- Monday
- February 24th, 2025

மணிரத்னம் இயக்கிய கேங்ஸ்டர் படங்களில் நாயகன், தளபதி படங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்றுவரை அந்த படங்கள் பேசப்பட்டு வருகின்றனர். இதில் தளபதி படத்தில் ரஜினியும், மம்மூட்டியும் நண்பர்களாக நடித்திருந்தனர். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை காற்றுவெளியிடை படத்தை அடுத்து இயக்குகிறார் மணிரத்னம். அதற்கான கதை விவாதமும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம், இந்த படத்தில் யார் யார்...

நட்டி நடராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எங்கிட்ட மோதாதே’, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘புரூஸ்லீ’ ஆகிய படங்கள் வரும் மார்ச் 10-ந் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். கடந்த ஒருவார காலமாக இப்படம் குறிப்பிட்ட தேதியிலேயே வெளியாகும் என்று விளம்பரமும் செய்து வந்தனர். இந்நிலையில், ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’...

தெறி’ படத்தை இயக்கிய அட்லியுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிப்பதும் உறுதி செய்யப்பட்டது. விஜய் இப்படத்தில் பஞ்சாப் சிங் வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது, அவர்...

22 வருடங்களுக்கு முன்பு சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் பாட்ஷா. நக்மா, ரகுவரன், யுவராணி உள்பட பலர் நடித்த அப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். அப்படம் ரஜினி படங்களிலேயே அதிக வசூல் சாதனை புரிந்த படமானது. அதோடு, இப்போதும் தான் நடித்த படங்களில் தனக்கு அதிகம் பிடித்தமான படமாக ரஜினி குறிப்பிடுவதும் பாட்ஷாவைதான். அந்த அளவுக்கு...

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்திய, நடிகர் கமலஹாசன், அரசியலில் குதிப்பது குறித்து விவாதித்துள்ளார். நான் செய்யும் அரசியல், ஓட்டு வாங்குவதற் காக அல்ல, மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் அரசியல் என, கமல் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெ. மறைவை தொடர்ந்து, டுவிட்டரில், அதிரடி கருத்துகளை வெளியிட்டு வரும் கமல், மக்கள் பிரச்னைகள்...

கடந்த சில நாட்களாக பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுசித்ரா எதுவும் வாய் திறக்காத நிலையில், அவரது கணவர் கார்த்திக், சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை யாரோ சிலர் முடக்கிவிட்டதாகவும், அவர்கள்தான் தகாத பதிவுகளை வெளியிட்டதாகவும், தற்போது சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை திரும்ப பெற்றுவிட்டதாகவும் விளக்கம்...

பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் மாதவன் நடித்த அதிரடி திரைப்படமான `தம்பி' வெளியானது. அதன் பின்னர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீமான் விடுதலை சிறுத்தைகள்...

தனுஷ் தன்னை தாக்கவில்லை என்றும், விளையாட்டு எல்லை தாண்டி போனதில் காயம் ஏற்பட்டதாகவும் பாடகி சுசித்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நள்ளிரவு பார்ட்டியில் பாடகி சுசித்ரா, தனுஷ், சிம்பு கலந்து கொண்டனர். அப்போது தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதில் தனது கையில் காயம் ஏற்பட்டதாக பாடகி சுசித்ரா ட்வீட்டியிருந்தார். சுசித்ராவின் ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்வீட்டுகளில்...

சேது, காசி, பிதாமகன், அந்நியன் என சில படங்களில் மாறுபட்ட கெட்டப்பில் நடித்தவர் விக்ரம். அதனால் தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்தபடியாக ரிஸ்க் எடுத்து நடிக்கக்கூடிய ஒரு நடிகர் என்கிற இமேஜ் அவருக்கு உருவானது. ஆனபோதும், சமீபகாலமாக விக்ரமின் திறமைக்கு தீனி போடக்கூடிய அழுத்தமான கதாபாத்திரங்கள் அவருக்கு அமையவில்லை. அதனால் இள வட்ட நடிகர்களின் பாணிக்கு...

இசை படத்தின் தோல்வி காரணமாக இப்போதைக்கு படம் இயக்கப்போவதில்லை என்ற முடிவில் இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதேசமயம், தற்போது நடிப்பில் முழுக்கவனத்தை செலுத்தி வரும் அவர், இறைவி படத்தை அடுத்து செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அதையடுத்து மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் சம்பவாமி யுகே யுகே படத்தில் வில்லனாக நடித்து வருபவர்,...

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியர், மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பள்ளி ஆவணங்களில்...

கேரளாவில் ஓடும் காரில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றி அவர் துணிச்சலாக புகார் கொடுத்ததை தொடர்ந்து இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதைப்போல பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு...

கவுதம் மேனன் தற்போது தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் நடுவே விக்ரமை வைத்து ’துருவ நட்சத்திரம்’ என்கிற படத்தையும் இயக்கி வருகிறார். படங்களை இயக்குவதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் கவுதம் மேனன். அந்த வரிசையில், அரவிந்த்சாமி அடுத்ததாக நடிக்கவிருக்கவிருக்கும் ‘நரகாசுரன்’ என்ற படத்தை...

பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி திருச் சூரில் நடந்த படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பும்போது கடத்தப்பட்டார். ஓடும் காருக்குள் பாவனாவை அந்த கும்பல் பாலியல் தொல்லை கொடுத்து அதனை செல்போனிலும் பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக பாவனா கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின், பிரபல ரவுடி...

இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' படத்தில் தவக்களை என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து காமெடி நடிகராக பிரபலமானவர் சிட்டிபாபு என்ற தவக்களை. இவருக்கு வயது 42. இவர் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர்...

இந்திய அளவில் அதிக தொகையை வசூல் செய்த தென்னிந்திய சினிமா பாகுபலி படம் தான். பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பரபரப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது. தற்போது பாகுபலி படத்தின் முக்கிய...

தமிழில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானவர் பாவனா. அதன்பிறகு ஜெயங்கொண்டான், அசல் உள்பட பல படங்களில் நடித்தவருக்கு சமீபகாலமாக தமிழில் படங்கள் இல்லை. அதனால் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாவனாவின் முன்னாள் கார் டிரைவரும், அவரது கூட்டாளிகளம் சேர்ந்து பாவனாவை கடத்திச்சென்று பாலியல்...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளநிலையில், அடுத்து கிராபிக்ஸ் பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறார் ஷங்கர். 2.0 படத்தை தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18 ஆம் தேதியன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். சுமார் 350 கோடியில் தயாராகியுள்ள 2.0 படத்தை 500 கோடிக்கு விற்க திட்டமிட்டுள்ளது லைகா. இந்த 500...

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கவிருக்கும் 'சாமி 2' கதாநாயகியாக நடிகர் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். இத்தகவலை 'சாமி 2' தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உறுதி செய்துள்ளார். மேலும், மீண்டும் தனது வெற்றிக்கு கூட்டணியில் இணைய ஆர்வமாக உள்ளதாக த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் படமான 'சாமி'...

`துப்பாக்கி', `கத்தி' வெற்றிப் படங்களுக்கு பிறகு விஜய் மீண்டும் ஏ.ஆர்முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. `பைரவா' படத்திற்கு பிறகு விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்பாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு ஏ.ஆர்.முருகதாசுடன் இணைவார் என்று கூறப்படும் நிலையில், விஜய்-யின் 62-ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவில்லை என்ற தகவல்...

All posts loaded
No more posts