- Saturday
- April 5th, 2025

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமேயானால் குடியிருப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு யாழ்ப்பாணம் பிராந்திய தொற்றுநோயியலாளர் மருத்துவர் எஸ்.மோகனகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் டெங்கு நோய் தொடர்பாகவும்...

ஏப்ரல் 16 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர, அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விதிமுறைகள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வழங்கிய அனைத்து சாரதி...

அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18ஆம் திகதி) அதிகாலை 02.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில்...

யாழ்.மாவட்டத்தில் இப்போதும் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயத்திற்குள்ளேயே இருக்கின்றது. நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் நோய் தொற்றுக்குள்ளவர்கள் எமது மாவட்டத்திற்குள் நுழைய வாய்ப்புக்கள் உள்ளது. மக்கள் விழிப்பாக இருப்பது நல்லது. மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து ஊடகங்களை சந்தித்து மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற...

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத நபர்கள் மீது இன்று (புதன்கிழமை) முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக புலனாய்வு துறையினரும் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், குறித்த நடைமுறை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். அந்தவகையில்...

கையடக்க தொலை பேசியை அடிப்படையாகக்கொண்ட பணபரிமாறலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுவது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடனிருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பாதகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நல்லிணக்க மையம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த சில...

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வரவுப் பதிவேட்டில் கையொப்பமிடுவதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட கோரோனா வைரஸ் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல் இடம்பெற்றது. இதன்போது...

நாட்டில் கோரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவரும் நிலையில் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்கவேண்டியவை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கோரோனா தொற்றுநோயானது இலங்கையிலும் பரவி வருவது தாங்கள் அறிந்ததே. கோரோனா...

நாட்டில் கோரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவரும் நிலையில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டியவை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; உலகையே அச்சுறுத்திவரும் கோரோனா வைரஸ் நோயானது தற்போது எமது நாட்டிலும் வேகமாக பரவி வருவதை...

நாட்டில் கோரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவரும் நிலையில் உணவகங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கான ஆலோசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அன்பார்ந்த பொதுமக்களே! தற்போது மிகவும் ஆபத்தான கோரோனா தொற்று...

வடக்கு மாகாணத்தில் சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நீண்டநாள்களளாக ஊரடங்கு மற்றும் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மூடப்பட்டு இருந்து தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும்....

ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மட்டுமே தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோருக்கு அனுமதியளிக்கப்படும். ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்களில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லை” இவ்வாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மக்களின் தேவையற்ற ஒன்றுகூடலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் போது மட்டுமே...

இலங்கை மத்திய வங்கி கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் வசதிக்காக முடிவுத் திகதியை நீடித்துள்ளது. கொவிட் - 19 பரம்பலினால் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி கடன் பிற்போடுதல் மற்றும் இரண்டு மாத தொழிற்படு மூலதனத்திற்காக...

பொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக் கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும்...

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் நான்காம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை தொடர்ந்து அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு முதல்...

யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளிச்செல்ல முடியும் என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) தேசிய அடையாள அட்டையின் 3 அல்லது 4 இலக்கத்தை கொண்டவர்கள் மட்டுமே வெளிவர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “யாழ்.மாவட்டத்தில் இன்று ஊடரங்கு...

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்ந்து மக்கள் வெளியில் நடமாடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பில் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “ஊரடங்கு தளர்த்தப்பம் பிரதேசங்கள், மற்றும் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் சுகாதார நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படல் வேண்டும். மாவட்டங்களுக்கிடையில் பயணங்களை மேற்கொள்ளுதலோ, அத்தியாவசியத் தேவையின்றி...

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட இடங்களில் மாத்திரமே அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்ய வெளியில் செல்ல முடியும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண விளக்கமளித்துள்ளார். எனினும் அவசர நோய்க் காரணங்கள் மற்றும் நோய்த் தொற்றுத் தொடர்பான மருத்துவ ஆலோசனையைப் பெற, கிளிக் அட்டைகளுடன் வைத்தியசாலைகளுக்கு செல்வோரிடம் இந்த...

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும்...

All posts loaded
No more posts