- Saturday
- April 19th, 2025

யாழ். குடாநாட்டில் ஆவாக் குழுவினரின் அடாவடிகள் இன்னமும் அடங்கவில்லை. அவர்களைக் கூண்டோடு இல்லாதொழிப்போம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சூளுரைத்துள்ளார். யாழ். மானிப்பாயில் கடந்த சனிக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞர் ஆவாக் குழுவின் உறுப்பினர் என பொலிஸார் உறுதிப்படுத்தியிருந்தனர். இவர் வீடொன்றில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தனது சகாக்களுடன்...

புதிதாக கட்டப்படும் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான பணிநிலை வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கான முடிவுத்திகதி 26.07.2019 ஆகும் விண்ணப்ப மாதிரிகள் மற்றும் விபரங்களை இங்கே காணலாம் விண்ணப்ப மாதிரிகள் https://airport.lk/aasl/reach_us/careers.php

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி குறித்த மாகாணங்களுக்குள் உள்ளடங்குகின்ற 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, பொலன்னறுவை,...

இலங்கையில் வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் அபராத தொகைகள் அதிகரிக்கப்பட உள்ளன. அபராத தொகைகள் அதிகரிப்பு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு நேற்றைய தினம் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல், மதுபானம்...

முகத்தை மறைக்கும் தலைக்கவசத்தை அணிந்து மோட்டார் சைக்கிளை செலுத்துவோரை அவசரக்காலச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவ்வாறு பயணிப்போரை கைது செய்து வழக்கு தொடர முடியும் என சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார். நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து...

என்ரப்பிறைஸ் சிறிலங்கா எனும் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட வங்கிகள் கடன்தர மறுத்தால் 1925 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அழைத்து மக்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும். முறைப்பாட்டின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர மக்களிடம் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டின் பாதீட்டின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 50 கைத்தொழிற்சாலைகளை பரிசீலிக்கும் நோக்கில் நேற்று மங்கள...

ரயில்களில் இன்று முதல் மீண்டும் பொதிகளைக் கொண்டு செல்ல முடியுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து, பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, தற்காலிகமாக ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதிகளைப் பொறுப்பேற்கும் ரயில் நிலையங்களில் பொதிகளைச் சோதனையிடுவதற்காக, விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும், ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச வங்கியில் வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண பொலிசார் கோரியுள்ளனர். யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் கிளையிலும் , தீவக பகுதியில் உள்ள அரச வங்கி கிளையிலும்...

பாதிக்கப்பட்டோரும், பாதிக்கப்பட்டோரோடு பயணிப்போரும் இணைந்து பாதிக்கப்பட்டோரின் வாழ்வும், பயனும் குறித்து சுயமதிப்பீடு செய்யும் நோக்கோடு மாநாடு ஒன்றை றோட்டரிக் கழகம் யாழ்ப்பாணம் DATA அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்கின்றது. இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை காலமும் சந்தித்தவையும், சாதித்தவையும் ஆராயப்படுவதோடு இனிவருங்காலங்களில் அவர்களது வாழ்வுப்பயணம்...

யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் இந்த விடயம் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் எச்சரித்துள்ளது. காணிகளுக்கு போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை...

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாசி மாதம் 14 ஆம் திகதி பிரதமர் ரணி்ல் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (Accident and emergency unit with modern facilities) நாளை சனிக்கிழமை தொடக்கம் பொதுமக்களுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்கவுள்ளது. எனவே விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக வருபவர்கள் நாளை புதிதாக திறந்து...

யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் செயற்பாடு தொடர்பில் யாழ் மாநகரசபையினால் புதிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு யாழ் மாநகர சபை முதல்வர் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிவித்தலினை இங்கு இணைக்கின்றோம். இந்த புதிய திண்மக்கழிவகற்றல் பொறிமுறையை முறையாக ஒழுங்குபடுத்தும்...

நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன், விவாகப் பதிவு மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழை இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நல்லூர் பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும்...

கோவில் திருவிழாக்களில் இடம்பெறும் அன்னதான நிகழ்வுகளுக்கு சமையலில் ஈடுபடுவோர் மருத்துவ அறிக்கை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உரிய மருத்துவ பரிசோதனை அறிக்கை கைவசம் வைத்திருக்காமல் சமையலில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சாவகச்சேரி சுகாதாரத்திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பெருமளவு கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் பொங்கல் உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றன. திருவிழாக்களை...

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டு, மக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். ஈஸ்ட்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். இந்நிலையில் அதன் அடுத்த நாள் கொழும்பு, கொச்சக்கடை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றும் வெடித்து சிதறியது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய...

நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட முகப்புத்தக கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்யும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்தே முகப்புத்தக கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலையை சாதமாக்கி யாழில் வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்று வருவதாகவும் , பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்.நல்லூர் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தம்மை பொலிசார் என அறிமுகம் செய்து , அவர்களிடமிருந்த விலைமதிப்பு மிக்க தொலைபேசிகளை சோதனையிட வேண்டும் என கூறி...

வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவச் சீருடைகள் உடமையில் வைத்திருந்தால் இன்று அல்லது நாளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர். நாடுமுழுவதும் தற்போது முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புத் தேடுதலில் போது வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவச் சீருடைகள் என்பன கைப்பற்றப்படுகின்றன. அவற்றை வைத்திருப்போர் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தற்போது...

சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் வடக்கு மாகாணத்திலும் ஊடுருவலாம் என அறிவித்துள்ள பொலிஸ் திணைக்களம், விழிப்புடன் இருக்குமாறு பொது மக்களிடம் கோரியுள்ளது. இதுதொடர்பில் சந்தேகத்துக்கிடமான வாகனங்களின் இலக்கங்களுடனான விவரம் வவுனியா பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. லொறி ஒன்றும் 11 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டி உள்பட 19 வாகனங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டும் பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு யாழ் வணிகர் கழகம் கேட்டுக்கொள்கின்றது. உங்கள் வர்த்தக ஸ்தாபனத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் வைத்திருத்தல் வேண்டும். உங்கள் வர்த்தக ஸ்தாபனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் சகல விபரங்களும் பேணப்பட...

All posts loaded
No more posts