- Saturday
- December 21st, 2024
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் டெங்கு தொற்று தீவிரமடைந்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக டெங்கு தொற்று தீவிரமாகி வருகின்றது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 5 ஆயிரத்து 453 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செப்டெம்பர் மாதம்...
வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்க முடியும். வாக்களிப்பு மத்திய நிலையத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவே வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. ஆகவே வாக்காளர் அட்டை உள்ளவர்கள் வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டையை கொண்டு செல்ல வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆளடையாள அட்டை இல்லாவிடின் வாக்குச்சீட்டு வழங்கப்படமாட்டாது. அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாதவர்கள் தமது வதிவிட கிராம சேவகரை...
பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நான்கில் ஒருவருக்கு தமது வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் நிலை காணப்படுவதாக இலங்கை தேசிய பக்கவாத சம்மேளனத்தின் தலைவர் டொக்டர் காமினி பத்திரன தெரிவித்தார். [caption id="attachment_123398" align="aligncenter" width="768"] Most ischemic strokes are caused by atherosclerosis, which is also called...
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிப் இல்லாமல் எட்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டியவை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்....
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இலக்கம் JC 23 வெளிச்சுற்று வவுனியா...
யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் நலம் கருதி சிவசி இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிவசி இல்லம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கையில்,தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள். இவ்வாறானவர்கள் நோயாளிகளை யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகளில்...
டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. டென்மார்க்கில் வேலைவாய்ப்பு தொடர்பான முகநூல் பக்கத்தில் இந்த மோசடி தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த போலி விளம்பரத்தில், நோயாளிகளை பராமரிக்கும் பணியாளர்கள், செவிலியர்கள், பேக்கிங் தொழிலாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், பாதுகாவலர்கள், கட்டுமான...
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரித்து உள்ளதாகவும், திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் சில மாதங்களில் 32 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. அவை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விசாரணைகளின்போது , திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உடனேயே...
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும்...
வட மாகாணத்திற்கான, தலா ரூ. 50 இலட்சம் பெறுமதியான 25,000 சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த 25,000 வீட்டுத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக ஏற்கப்பட்டு வருகிறது....
யாழ்ப்பாணத்தில் பெரும் பணக்காரர்களை இலக்கு வைத்து நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அது தொடர்பில் வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள பணக்காரர்களை இலக்கு வைத்து அவர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தன்னை ஒரு மந்திரவாதியாக அறிமுகம் செய்வதுடன் குறித்த நபர்களுக்கு...
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு பொலிஸாரினால் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக 076 545 3454 என்ற Whats App தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதேநேரம்...
இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய...
பிரமிட் திட்டங்கள் இலங்கையில் சட்ட விரோதமானவை என்றும் பிரமிட் திட்டங்களில் பங்கேற்றல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் இலங்கை மத்திய வங்கி 8 பிரமிட் திட்டங்கள் பற்றி ஊடகங்கள் வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பச்சை குத்தும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தாததாலும், பல நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததாலும் எயிட்ஸ் உள்ளிட்ட சமூக நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை பச்சை குத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கிட்டத்தட்ட ஐயாயிரம் பச்சை குத்தும் நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் 140 மட்டுமே சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று...
விபத்துக்களில் சிக்கி மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன் வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கேட்டுக்கொண்டார். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையில் இடம் பெறவுள்ள கிரிக்கெட் போட்டி தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், திடீரென ஏற்படும்...
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது தண்டணைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி, பிரமிட் திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி பெயரிட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மத்திய...
கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார். மயிலிட்டி - தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் போயுள்ளார். இளைஞன் காணாமல்போனமை தொடர்பாக 2022.10.13 அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்தும் இதுவரை...
யாழ்.நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் திருட்டுக்கள் அதிகரித்து உள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வீடுகளுக்கு முன்பாக கடைகளுக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்திடுவோம் எனும் நோக்கில்...
எதிர்வரும் பண்டிகை காலத்தில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி,தாங்கள் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள்,சுற்றுலா பயணங்கள் பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,"நாட்டில் அண்மைய நாட்களில் திட்டமிடப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts