- Sunday
- April 20th, 2025

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புரை செய்யும் நபருக்கு எதிரான அவசர கால சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட முடியும் குற்றமிழைத்தவர்களாக காணப்படும் பட்சத்தில் மூன்றுக்கும் ஐந்து வருடத்துக்கும் இடைப்பட்ட கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்று தேசிய ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. சில நபர்கள் முன்னெடுக்கும் உண்மைக்கு புறம்பான பரப்புரைகளினால் கொட்டாஞ்சேனை பொது...

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, விசேட சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமூக வலைத்தளங்களூடாக, பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களை அச்சமடையச் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள பாதுகாப்புத் தரப்பினர், இவ்வாறான போலிப் பிரசாரங்கள் குறித்து, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென அறிவித்துள்ளனர். அத்துடன், சந்தேகத்துக்கிடமான...

இலங்கைக்கு தொடர்ந்தும் தாக்குதல் எச்சரிக்கை இருப்பதாக இராணுவ புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளன என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்தோடு, இத்தாக்குதல்களானது இளைஞர்களை தூண்டுவதாக அமைந்துள்ளதென்றும், அதனை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளதென்றும்...

தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை இன்று வலுப்பெறும் சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களும், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

தற்பொழுது நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளுர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும் பொதிகள் தபால் அலுவலகத்தின் கருமப்பீட அதிகாரிக்கு அல்லது அதிகாரம் கொண்ட அதிகாரி ஒருவர் முன்னிலையில் பொதியிட்டு ஒப்படைக்கப்படும் பொதிகளை மாத்திரம் தபால் அலுவலகங்கள் பொறுப்பேற்குமாறு அனைத்து தபால் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தபால்மா அதிபர் ரஞ்சித்...

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப் அவசர பொலிஸ் இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,...

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகிதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக...

இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருப்பதாக n சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருக்கிறது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் அதில்...

நாட்டில் இடம்பெற்ற அடுத்தடுத்த குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளது. இந்த அறிவித்தலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை , வடமாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் இன்று(22) திங்கட்கிழமை விடுமுறை...

நாட்டில் நிலவும் பதற்ற நிலையினால அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பொலிஸ் ஊடரங்குச் சட்டம் நேற்று பிற்பகல் அமுல்படுத்தப்பட்டதுடன், அந்த ஊடரங்குச் சட்டம் இன்று காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ்...

இரவுநேர பயணங்களின்போது சாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர வலியுறுத்தியுள்ளார். மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் நாட்டில் சமீப காலமாக இடம்பெறும் விபத்துக்கள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடக...

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக, தற்போது காணப்படும் மழையுடனான வானிலை பலத்த மின்னல் தாக்கத்துடன் தொடரக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப்...

நாளை முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை முதல் 5 ஆம் திகதி முதல் இம்மாதம் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேர உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலம் தெரிவித்துள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு நேர வேளைகளில், அதிகூடிய வெப்ப நிலை...

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய 15ஆம் திகதி விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி சிங்கள மற்றும் இந்து மக்களால் சித்திரை புதுவருட பிறப்பு கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டே 15ஆம் திகதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் 3 மாதங்களுக்கு சகல மின்பாவனையாளர்களும் தமது வீடுகளில் 2 மின்குமிழ்களை அணைப்பதுடன், அரச – பொது நிறுவனங்களில் மின்பாவனையை 10 சதவீதத்தால் குறைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க மின்சக்தி அமைச்சுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையைக் கருத்திற்கொண்டு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த...

நாட்டில் சமீப காலமாக நிலவிவரும் மின்சா தடை தொடர்பாக முக்கிய அறிவித்தல் வெளியாகவுள்ளது. அதன்படி நாளொன்றுக்கு 4 மணி நேரம் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது குறித்து இலங்கை மின்சார சபை இன்று (திங்கட்கிழமை) அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளது. நாட்டில் வெப்பமான காலநிலை நிலவுகின்ற நிலையில், மின்சார தடை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்...

நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் போதிய மழை இல்லாமை காரணமாக நாடுமுழுவதும் சுழற்சி முறையிலான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் பகல் வேளையில் மூன்று மணிநேரமும் இரவு வேளை ஒரு மணி நேரமும் நாடுமுழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது. லக்ஸ்பான, மேல்...

கர்ப்பிணி தாய்மார் அல்லது பிரசவத்துக்கு பின்னர் தாய்மாருக்கு காய்ச்சல் நோய் ஏற்பட்டால் முதல் நாளிளேயே வைத்தியசாலையில் சேர்க்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. தற்பொழுது பரவி வரும் டெங்கு மற்றும் இன்புளுவென்சா நோயினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார் ஏனையவர்களிலும் பார்க்க அபாய நிலைக்கு உள்ளாகக்கூடும் தொண்டைக்கும், பாதிப்பு ஏற்படும். குடும்ப சுகாதார பணியகத்தின்...

யாழ்.நகரப் பகுதியில் பொது இடங்களில் விளம்பரங்களை ஒட்டுவதற்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையில்நேற்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தனியார் அல்லது அரச நிறுவனங்கள், அரசியல் சார்ந்த கட்சிகள், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் போன்ற எந்த...

All posts loaded
No more posts