- Saturday
- February 22nd, 2025

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிதாரி பயன்படுத்தியதாக கூறப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கி நீதிமன்றத்தில்...

இந்த வருடம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார். பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அர்ச்சுனா இராமநாதன் அமர்ந்து இனவாதம் குறித்து...

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியிற்கு மேலாக நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது இன்று காலை மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியின் மத்தியில் தாழ் அமுக்கமாக மாற்றமடையும். இந்த தாழ் அமுக்கமானது மட்டக்களப்பில் இருந்து சுமார் 500 கிலோமீற்றர் தொலைவில் காணப்படும். இது மேலும் விருத்தியடைந்து நாட்டின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லும்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்கச் செய்துள்ளது. இது உள்ளூர் ஊடகத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல சிங்கள மொழி செய்தி வாசிப்பாளர்களான சமிந்த குணரத்ன மற்றும் நிஷாதி பண்டாரநாயக்க ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிக்கும் வகையில்...

வெலிக்கடை பொலிஸாரிடம் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தமிழ் பெண் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வீட்டு பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், அந்த வீட்டில் பொருட்களை திருடிச் சென்றதாக செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டார். பதுளை பகுதியைச் சேர்ந்த 45...

பேருவளையில் இன்று (30) சிறியளவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் 3.7 ரிச்டர் அளவில் சிறியளவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. களுத்துறை, பேருவளை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நிலநடுக்கத்தை...

புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் உதவிச் செயலாளரும் பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியுமான பாலித ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். சிறார்கள் மத்தியில் தற்போது பரவி வரும்...

பல நாடுகளில் பரவலாகக் காணப்படும் குரங்கம்மை அறிகுறிகளுடன் கூடிய நோயாளி ஒருவர் முதன்முறையாக இலங்கையில் கண்டறியப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் பிரிவின் விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹா தெரிவித்துள்ளார். கடந்த முதலாம் திகதி டுபாயில் இருந்து இலங்கை வந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். காய்ச்சல், தோலில் கொப்பளங்கள், வீங்கிய...

அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த போது அவர் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒன்றிணைந்து நிற்போம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் நேற்று முனதினம்...

மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகள், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். மருந்துகளை இறக்குமதி செய்யும் போது கவனமாக ஒழுங்குபடுத்தும் முகவர் நிலையங்கள் நடைமுறையில்...

இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. என்ற போதும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு குறித்த அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று ஆரம்பித்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019, 2020 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் விடுதலை புலிகள் மீளுருவாக்கம் என்ற...

நாட்டில் உள்ள 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு நாளை காலை 7 மணிவரை செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. கொழும்பு, திருகோணமலை, அனுராதபுரம், புத்தளம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, குருநாகல், கம்பஹா,...

எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். அத்துடன், டொலர் நெருக்கடி காரணமாக கோதுமை மா இறக்குமதியை...

367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், மின் கேத்தல்கள், உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை மாத்திரம் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபம் கடந்த ஜுன் மாதம் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டது. அதற்கமைய, நாளை மறுநாள் முதல் அனைத்து ஊழியர்களும் வரவழைக்கப்பட்டு அரச நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என பொதுநிர்வாக,...

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் பழைய விலை – 87 ரூபாய் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலை – 340 ரூபாய்

செப்டம்பர் மாதம் இறுதியில் இருந்து இரண்டரை மில்லியன் தொன் நிலக்கரி கொண்டுவர முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் 10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பொரலஸ்கமுவ 43 ஆவது படையணி காரியாலலயத்தல் புதக்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 96 பேர் நேற்று (ஞாயிற்க்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதற்கமைய இதுவரை நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 668,012ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு ஆயிரத்து 113 பேர் வைத்தியசாலைகளில்...

All posts loaded
No more posts