- Tuesday
- February 25th, 2025

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பொதுமக்களுக்கு தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்த முறைப்பாடுகளை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்க முடியும் என, பொலிஸ் தலைமையகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேட்புமனு வழங்கிய தினத்தில் இருந்து தேர்தல்...

1980 களில் நிலவிய பனிப்போர் மற்றும் புவிசார் உலக அரசியலை அப்போதைய போராளித்தலைமைகள் சரியாகவும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் கையாண்டதால், எமக்கான ஒரு மிக முக்கியமான வரலாற்று பிரகடனம் ஒன்றிற்கு செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. 1976 இல் வட்டுக்கோட்டை பிரகடனம் செய்து , விஞ்ஞாபனத்தில் அதற்கு 1977 இல் ஆணை கேட்டுவிட்டு, பின்னர் அரசியல் தலைமைகள் இணங்கிபோய்...

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவதற்கான தடை உத்தரவை செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.

பாடசாலைகளுக்கு அண்மையில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் தொடர்பில் பெற்றோர், ஆசிரியர் கவனமாக இருக்கவேண்டும். சந்தேகத்துக்குரிய இனிப்பு வகை விற்பனை செய்வது தொடர்பில் அறியப்படுமாயின் 1977 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யலாம் என நுகர்வோர் அதிகாரச்சபையின் பணிப்பாளர் சந்திரிக்கா திலக்கரத்ன தெரிவித்துள்ளார். டோரா (Dora) என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இனிப்பு வகைகளை உட்கொண்ட மஹாரகம பிரதேச...

யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 28 ஆண்டு கால மனித நேய சேவை நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை காலை 09 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பூநகரி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள முழங்காவில் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் விசேட நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் போது மருத்துவ உபகரணங்கள்...

தலைக்கவசம் அணியாமல் வேகக்கட்டுப்பாட்டு இல்லாமல் மோட்டார் வாகனத்தில் வந்த இளைஞன் குருநகர் சேமக்காலைக்கு திரும்பு வளைவுடன் மோதுண்டதில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 8 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவத்தில் செல்வராசா றுபின் வயது 19 என்பவரே உயிரிழந்தவராவார். மேலும் இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணியாமல் எவர் சென்றாலும் எக்காரணம் இல்லாமல் உடனடியாக அவர்கள்...

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காணாமற்போன உடுவில், மானிப்பாய் வீதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தரான பிறேம்குமார் நிந்துஜன் (வயது 30) மற்றும் அவருடைய மகன் நிந்துஜன் தரணிகன் (வயது 03) ஆகியோரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. இவர்கள் காணாமல்போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில அவருடைய மனைவியால் ஒரு வருடத்துக்கு...

தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியமாதலால் அடையாள அட்டை இல்லாதோர் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைக்கும் விண்ணப்பங்களை ஓகஸ்ட் 01 ஆம் திகதியளவில் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க பிரதேச செயலாளர் அலுவலகங்கள் செயற்பட வேண்டுமென திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார்....

யாழ். மாவட்டத்தில் இன்புளுவென்சா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகியவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரையில் 113பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணியொருவர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜா, வியாழக்கிழமை (02) தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பணிப்பாளர், 'இந்த வைரஸ் தாக்கம் தொடர்பில் மே...

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (U.N.D.P) industrial Service Bureau (ISB) உடன் இணைந்து யாழ் மாவட்ட இளையோருக்கான முயற்சியாண்மை நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. இளையோர் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் நோக்கிலும் அவர்கள் சார்ந்த சுயதொழிலை ஆரம்பிக்க ஊக்குவிக்கும் நோக்கிலும் மேற்படி செயற்றிட்டம் நாடுமுழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் யாழ் மாவட்டத்திலுள்ள வேலனை, கரவெட்டி, பருத்தித்துறை,...

யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றுள்ள இளைஞர் யுவதிகளின் புள்ளிவபரங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றது. இதன் படி மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளையோர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி கரவெட்டியிலும், 29 ஆம் திகதி சண்டிலிப்பாயிலும், 30 ஆம் திகதி காரைநகர் மற்றும் சங்கானையிலும் ஜூலை மாதம் 03 ஆம்...

புகைத்தலுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1948 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக ஆலோசனை சேவைகள் வழங்கப்படவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானத்தை ஒழிப்பதற்கான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார். வார நாட்களில் அலுவலக நேரங்களில் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி...

யாழ். மாவட்டத்தில் வாகனங்கள் மீது எந்த நேரத்திலும் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்வர் என்று யாழ். மாவட்ட உதவி போக்குவரத்து ஆணையாளர் கே.மதிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் வாகனங்களை கடுமையாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்...

தரம் பிரிக்கப்படாத குப்பைகளை மாநகர சபைப் பணியாளர்கள் அகற்ற மாட்டார்கள். யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட அனைத்து வரியிறுப்பாளர்களும் தமது இடங்களில் உள்ள கழிவுகளைத் தரம் பிரித்தே இனி மாநாகர சபைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். என்று யாழ்.மாநகர சபை ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். குருநகர் வட்டாரப் பகுதிகளில் திண்மக் கழிவுகளைத் தரம் பிரித்தல் தொடர்பான...

எதிர்வரும் 26ஆம் திகதி, சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினமாகும். அத்தினத்தை முன்னிட்டு சட்டவிரோமாக மதுபானம் விற்போரையும் போதைப்பொருட்களை விற்போரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பொலிஸ் தலைமையகத்தின் குற்றப்பிரிவு இரவு-பகலாக சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளது. சட்டவிரோமாக மதுபானம் விற்போர் மற்றும் போதைப்பொருட்களை விற்போர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸ்...

தேவையற்றவிதத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவர்கள் வெளியில் திரிந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு 14 நாள்களோ அதற்கு அதிகமாகவோ விளக்கமறியலில் வைக்கப்படுவர் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொலிஸாருக்கும் இடையில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதன்போதே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்....

பிள்ளைகள் பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லையென்றால் அது தொடர்பில் 1 மணித்தியாலத்துக்கு முன்னர் பெற்றோர்கள் பாடசாலைக்கு அறிவிக்க வேண்டும் எனவும் இதனை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதர் தெரிவித்தார் தமிழ் சிவில் சமூகத்தின் கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (19) யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு...

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கூட்டுறவு அமைப்புக்களில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு தொழில் வங்கி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண கூட்டுறவு அமைச்சின் வழிகாட்டலின்படி கூட்டுறவு அமைச்சின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தத் தொழில் வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டுறவுத் தொழில் வங்கியில் பதிவு செய்ய விரும்புவோர் யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவுச் சபை அலுவலகத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று பூர்த்தி...

கல்வி விசா பெற்றுத் தருவதாகக் கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதாகவும் அவ்வாறான நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தெரிவித்துள்ளார். வெவ்வேறு ஊடகங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி விசாவின் மூலம் சென்று அங்கு பகுதிநேர தொழிலில் ஈடுபடலாம் எனத் தெரிவித்து இளைஞர், யுவதிகளிடம் அதிக...

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு, முழு விபரங்கள் அடங்கிய பற்றுச்சீட்டை வழங்குவது, நவம்பர் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விபரங்கள் அடங்கிய பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கத் தவறும் வைத்தியசாலைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்தது. மருந்து வழங்கும் வைத்திய சேவை மற்றும் மருந்து விபரங்கள் தொடர்பான தகவல்களைப்...

All posts loaded
No more posts