- Saturday
- February 22nd, 2025

அனுராதபுரம் -− ஓமந்தை ரயில் பாதை புனரமைப்பு பணிகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் ஆறு மாத காலத்துக்கு அப்பகுதி மூடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்படி ரயில் பாதை புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் மார்ச் 05 ஆம் திகதிக்குப் பின்னர் வடக்குக்கான ரயில் சேவை கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரை...

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது மாணவர்கள் மத்தியில் கொரோனா, வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற...

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஜனவரி 31ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதிவரை தடுப்பூசி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாள்களில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏற்கனவே சினோபாம் கோவிட்-19 தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் அனைவருக்கும் மேலதிகமாக மூன்றாவது தடவையாக கோவிட்-19 தடுப்பூசியானது (பூஸ்டர்) வழங்கப்பட உள்ளது. இத்தடுப்பூசியினை இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து ஆகக்குறைந்து...

யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார...

பண்டிகைக் காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக கடைபிடிக்கத் தவறினால், மற்றுமொரு கொவிட்-19 அலையினால் நாடு மீண்டும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளரான வைத்தியர் அன்வர்...

சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வாழ்க்கைத் துணை விசாவில் இங்கு வசிப்பதற்கான அறிக்கைகள் அதிகரித்து வருவதாலேயே வெளிநாட்டுப் பிரஜையை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் என அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது. இலங்கைப் பிரஜைகள் வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி ஏன் கோரப்பட்டது என சமூக ஊடகங்களில் பெருகிய...

உண்ணி காய்ச்சல், டெங்கு, மலேரியா நோய் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுங்கள் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனானந்தா எச்சரித்துள்ளார். இன்று யாழ். போதனா வைத்தியசாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - உண்ணி காய்ச்சல் என்பது மழைக்குப் பின்னரான காலத்தில் வயல்களில்,...

அடுத்த வருட ஆரம்பம் முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்கையில் தடுப்பூசி அட்டை உடன் வைத்திருத்தலை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதன்படி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றவர்களுக்கு சிறப்பு செயலி (ஆப்)...

எதிர்காலத்தில் நான்காவது டோஸுக்கு தேவைப்படும் பட்சத்தில், கோவிட்-19 தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். “தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டை எடுத்துச் செல்வதற்கு ஏற்றதல்ல. ஒரு தரவுத்தளத்தில்...

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என சிறப்பு மருத்துவர் மல்காந்தி கல்ஹேனா தெரிவித்துள்ளார். ஃபைசர் மூன்றாவது டோஸை செலுத்தும்போது, கொரோனா போன்ற சிறிய அறிகுறிகள் மூன்று நாட்கள் வரை தோன்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உடல்வலி, தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்...

நாட்டுமக்கள் தமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இலஞ்சம் மற்றும் ஊழலுடன் தொடர்புடைய அனுபவங்களை முறைப்பாடு வடிவில் பகிர்ந்துகொள்வதற்கும் அதுகுறித்து முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்றவகையில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வடிவமைக்கப்பட்டுள்ள 'அப்பேசல்லி' என்ற இணையப்பக்கம் சர்வதேச இலஞ்ச, ஊழல் ஒழிப்பு தினமான 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ட்ரான்ஸ்பேரன்ஸி...

நாட்டின் பல பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது...

நாட்டில் தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சமையல் எரிவாயு தொடர்பான தீ பரவல் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், அது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள லிட்ரோ நிறுவனம், தரம் குறைந்த சாதனங்கள் காரணமாக இச்சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. குறித்த அறிவித்தல் வருமாறு, தேசிய எரிவாயு வழங்குனரான Litro Gas...

லிட்ரோ சமையல் எரிவாயு தொடர்பில் சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சமையல் எரிவாயு குறித்து ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின் பொதுமக்கள் 1311 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் ஒருவரின் தானியங்கி பணக் கொடுக்கல் வாங்கல் அட்டையை எடுத்து சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் தேடுகின்றனர். அவர்கள் இருவரது ஒளிப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். உரும்பிராயின் தனிநபர் ஒருவரின் வங்கிக் கணக்கின் தானியங்கி பணப்பரிமாற்றல் அட்டை காணாமற்போனமை...

வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களை தவிர்ப்பதற்கு வீட்டில் உள்ள மின் கட்டமைப்பை பரிசோதிக்குமாறு இலங்கைவாழ் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவி ஆய்வாளர் ரொஷான் பெர்ணான்டோ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். எரிவாயு விபத்துக்கள் இடம்பெற்ற எந்த ஒரு இடத்திலும் சிலிண்டர்கள் வெடித்திருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக மின்சார கட்டமைப்புகளை சோதனையிட்டு...

நேற்று (15) நண்பகல் 12.00 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பொதுக்கூட்டங்கள், கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கு தடை விதித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிற்பகல் சுகாதார வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார். கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு தனியார்...

நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை குருதி வங்கி அறிவித்துள்ளது. “யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை குருதி வங்கியில் இருக்க வேண்டிய ஆகக் குறைந்த குருதியின் அளவு 330 பைந்த ஆகும். ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவோ 200 பைந்த ஆகும். இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத...

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக யாழ்போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவுகளில் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும், எனவே...

நாட்டில் வரும் நாட்களில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தத்திற்கு முகம்கொடுப்பதற்காக மத்திய நிலையம் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்குத் அறிவிக்க முடியுமென அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்....

All posts loaded
No more posts