- Monday
- December 23rd, 2024
ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் அவர்களின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்ய சலுகை வட்டி விகிதத்தில் கடன் உதவியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்தக் கடன் திட்டம் 03 பிரிவுகளின்...
வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, மருதானை பிரதேசத்தின் போலியான முகவரி ஒன்றை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மருதானை பிரதேசத்தில் குறித்த முகவரியில் அவ்வாறான நபர் ஒருவர் வசிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது....
கடந்த இரண்டு கிழமைகளுக்குள் மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு பொருள்கள் வாங்குவதற்கு சென்றவர்கள் தங்கள் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினருடன் (சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர்) அல்லது கிராம சேவை அலுவலகரிடம் தொடர்புகொண்டு தம்முடைய தகவல்களை தெரிவிப்பதுடன் சமூகத் தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையும் செய்துகொள்ள முடியும். இவ்வாறு வடமாகாண...
கோவிட் – 19 நோய்த் தொற்றுக்கு நன்மை பயக்கும் என்று கூறி, உள்நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருள்களுடன் இணையத்தில் புழக்கத்தில் இருக்கும் பல்வேறு மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சுதேச வைத்திய ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு பொதுமக்களை கேட்டுள்ளது. இதுதொடர்பில் சுதேச வைத்திய மருந்துகளின் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர வெளியிட்டுள்ள...
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வழிகாட்டுதல்களை வெளியிட்டு, பண்டிகை காலங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு அவற்றைப் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார். பண்டிகை காலங்களில் பயணத்தை குறைக்க பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதி...
கனரக வாகன சாரதி உரிமத்தை வழங்கும்போது விண்ணப்பதாரர் போதைக்கு அடிமையானவரா என்பதை அடையாளம் காண மருத்துவ சான்றிதழில் ஒரு பரிசோதனையை மேலதிமாகச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பயணிகள் போக்குவரத்து முாகமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த புதிய திட்டம் விரைவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்....
காலநிலை சீரின்மையால் யாழ்ப்பாணம் மாவட்டம் பாதிப்பினை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்ப்படுள்ளமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு கோரியுள்ள மாவட்ட செயலர் க. மகேசன் , கோவிட் -19 நோய் தொடர்பிலும் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கோரியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்திந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;...
வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருகின்றமையினால், இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் தெரிவித்திருந்தார். வவுனியா வைத்தியாசாலையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கே.சந்திரகுமார் மேலும் கூறியுள்ளதாவது, “உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் முதலாம்...
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் கீழ் கலைஞர்களுக்கான விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதியை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டமாக மேடை நாடகத் துறையினருக்கு காப்புறுதி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை 2020ஆம் ஆண்டிலேயே யதார்த்தமாக்கும் வகையில் அறிமுகப்படுத்தும் இந்த காப்புறுதி திட்டம் புத்தசாசன சமய மற்றும் கலாசார...
வணிக இடங்களுக்குச் செல்லும்போது தங்கள் சொந்த பேனாவை எடுத்துச் சென்று பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். இதன்மூலம் அவர்கள் தங்கள் விபரங்களை நுழைவாயிலில் உள்ள பதிவு புத்தகத்தில் பாதுகாப்பாக பதிவு செய்யமுடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன் சொந்த பேனாவை எடுத்துச் சென்று இவ்வாறு பயன்படுத்துவது...
தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்கள், தீப்பற்றக்கூடிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்திவிட்டு, விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும்பாலானோர் அல்ஹகோல் அடங்கிய கை கழுவும் திரவத்தை அதிகம் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகையை...
“யாழ்ப்பாணம் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு முற்பதிவுகளை செய்து தமக்கான சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்” இவ்வாறு மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது; தற்சமயம் எமது அலுவலகத்தினால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் புதிய மோட்டார் சைக்கிள்களிற்கான உரிமை மாற்றம்...
நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பின்னர் வேறு மாகாணங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தோர் தற்போது தங்கியிருக்கும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பதிவு செய்யவேண்டும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களை வீட்டில் சுயதனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்துவது தொடர்பான முடிவுகளை அவர்கள் புறப்பட்டு வந்த இருந்து வந்த...
உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தற்பொழுது கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் காலத்தில் எமது பிரதேசத்தில் காய்ச்சல் நோயுடன் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள் இந்நிலையில் காய்ச்சல் எவ்வாறு வருகிறது என...
அரச வைத்தியசாலைகளில் கிளினிக் நடைமுறையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு போதுமான மருந்துகளை வீடுகளுக்குக் கொண்டு சென்று வழங்க இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து சுகாதார அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் (05.11.2020) நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து மாதந்த கிளினிக்கில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் மீண்டும்...
கோரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மிகக் கடினமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுகள் விநியோகம் தொடர்பாக உரிய அக்கறை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது. வடக்கு – கிழக்கு மட்டுமன்றி நாட்டின் சகல இடங்களிலும் பொதுமக்களின் அன்றாட உணவாக வெதுப்பக உற்பத்திகளான பாண், பணிஸ், கேக் போன்றன பயன்படுத்தப்படுகின்றன....
சுவாச கோளாறினால் அவதியுறும் நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சுகாதாரப் பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. சுவாச கோளாறு உள்ள நோயாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமாயின், நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால் அவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில்...
கொழும்பில் இருந்து இருந்து வந்த கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவானுக்குச் சென்ற பஸ்ஸில் பயணித்துள்ளனர். அந்த பஸ்ஸில் பயணித்த ஏனையவர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கடந்த 25ஆம் திகதி இரவு கொழும்பில் இருந்து புறப்பட்ட தொற்றார்கள், மறுநாள் அதிகாலை 26ஆம் திகதி...
கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டால் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முன்னர் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. விசேட அறிப்பொன்றின் மூலம் சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, 011-7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து கொரோனா தொற்று தொடர்பாக வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பாக உரிய அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் அபாயத்தில் உள்ள மாவட்டங்கள் குறித்து அதிகாரிகள் இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டினார்....
Loading posts...
All posts loaded
No more posts