- Wednesday
- April 16th, 2025

உலகை உலுக்கும் பாம்பு வைரஸ் தொற்று; வடக்கு மக்களும் விழிப்போடு இருக்கவேண்டும் – மருத்துவர் யமுனாந்தா
“சீனாவை தாக்கி அங்கு மக்களை உயிரெடுத்து வரும் கோரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, தாய்லாந்து, சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கும் தொற்றியுள்ளது. எனவே வடக்கு மாகாணத்திலும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்போடு இருக்கவேண்டும்” இவ்வாறு மருத்துவர் சி. யமுனானந்தா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; தற்போது உலகம் முழுவதும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் என்ற...

இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் தேங்காயிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாம் எண்ணெய் கலக்கப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையிலான செயற்திட்டமொன்றினை சுகாதார அமைச்சுடன் இணைந்து மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துவைத்தது. இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதன்போது பால்மாவினால் ஏற்படும்...

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 1 இலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன. பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால், பயிலுனர் பதவிகளிற்கான முதலாம் கட்ட ஆட்சேர்ப்பிற்கான விபரங்கள் இன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 100,000 வேலைவாய்ப்பிற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கிறது. இதற்கான மாதிரி விண்ணப்படிவத்தை நீங்கள் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவில் பெற்று, பூர்த்தி...

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது. இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தெரிவித்ததாவது: சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயிலில்...

குறைந்த வருமானம் பெறும் மற்றும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கப்படவுள்ள 100,000 வேலை வாய்ப்புகள் தொடர்பான, பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, இதற்கான பொருத்தமான ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் விண்ணப்பங்கள் ஜனவரி 20 க்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும். பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் நோக்கம், மிகவும் வறிய...

பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாயை குடும்பம் ஒன்று இழந்துள்ளது. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்ப தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி நின்று பணியாற்றி வரும் நிலையில் தாயும், மகளும் யாழில் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாத...

கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை, இன்று முதல் நிறுத்துவதற்கு ரயில்வேத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி 87 மற்றும் 88 இலக்கம் கொண்ட ரயில்கள், இன்று செவ்வாய்க்கிழமை முதல் இயங்கமாட்டாது. பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பதிலாக இரண்டு ரயில்கள்...

ஆபிரிக்கா மற்றும் வேறு சில நாடுகளைச் சேர்ந்த சிலர் premium callback scam என்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இலங்கையில் தொலைபேசிகளை பயன்படுத்துவோரை இலக்காக கொண்டு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்படும் தவறிய அழைப்பை (Missed calls) விடுத்து மோசடியில் ஈடுபடுகின்றனர். 10235,646,2532 ,10212,621-001782 இவ்வாறான இலக்கங்களுக்கு பதிலளிக்கும் பொழுது இவர்களது...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தை மீளச் செயற்படுத்துவதற்கு பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றுகூடுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. பழைய மாணவர் சங்கத்தினை மீளச் செயற்படுத்துவதற்கான ஒன்றுகூடல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு விஞ்ஞான பீட பௌதீகவியல் விரிவுரை மண்டபத்தில் இடம்பெறும் என்று ஒன்றிம் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நாளை புதன்கிழமை முற்பகல் பத்து மணிக்கு மாபெரும் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. புதிதாகப் பதவியேற்றுள்ள ஐனாதிபதி கோட்டாபய ராஐபக்ச மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல இடங்களிலும் சட்டவிரோத...

மணலை பாதையில் எடுத்துச் செல்வதற்கான வாகன அனுமதி பத்திர முறை மாத்திரமே நீக்கப்பட்டுள்ளது. மாறாக மணல் அகழ்வதற்கோ அல்லது சட்ட விரோதமாக கொண்டு செல்வதற்கோ அனுமதிபத்திர முறைமை நீக்கப்படவில்லை. இவ்விடயத்தில் பழைய முறையிலான சட்ட நடவடிக்கைகளே தொடர்ந்தும் பின்பற்றப்படும் என்று துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாளை(செவ்வாய்கிழமை) முதல் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான காலநிலை ஓரளவிற்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை...

யாழில் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் டெங்கு தொடர்பான அவசர கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் முப்படையினர் மற்றும் மாவட்டத்திலுள்ள சகல அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் அடுத்த மூன்று வாரங்கள் டெங்கை ஒழிப்பதற்கான அவசர காலமாக...

கிளிநொச்சி விவேகானந்தநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலைகளில் சிகிசை பெறுவதாகவும், இதற்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு இரண்டு மில்லியன் ரூபா பணம் தேவை...

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் தெற்கு கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்க நிலை நாட்டுக்கு அப்பால் நகர்ந்து வருவதனால் நாட்டில்...

வட இலங்கை சூரிய கிரகணத்தை அவதானிக்கும் அரிய வாய்ப்பினை எதிர்வரும் 26ஆம் திகதி பெற்றுக்கொள்ளவுள்ளது. சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான சிறப்பு முகாம்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி, பேராசிரியர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம், மேற்குநோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆகியவற்றுடன்...

இலங்கைக்கு தெற்காக விருத்தியடைந்த குறைந்தமட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று (புதன்கிழமை) இரவிலிருந்து (குறிப்பாக டிசம்பர் 04ஆம், 05ஆம் திகதிகளில்) அதிகரிப்பு ஏற்படும் என அத்திணைக்களம்...

நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாகவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...

நாட்டின் 6 மாவட்டங்களை மையமாகக்கொண்டு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ள மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இன்று முதல் எதிர்வரும் 6...

நாட்டில் (குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

All posts loaded
No more posts