- Monday
- December 23rd, 2024
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் முதலாம் படி மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்திலும் அதன் தாக்கம் ஏற்படும் என்று யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.யமுனானந்தா எச்சரிக்கை செய்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- வடமகாணாத்தில் கொரோணாவின் இரண்டாம் அலை பரவகடகூடிய ஏது நிலை உள்ளது. மக்கள்...
ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கான அனுமதிக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. குளங்கள் மற்றும் கடலோரங்களில் தந்தையை இழந்த உறவுகள் அவர்களுக்கான வருடாந்த நினைவு கூரலையும் அதற்கான பிதிர்க் கடன்களையும் நிறைவேற்றி வருவது வழமை. ஆனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால்...
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேற்கண்ட...
இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை- மஹரகம வைத்திய சாலை ஊடாக காலிக்கு புதிய போக்குவரத்து சேவை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். குறித்த புதிய பேருந்து நேற்று (திங்கட்கிழமை) இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மஹரகம வைத்தியசாலைக்கு செல்வோரின் தேவை கருதியே பிரதானமாக குறித்த புதிய பஸ்...
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் சிறப்பு சுகாதாரக் குழு நியமிக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை பாடசாலை சுகாதார மருத்துவ அதிகாரி நித்தியானந்தா தெரிவித்தார். கோவிட் – 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த 105 நாள்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் பாடசாலை அதிபர்,...
வாடிக்கையாளர்கள் மின்சாரக் கட்டணங்களை செலுத்தும்போது இறுதி மாத மின் கட்டணப் பட்டியல் சரியானது என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பாவனையாளர்கள் நுகரும் மின்சார அலகுகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே இறுதிமாத மின் கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, கடந்த...
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் ஒருசிலரின் பொறுப்பற்ற செயலால் இலங்கையில் கொரோனா இரண்டாம் கற்ற அலையும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்தார். அத்துடன் இந்தியாவில் இந்த நோய் வேகமாக பரவி வருவதால் இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா...
யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய்த் தொற்றுடையவர்கள் 90 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், மேலும் 20 நோயாளர்கள் சமூகத்துடன் இணைந்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்....
வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இன்று வெள்ளிக்கிழமை முதல் வணக்கத் தலங்களில் சமய வழிபாடுகளை கடைப்பிடிக்க முடியும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வணக்கத் தலங்களில் ஆகக்கூடுதலாக 50 பேர் மட்டுமே சமய நிகழ்வுகளில்...
நாடுமுழுவதும் வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜூன் 4,5ஆம் திகதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் நாளை மறுதினம் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படும். அத்தோடு தினமும் அதிகாலை 4 மணிக்கு தளர்தப்படும் ஊரடங்குச்...
இன்றையதினம் நாடுமுழுவதிலும் ஊரடங்கு சட்டம் பகல் வேளையில் தளர்த்தப்படுகிறது. இக்காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத போதிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நாட்டு மக்களுக்கு அறிவித்தார் . ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படட போதிலும் அத்தியாவசிய தேவைகளுக்கும் நிறுவனங்களில் கடமையாற்றுவோர்...
கொரோனா வைரஸை தடுப்பதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் ஊடாக வைரஸ் தொற்றிலிருந்து எம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என திருகோணாமலை – நிலாவெளியில் அமைந்துள்ள கிராமிய சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மஹாதேவன் நிரஞ்சன் தெரிவித்தார். உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் இலங்கைக் கிளையினால்...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமேயானால் குடியிருப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு யாழ்ப்பாணம் பிராந்திய தொற்றுநோயியலாளர் மருத்துவர் எஸ்.மோகனகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் டெங்கு நோய் தொடர்பாகவும்...
ஏப்ரல் 16 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர, அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விதிமுறைகள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வழங்கிய அனைத்து சாரதி...
அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18ஆம் திகதி) அதிகாலை 02.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில்...
யாழ்.மாவட்டத்தில் இப்போதும் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயத்திற்குள்ளேயே இருக்கின்றது. நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் நோய் தொற்றுக்குள்ளவர்கள் எமது மாவட்டத்திற்குள் நுழைய வாய்ப்புக்கள் உள்ளது. மக்கள் விழிப்பாக இருப்பது நல்லது. மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து ஊடகங்களை சந்தித்து மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற...
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத நபர்கள் மீது இன்று (புதன்கிழமை) முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக புலனாய்வு துறையினரும் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், குறித்த நடைமுறை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். அந்தவகையில்...
கையடக்க தொலை பேசியை அடிப்படையாகக்கொண்ட பணபரிமாறலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுவது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடனிருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பாதகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு
யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நல்லிணக்க மையம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த சில...
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வரவுப் பதிவேட்டில் கையொப்பமிடுவதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட கோரோனா வைரஸ் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல் இடம்பெற்றது. இதன்போது...
Loading posts...
All posts loaded
No more posts