- Monday
- February 24th, 2025

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால், யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகளின் குடும்ப விபரங்கள், தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் விபரங்கள் என்பன தற்போது திரட்டப்பட்டுகின்றன. இதற்கான படிவங்களை ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள கிராம அபிவிருத்தி அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும்....

இடைக்கால வரவுசெலவு திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை சரியான முறையில் கிடைக்காமை தொடர்பான முறைப்பாடுகளை நுகர்வோர் அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யலாம். 0112 399 146, 0771 088 922 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக ,இம்முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஆலோசனைக்கமைய இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களையும் பதிவு செய்யும்படி தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு அனுப்பி வைத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தமிழ் கைதிகளினதும் விவரங்களை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர்...

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையாயின் அது தொடர்பில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றிடம் முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 0716027912 – 0788714726 – 0777205137 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இது...

காணாமல்போன உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம் முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் கவனீயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் அரசு மற்றும் அரச ஒட்டுக்குழுக்களினால் கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரியும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அண்மைக்காலங்களில் வடக்கு,கிழக்கு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது....

பாடசாலையில் கல்வி கற்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து செலவு கொடுப்பனவாக மாதாந்தம் 750 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சின் அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் சி.பரந்தாமன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2015ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட பிரேரணையின் பிரகாரம் ஜனவரி...

வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால், வடமாகாண அரச முகாமைத்துவ உதவியாளர் III ஆம் தரத்துக்கான போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மார்ச் 2015 இல் பரீட்சைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வி்ண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி பெப்ரவரி 25 ஆகும்.

வடமாகாணத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்கள் தமக்குரிய விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 10ஆம் திகதி அந்தந்த பிரதேசங்களிலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும் என வடமாகாண மீன்பிடி போக்குவரத்து மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பா.டெனீஸ்வரன் திங்கட்கிழமை (02) தெரிவித்தார். இது...

2015 - 2016 ஆம் ஆண்டுகளுக்கான ஆங்கில மொழி மூலமான இந்தியாவின் காந்தி புலமைப்பரிசில் கற்கை நெறிக்கு இலங்கை உயர் கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 22 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த இலங்கை மாணவர்களிடமிருந்து மேற்படி விண்ணப்பங்களை உயர் கல்வி அமைச்சு அதன் இணையத்தளத்தினூடாக கோரியுள்ளது. எனவே விண்ணப்பங்களை www.mohe.gov.lk எனும் இணையத்தளத்தினூடாக பிரவேசித்து பெற்றுக்...

இதுவரையில் மின்கட்டண நிலுவை செலுத்தாமல் இருப்பவர்கள் தங்களுடைய மின்கட்டண நிலுவையை சனிக்கிழமை (31)ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் யாழ்.பிரதேச பொறியியலாளர் ச.ஞானகணேசன் வெள்ளிக்கிழமை (30) கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மின்கட்டண நிலுவையை செலுத்தாமல் பலர் உள்ளனர். அவர்கள் தங்களுக்குரிய மின்கட்டணத்தை...

தற்போது இலங்கையின் பல்வேறு முகாம்களிலும் சிறைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள - வடமாகாணத்தைச் சேர்ந்த - அரசியல் கைதிகளினதும் உறவினர்கள் நேற்று வியாழக்கிழமை (29) யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி, 'தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர் ஒன்றியம் - வடமாகாணம்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். இந்த அமைப்பின் தலைவராக கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி செல்லையா பவளவள்ளி (தொலைபேசி இலக்கம் 0774823465),...

உயர் தரக் கல்வியைத் தொடர்வதற்கு க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் கணித பாடம் கட்டாயமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயர்தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளவர்களின் விகிதாசாரத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு...

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கரமெல் அப்பிள் பழங்களை எவரும் கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அவற்றை எந்த வியாபாரிகளும் விற்பனை செய்யவும் கூடாது என்றும் அறிவித்துள்ள சுகாதார அமைச்சு இறக்குமதியாளர் அவற்றை மீள எடுத்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஒருவகைக் கிருமி தொடர்பான நோய் கட்டுக்கடங்காமல் பரவியுள்ளதனால் இலங்கையில் அது பரவுவதைத் தடுக்க இந்த...

2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவிக்கின்றது. எனவே தமது பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்புவோர் உடனடியாக தத்தமது விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்படுகிறன்றனர். இம்முறை மேற்படி பரீட்சைக்கு 2...

எரிபொருள் விலை குறைப்பின் பின்னர், கூடிய விலையில் எரிபொருள் விற்பனை செய்யும் சம்பவங்கள் ஏதும் இடம்பெற்றால், அது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட முறைப்பாட்டு பிரிவுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் மின்வலும் மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று கேட்டுக்கொண்டுள்ளது. அவசர தொலைபேசி இலக்கம் - 0115 243 243 அல்லது தொலைபேசி இலக்கங்கள் -...

வடமாகாணத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பினை முடித்த வேலையற்ற பட்டதாரிகள் நாளை மறுதினம் காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள பழைய பூங்கா முன்றலில் அமைதியான வழிமுறையில் ஒன்று கூடவுள்ளனர். குறித்த ஒன்றுகூடல் எந்தவொரு அரசியல் பின்னணிகளும் இன்றி வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள் மட்டும் அடங்கிய மகஜர்களை வடமாகாண முதலமைச்சர்,வடமாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்...

வடக்கு, கிழக்குக்கு கொண்டு செல்லக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்த சில பொருட்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதுடன் சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்துக்கு யுத்த உபகரணங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கொண்டு...

வெளிநாட்டவர்கள் வடக்கு மாகாணத்துக்கு வருபவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டும் என விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபார சிறிசேன தலைமையில் இடம்பெற்ற முதலாவது பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலேயே இந்தக் கட்டுப்பபாடு நீக்கப்பட்டது. வடக்குக்கு வரும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இளமாணி ,முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் இந்தியாவில் தொடர்வதற்காக, கலாசார உறவுகளுக்கான இந்தியப்பேரவையின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கையைச்சேர்ந்த 180 பேருக்கு உயர்கல்வி புலமைபரிசில்களை வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது. மருத்துவம் தவிர்ந்த ஏனைய துறைகளில் உயர்கல்வியை தொடர்வதற்காக இவை வழங்கப்படுகின்றன.இலங்கை அரசின் உயர் கல்வி அமைச்சின் ஊடாகவே பயனாளர் தெரிவுகள் இடம்பெறும். இலங்கை அரசின்...

பாப்பரசரின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு நாளை மறுதினம் 14 ஆம் திகதி அரச வங்கி பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெறும் பிரதான தேவஆராதனையை முன்னிட்டு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

All posts loaded
No more posts