செயற்பாடுகளை...

கட்சி மாறுபவர்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்படும் என நாடாளுமனற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்க தரப்பிற்கு மாறுவதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (48 கோடி இலங்கை ரூபாய்) பேரம் பேசப்பட்டதாக ஐ.தே.க....

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். எனினும் கோத்தாபய – ரணில் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்தத்...

பிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலானபுதிய அரசாங்கம் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வளிப்பதுடன் முன்னாள் போராளிகளுக்கான நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உதவிபுரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த...

பாராளுமன்றத்தை நவம்பர் 5 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைகழக பேராசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சாதாரணமாக 5 ஆம் திகதி கூடப்படும் பாராளுமன்றத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையான 11 நாட்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும்...

நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு உரிய ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது பிரதமருக்கு உரிய ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் இடையூறாக விளங்கமாட்டார் என்றும் சபாநாயகர் அலுவலக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் வர்த்தமானியில்...

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். ஜனாதிபதியின் செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குரிய காரணத்தையும் அவை தொடர்பாக ஜனாதிபதி என்ற வகையில் முன்னெடுத்த...

All posts loaded
No more posts