- Monday
- April 21st, 2025

புதிய மாணவர் அனுமதி தொடர்பில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்கம் இன்று அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் தற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. கல்லுாரியின் அனுமதிக்கு நன்கொடை வழங்குவது கட்டாய முன் நிபந்தனையல்ல. கல்லுாரி புதிய மாணவர் அனுமதிக்காக வழமையான மாணவர் வசதிகள் சேவைகள் கட்டணம் தவிர்ந்த எந்த விதமான...

மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமான முறையில் சமூகமளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுரை வழங்குமாறு மூத்த பெண் சட்டத்தரணி திருமதி சிவபாதத்தை அழைத்து நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ஆலோசனை வழங்கினார். மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், விடுமுறைக் காலம் நிறைவடைந்து புத்தாண்டில்...

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நேற்று (28) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ள வருமானமற்று காணப்படுகின்றனர். இவர்களில்...

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மேல் மாகாணங்களில், இன்றையதினம் கனத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மத்திய, சப்ரகமுவ மாகாணம் மற்றும் மாத்தறை...

கொழும்பு அரசின் 2006ஆம் ஆண்டு சுற்றறிக்கைக்கு அமையவே, நோயாளர் பகுதியில் கமரா வசதியுடைய நவீன அலைபேசிகள் பயன்படுத்த முடியாது என்பதனை நடைமுறைப்படுத்துகின்றோம் என்று யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் கடமைநேரத்தில் நவீனவகை அலைபேசி களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில்...

தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து டிசம்பர் 15ஆம் திகதி வடக்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்இ மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட...

இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.குறித்த விடுமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 7ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது. அந்தவகையில் 2019ஆம் ஆண்டின் புத்தாண்டின் பின்னர் ஜனவரி 7ஆம் திகதி நாட்டின் சகல நீதிமன்றங்களும் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் ஆகையால் தான் இலங்கையிலுள்ள உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் மிகவும்...

கைபேசி காணாமற்போனால் அல்லது திருட்டுப் போயிருந்தால் அதுதொடர்பில் உனடியாக முறைப்பாட்டை வழங்கும் வகையில் இலங்கை பொலிஸார் புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். www.ineed.police.lk என்ற புதிய இணையதளமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் அறிவுரைக்கமைய இந்த இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். இணையத்தளத்துக்குள் சென்று முறைப்பாட்டாளர் தனியான கணக்கை...

இரணைமடுக் குளத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அதன் ஆறு வான் கதவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில் திறக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தாழ்வான பகுதிகளான பன்னங்கண்டி, ஊரியான் , முரசுமோட்டை, வட்டக்கச்சி பண்ணைப் பகுதி மற்றும் கண்டாவளை ஆகிய பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசத் திணைக்களம் கேட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் நேற்றுப்...

பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கு நிதி மற்றும் பாலியல் ரீதியில் இலஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் தாமதிக்காமல் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் அதிகரித்துள்ளன என்று சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், நாட்டின் பல மாவட்டங்களில் இன்புலுவன்ச வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இடைவிடா காய்ச்சல், இருமல், வாந்தியெடுத்தல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரின் சோதனையைப் பெறுமாறு ஆலோசனை வழங்கியுள்ள சுகாதார அமைச்சு, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகக்...

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2019 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பின்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும். சைவபரிபாலனசபையால் நடாத்தப்படும் சைவசித்தாந்த பிரவேச பால பண்டிதர் பரீட்சையில் சித்தி அல்லது கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை (இந்துசமயம் அல்லது இந்துநாகரீகம் உட்பட) சித்தி அல்லது சைவசமய...

பெறுமதியான பரிசில் உங்கள் கிடைத்துள்ளது எனவும் அதனை உரிய முகவரியில் சேர்ப்பிப்பதற்கு வங்கியில் உடனடியாக பணம் வைப்பிலிடுமாறு கோரி அழைக்கப்பட்ட தொலைபேசியில் வந்த தகவலை நம்பிக்கைவைத்து வங்கியில் 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றமடைந்த குடும்பத்தலைவர் வழங்கி முறைப்பாடு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த...

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூன்று சூறாவளிகள் இலங்கையைத் தாக்கக் கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். இலங்கைக்குக்கு தென்கிழக்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் உருவாகியுள்ள இந்த சூறாவளிகள் வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையைத் தாக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதேவேளை, வடக்கு மாகாணத்தில் மழையுடனான காலநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில்100 மில்லிமீற்றர்...

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாத்தறை முதல் திருகோணமலை ஊடாக யாழ்ப்பாணம் வரையிலான கடற்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 70 -80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக் கூடும் என வளிமண்டல...

தூங்கும் அறையில் கைபேசி பாவிப்பது மற்றும் இரவு நேரத்தில் நீண்ட நேரம் அறையில் கைத்தொலைபேசியை வைத்திருப்பது கடும் சுகாதார பாதிப்புக்கு காரணாமாகும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. “கைபேசி மற்றும் கணினி தொடர்பான உபகரணங்களில் அதிகம் நேரம் செலவிடுவது சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. தூங்கும் அறையில் கைபேசி வைத்திருப்பது மூளை மற்றும் நரம்பு தொகுதிகளுக்கு பாதிப்பை...

அனுராதபுரம் சிறைச்சாலை தமது விடுதலையை கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி, குறித்த அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு ஏற்ப இந்த...

தியாகி திலீபனின் நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் அனைவரையும் ஒன்றுகூடுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில் தியாகி திலீபனின் 31 ஆவது ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்குமான அழைப்பை இக்கட்சி அறிக்கையூடாக விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழர் தாயக அரசியல்...

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலைமையை கருத்தில் கொண்டு வைத்தியர்கள் விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இயக்குனர், வைத்தியர் சமித்தியே வைத்தியர்கள் சார்பில் பின்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாளாந்தம் ஆறு லீற்றர் நீர் அருந்த வேண்டும் என தெரிவித்துள்ள அவர் தற்போது அதிக வெப்ப...

All posts loaded
No more posts