நாட்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை!

பொதுமக்களுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதேநேரம்,...

கோவிட் -19 தடுப்பூசியை யார் எல்லாம் ஏற்றிக்கொள்ளலாம்? – மருத்துவ வல்லுநர் குமணன் விளக்கம்

பேராசிரியர். தி.குமணன் பொது மருத்துவ வல்லுநர் மருத்துவத் துறை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம். கோவிட் -19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் உபயோகம் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என மருத்துவ உலகம் கருதுகின்றது. ஆனால் யாரெல்லாம் இந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளலாம் என்பதில் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகமும் பீதியும் நிலவுகின்றது. அண்மையில் புதுடில்லியின் பொது மருத்துவ வல்லுநர்களின்...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க எச்சரிக்கை விடுப்பு!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் யாழ். மக்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அதிபர், “யாழ். மாவட்டத்தில் அண்மைய...

தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு சிறப்பு வசதி அறிமுகம்!!

தேசிய அடையாள அட்டைகளை விரைவாகப் பெற சிறப்பு முன்பதிவு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 011 5 226 126 அல்லது 011 5 226 100 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தொடர்புடைய திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யலாம். மேலும், ஏற்கனவே விண்ணப்பங்களை ஆட்பதிவுத் திணைக்களத்திடம் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள் இந்த தொலைபேசி எண்களை...

குளுக்கோமா நோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் கண்பார்வை பாதிப்பை தவிர்க்க முடியும்

40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அரச வைத்தியசாலையில் அல்லது கண் மருத்துவர் ஒருவரை சந்தித்து குளுக்கோமா நோய் தொடர்பாக பரிசோதனை செய்வதன் முக்கியத்துவத்தை கண் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மார்ச் 7 ஆம் திகதி ஆரம்பமான குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு வைத்தியர்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். இந்த குளுக்கோமா வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது....

நல்லூர் ஆலயம் – நாவலர் வீதிவரையான கோயில் வீதி ஒரு மாதத்துக்கு மூடப்படுகிறது

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி போக்குவரத்து ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு வசதியாக நாளைமறுதினம் மார்ச் 7ஆம் திகதி மணி தொடக்கம் ஒரு மாத காலத்துக்கு இந்தப் போக்குவரத்துத் தற்காலிக தடை நடைமுறையில் இருக்கும் என...

வீட்டுக்கு வரும் எந்தப்பிரிவினரையும் அடையாள அட்டைகளைப்பெற்று உறுதிப்படுத்துங்கள் – மக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்

பியகம பொலிஸ் பிரிவில் கொட்டுல்ல பிரதேசத்தில் விஷேட அதிரடிப்படையினரென தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குழுவொன்று வீடொன்றில் நுழைந்து 50,000 இற்கும் அதிகமான பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று செவ்வாய்க்கிழமை விஷேட அதிரடிப்படையினரென...

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!!

காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்என சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார். கொவிட் நோயாளிகளைக் கண்டறிவது தொடர்பாக சுகாதார பரிசோதக அதிகாரிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால், பொதுமக்கள்...

நெடுந்தீவு மக்களிற்கு வன ஜீவராசிகள் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

நெடுந்தீவு பிரதேச செயலக பகுதியில் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வர்த்தமானி மூலம் உள்வாங்கப்பட்ட 1,840 ஹெக்ரயர் நிலப்பரப்பில் தனியார் காணிகள் உள்ளடக்கப்பட்டிருப்பின் குறித்த காணி உமையாளர்கள் தமது காணியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நெடுந்தீவு பிரதேச செயலர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் வடக்கு மாகாண இணைச்செயலாளர் மா.பரமேஸ்வரன்...

எமது பிரதேசங்களில் தற்கொலைகளைத் தவிர்க்க அபயம் நிறுவனத்தின் சேவையை நாடுவோம்!!

வடக்கு – கிழக்கில் தற்கொலைகளை தடுத்து நிறுத்த அனைவரும் அபயம் நிறுவனத்துடன் இணைந்து சமூகப் பொறுப்புடன் செயற்படுமாறு இந்து சமயத் தலைவர்கள் கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தோண்டுநாத சுவாமிகள் மற்றும் மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணப் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அதன் உபதலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாத...

வாகனங்கள், வீடுகள், நிறுவனங்களில் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அறிவிப்பு!!

73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வாகனங்களிலும் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அரச பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக...

இணைய மோசடிகள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்தும் விண்ணப்பங்கள் மூலம் பல வகையான நிதி மோசடிகள் மற்றும் மோசடிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த மோசடிகளில் பெரும்பாலானவை ஒன்லைன் அல்லது தொலைபேசி பயன்பாட்டு அடிப்படையிலான எளிதான கடன் திட்டங்கள் மூலம் பொதுமக்களை ஈர்ப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி...

தைப்பொங்கல் திருநாளை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள்; சுகாதார அமைச்சு

தைப்பொங்கல் திருநாளை வீட்டிலிருந்து கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு கேட்டுள்ளது. ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அடுத்த ஆறு மாதங்களில் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி வலியுறுத்தினார். இன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க சரியான...

இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கை!!

வர்த்தக நிலையங்கள், அங்காடிகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளை முன்னெடுக்கும்போது, அரசாங்கம் வெளியிட்டுள்ள சுகாதார பரிந்துரைகள் அடங்கிய வர்த்தமானிக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் இன்று முதல் கண்காணிக்கப்படவுள்ளது. இதற்காக விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியை பேணுதல், கிருமித்...

வவுனியா நகரக் கடைகளுக்கு கடந்த 2 வாரங்களில் சென்றோரைத் தொடர்புகொள்ளக் கோரிக்கை

வவுனியா மாவட்ட பொது மக்களுக்கானதும் ஏனையோருக்குமான சுகாதாரத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல் ஒன்றை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் மில் வீதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் கடமை...

வட மாகாண மக்களுக்கான அறிவித்தல்!!

வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் மத்தியில் தற்பொழுது வாழ்வோரின் பெயர், 2020 ஆம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, சம்பந்தப்பட்டவர்கள் தற்பொழுது வடக்கு மாகாணங்களில் பதிவு...

தடுப்பூசி கிடைக்க எவ்வளவு காலம் எடுக்குமென உறுதியாகக் கூற முடியாது; அதுவரை யாருக்கும் எங்கும் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு – மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

“கோவிட் – 19 தொற்று நோயால் இருண்ட பயணத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் ஒளிக்கீற்றுக்களாக தெரிகின்றன. இந்தப் பேரவலத்திலிருந்து இவை மக்களை மீட்டெடுக்கும் என்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது. ஒரு நாட்டில் கோரோனா தொற்று பரம்பலை முற்றாக நிறுத்த வேண்டுமாயின் அந்த நாட்டு சனத்தொகையின் 70 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். இந்த இலக்கை அடைந்தால்தான்...

விசித்திரமான அழைப்புக்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

ஏதேனும் பரிசுப் பொருள் அல்லது பணத்தொகையொன்றை வெற்றி பெற்றிருப்பதாக தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக கிடைக்கின்ற போலி தகவல்கள் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பரிசுப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட தொகை பணத்தை வங்கியில் வைப்புச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மோசடிக்காரர்களிடமிருந்து இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக பொலிஸ்...

நடுத்தர வருமான வீட்டு வசதி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

நகர் பகுதிகளில் வசிக்கும் வீடற்ற குடும்பங்களுக்கு வீடு வழங்குவதற்கான நடுத்தர வருமான வீட்டு வசதி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த விண்ணப்ப படிவங்களை யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகங்களிலும், யாழ்ப்பாணம், நல்லூர், வடமராட்சி வடக்கு, கரைச்சி, வவுனியா ஆகிய பிரதேச செயலகங்களிலும், உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பங்களை பூர்த்தி...
Loading posts...

All posts loaded

No more posts