- Thursday
- December 26th, 2024
இலங்கைத் தீவில் AH1N1 இன்புளுவென்சா வைரஸ் தொற்று அபாயம் உள்ளதாக எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் தற்போது கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. அதனால் AH1N1 வைரஸ் மக்கள் மத்தியில் பரவி வருவதாக தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற நோய்...
அரச ஊழியர்களுக்கு பகல் உணவுக்காக வழங்கப்படும் இடைவேளை நேரம் 30 நிமிடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகேயினால் சகல அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இவ்விசேட சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்களுக்கு சிறந்த, வினைத்திறன் மிக்க அரச சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம்...
வடமாகாணத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்படும் கொடுப்பனவை பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் பிரதேச செயலக சமூக சேவைகள் அலுவலர்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,500 ரூபாயும், கழுத்துக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,000 ரூபாயும் மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டம் வடமாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள சமூக சேவைகள்...
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கு கீரிமலை புனித தீர்த்தக்கரையில் உள்ள குழந்தைவேல் சுவாமிகள் ஆலயத்தில் 17, 18, மற்றும் 19 ஆகிய திகதிகளில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சைவ மகா சபையால் வெள்ளிக்கிழமை (15) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த...
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும் புதிய கற்கை நெறியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அம்பலம் புஸ்பநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 2014 - 2015 ஆம் கல்வியாண்டில் வியாபார முகாமைத்துல இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும்...
எதிர்வரும் சனிக்கிழமை (16), மற்றும் ஞாயிற்றுக்கிழமை (17) களில் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை இடம்பெறாது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையில் புகையிரதப் பாதையில் திருத்த வேலைகாரணமாக இரு நாட்களும் அநுராதபுரம் வரையும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையே இடம்பெறவுள்ளது.
நாட்டிலுள்ள 18 தேசிய கல்வியற்கல்லூரிகளுக்கு 2015 ஆம் கல்வியாண்டுக்கான 32 வகையான மூன்றாண்டு கால ஆசிரியர் கல்வி தொடர்பான சேவை முன்தொழிற்பயிற்சிகளைப் பயில்வதற்கு தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து கல்வியமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது. 25 வயதிற்குட்பட்டு 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தேவையான இசட் புள்ளிகளைப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 32 வகையான பாடநெறிகளுக்கு தேவையான...
யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள போதைப்பாவனை, வாள்வெட்டுக் கலாசாரம் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். குடாநாட்டு நிலைமைகளை ஆராயும் விசேட கூட்டம் யாழ். அரச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத்...
2011ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் நடைபெற்ற ஆசிரிய கலாசாலைப் பரீட்சைகளில் சித்தியடையத் தவறிய ஆசிரியர்களுக்கான, மீள்பரீட்சை ஒன்றை இவ்வருடத்தில் நடத்துவதற்குப் பரீட்சைத் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கோப்பாய் ஆசிரிய கலாசாலையூடாக ஏற்கெனவே பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைய தவறியவர்கள், நூன சித்தி பெற்றவர்கள் ஆகியோர் மீள் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் பொருட்டு எதிர்வரும் 30க்கு முன்னர் கலாசாலை அதிபருடன்...
செரிபரல் பால்சி லங்கா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிகிச்சை, சக்கரகதிரை வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் மே மாதம் சனிக்கிழமை (02) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் நடைபெறவுள்ளது. யாழ். கச்சேரிக்கு அண்மையிலுள்ள சுண்டுக்குளியிலுள்ள ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தியே இந்த...
கடவுச்சீட்டில், அதன் உரிமையாளரது கைவிரல் அடையாளத்தைப் பதிவதை கட்டாயமாக்கும் சட்டமூலமொன்று, இன்று திங்கட்கிழமை (27), நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, கடவுச்சீட்டொன்றுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரி அல்லது கடவுச்சீட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரியானவர், தனது கைவிரல் அடையாளத்தை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் வழங்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின்...
இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. 18 வயது முதல் 28 வயது வரையான திருமணமாகாத க.பொ.த. சாதாரண தர பரீட்சையை கணிதம் தாய் மொழி உட்பட்ட இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் சித்தியடைந்த ஆகக்குறைந்த 05 அடி 04 அங்குல உயரம் கொண்டவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்...
தமிழ், முஸ்லிம், சிங்கள கலைஞர்களுக்கு கலாபூஷணம் விருதுகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கலாசார அலுவல்கள் திணைக்களம் கோரியுள்ளது. இதன்படி தமிழ் கலைஞர்களை தெரிவு செய்யும் பொறுப்பு இந்து சமய கலாசார திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சிற்பம், ஓவியம், வாய்ப்பாட்டு, நடனம், தவில், நாதஸ்வரம், நாடகம், சினிமா, நாட்டுப்புறவியல், இலக்கியம், நாட்டுக்கூத்து, ஊடகத்துறை, போன்ற பல்வேறு துறைகளில் மிகவும் சிறப்புறச்...
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக குறுந்திரைப்பட போட்டியொன்றை நடத்த சுற்றாடல் இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. இயற்கை வரைந்த ஓவியம் என்ற தலைப்பில் இக்குறுந்திரைப்பட போட்டி நடத்தப்படவுள்ளது. அதிகூடியது 5 நிமிடங்களில் சுற்றாடல் தொடர்பில் இக்குறுந்திரைப்படங்களை தயாரித்து அனுப்ப முடியும். ஒரு போட்டியாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை அனுப்ப முடியும். ஒரு டிவிடியில்...
வடக்கு மாகாணசபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிதி நிறுவனங்கள் மாலை 5 மணிக்குப் பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை, வடக்கு மாகாண சபை இது குறித்த தீர்மானம் ஒன்றை சபை அமர்வின்போது...
யாழ்.நகரிலுள்ள தனியார் நிறுவனங்களினூடாக பொதிகளை பரிமாறுவதில் தவறுகள் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட இணைப்பதிகாரி வசந்தசேகரன் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அண்மையிலும் இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவ்விரண்டு முறைப்பாடுகளும் யாழ்.நகரிலுள்ள தனியார் பொதிகள் சேவைகள் மீதே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த வகையில்...
யாழ்.மாவட்டத்தின் தனியார் துறையில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்கு இளைஞர், யுவதிகளை சேர்த்துக்கொள்ள யாழ்.வணிகர் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் யாழ். வணிகர் கழகத்திடம் விண்ணப்பிக்க முடியும் என வணிகர் கழகத்தின் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். தனியார் துறைகளில் கணனி இயக்குநர், விற்பனையாளர்கள், வெளிக்கள அலுவலர், கணக்குப் பதிவாளர்கள், லிகிதர்கள், விற்பனை...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான கடைகள், இரவு விடுதிகள் மற்றும் இறைச்சிக் கடைகள் எதிர்வரும் மே மாதம் 03, 04ஆம் திகதிகளில் மூடப்படும் என்று மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. பௌத்த மக்களால் கொண்டாடப்படும் வெசாக் வாரத்தை முன்னிட்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை ஒரு வார காலம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு புலம்பெயர் தமிழர்களையும், தாய்த்தமிழர்களையும் முன்வருமாறு வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மே...
வடக்கு மாகாணத்திலிருந்து இந்தியா சென்று பட்ட மேற்படிப்புக்கள், கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்தவர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது யாழ். இந்தியத் துணைத்தூதரகம். இதுகுறித்து தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: வடமாகாணத்திலிருந்து சென்று இந்தியாவில் இந்திரவியல், கட்டடவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பாரம்பரிய கலைகள் உட்பட அனைத்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகளை அல்லது...
Loading posts...
All posts loaded
No more posts