- Monday
- February 24th, 2025

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது, ஏப்ரல் 02ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு பயணிப்பது, மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் ஏற்கெனவே தெரிவித்தனர். எனினும் இத்திட்டம்...

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் இன்று முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒழுங்குத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார். இரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு 250,...

புனர்வாழ்வு அதிகார சபையின் நடமாடும் சேவை எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளதாக சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.வதூர்தீன் தெரிவித்தார். இந்நடமாடும் சேவையில் கடந்த காலத்தில் தென்மராட்சி பிரதேசத்தில் தமது சொத்துக்களை இழந்து பாதிப்படைந்தவர்கள் தொடர்பில் கவனம் செலத்தப்படவுள்ளதாக...

யாழ்.போதனா வைத்தியசாலையின் பாலியல் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவின் புதிய தொலைபேசி இலக்கம் 0212217756 என மாற்றப்பட்டுள்ளதாக பாலியல் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்திய அதிகாரி தாரணி குருபரன் வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடமாகாணத்தில் பாலியல் தொற்று நோய் அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ்.போதனா...

5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் பாவனையின் போது விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொதுக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் 5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த போலி நாணயத்தாள்களின் புழக்கம் தற்போது நாடு முழுவதிலும் பரவலாக இருந்து வருவதால்,...

இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான ஆறு நிபந்தனைகள் விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட உள்ளது. அதற்கமைய, தொழில் தகைமைகள் அல்லது கல்வித் தகைமைகள் வைத்திருத்தல். இலங்கையில் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான சொத்துக்களை வைத்திருத்தல். இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கியொன்றில் 2.5 மில்லியனுக்கு...

இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தடை செய்ய சிவில் நிர்வாக, கல்வித்துறை, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. இது அரசியலமைப்பு உரிமையாகும். இதை தடை செய்வது சட்ட விரோதமாகும். இந்த சட்டபூர்வ உரிமை நாடு முழுக்க அமுலாகும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி...

வெளிநாடுகளுக்குச் சென்று காணாமற் போனவர்களின் உறவினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் அநாமதேய நபர்கள் காணாமற் போனோரின் பெயருக்கு பெரும் தொகைக்கான காசோலை வந்துள்ளதாக கூறி ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் கவனமாகச் செயற்படுமாறு அறிவுறுத் தப்படுகிறது. கடந்தவாரம் இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த கணக்கொன்றுக்கு 25ஆயிரம் ரூபாவை வைப்பிலிட்டால் தங்களுக்குரிய 4...

14.03.2015 காலை 6.00 தொடக்கம் மாலை 4.00 மணிவரை துவிச்சக்கர வண்டிகளையோ மோட்டார் சைக்கிள்களையோ வேறு ஏதாவது வாகனங்களையோ உங்கள் வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் முன்னால் நிறுத்திவைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். குறிப்பு: இதனை கருத்தில் கொள்ளாது நிறுத்திவைக்கப்படும் வாகனங்கள் பெரிய வாகனத்தில் ஏற்றிச்செல்லப்படும். அவ்வாறு ஏற்றும் போது வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல....

முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியைப் பொறுவதற்கு இதுவரையில் 40 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்தப் பதிவுகளை மேற் கொள்வதற்கான கால எல்லை இந்த மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் பதிவுகளுக்கான காலம் முடிவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. உதவிகளைப் பெறப் பதிவு செய்பவர்களுக்கு...

யாழ்.மாவட்ட உணவகங்களில் கடந்த காலத்தில் விற்பனை செய்ததை விட 20 வீதம் விலை குறைத்து உணவுவகைளை விற்பனை செய்ய அனைத்து உணவகங்களினதும் உரிமையாளர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் - இவ்வாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் கழக அலுவலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள்...

ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இசையை கேட்பதால் கேட்கும் திறன் பாதிப்படைவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆகவே ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் இசையை கேட்பதை தவிர்ககுமாறு அந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இசையை அதிகமாகவும் பெரிய சத்தமாகவும் கேட்பதால் 1.1 பில்லியன் இளைஞர்கள் தமது கேட்கும் திறனை நிரந்தரமாக இழக்கும்...

காணாமற்போனவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து நாளை புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை யாழ். அரச செயலகம் முன்பாக நடத்தவுள்ளனர். அத்துடன் ஜனாதிபதியிடம் மனு ஒன்றையும் தாம் கையளிக்கவுள்ளனர் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களையும், காணாமற் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த அனைவரையும் பங்கேற்குமாறும் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை வடபகுதியில் இச்சங்கத்தினால்...

மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு பயணிப்பது, மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதன் காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ்.மாவட்டத்தில் 2014 – 2015ஆம் ஆண்டு காலபோக நெற்செய்கையில் செய்கை பண்ணப்பட்ட நெல், கூட்டுறவுச் சங்கம், நெல் சந்தைப்படுத்தும் சபை ஆகியவற்றினால் எதிர்வரும் சனிக்கிழமை (28) முதல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நெல் சந்தைப்படுத்தும் சபையால் சாவகச்சேரி பகுதியிலும், கூட்டுறவுச் சங்கத்தால் பண்டத்தரிப்பு,...

வீடுகளிலுள்ள எலிகளைக் கொல்வதற்காக இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கிய தரமற்ற எலிப்பாஷணங்களால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசநோய்ப் பிரிவின் தலைவரும் இயல்பியல் நோய் நிபுணருமான வருண குணதிலக்க, இவ்வாறான எலிப்பாசனங்களை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார். விதவிதமான நிறங்களில் தயாரிக்கப்படும் இந்த எலிப்பாசனங்களை வீட்டின் பல்வேறு...

ஐ.நா சபையின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரி பல்கலைக்கழக சமூகத்தினால் மேற்கொள்ளவுள்ள மாபெரும் பேரணிக்கு தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா சபையில் விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட இருந்தநிலையில் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. எனவே விசாரணை அறிக்கையை...

கர்ப்பிணிப் பெண்கள் பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் தாய்மார்களால் பிரசுவிக்கப்படும் குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளமையே இதற்குக் காரணம் என, வைத்தியர் ரத்னசிறி ஹேவாகே குறிப்பிட்டுள்ளார். நோர்வே - ஒஸ்லோ பல்கலைக்கழகம் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. 48,000 தாய்மார்களிடம்...

சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைதியான முறையில் பேரணியில் ஒன்று திரளுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் யாழ். மாவட்ட தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான சந்திரலிங்கம் சுகிர்தன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (20) ஊடகங்களுக்கு அவர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அவருடைய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை...

கீழுள்ள படத்தில் இருப்பவரை கண்டால் உடனடியாக பொலிஸூக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இணையத்தளங்களின் ஊடாக பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் தேடப்பட்டுவருகின்றார். குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே இந்த சந்தேகநபரை கைதுசெய்துசெய்வதற்கு தேடிவருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், அதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர். திஸாநாயக்க முதியன்செலாகே சுஜித் நிலந்த என்ற...

All posts loaded
No more posts