- Wednesday
- January 22nd, 2025
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 20 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்த நபரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அதே இடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி 20 இலட்சம் ரூபாவை ஏமாற்றியுள்ளார். (more…)
இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 6ஆவது பருவகாலத்திற்கான சம்பியனாக மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவாகியுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. (more…)
தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களான சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சுப்ரிம் ஸ்டார் சரத்குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய நடிகர்களின் திரைப்படங்களை இலங்கைக்கு கொள்வனவு செய்வதை நிறுத்த வேண்டும் என (more…)
'விஸ்வரூபம்'பெப்ரவரி 7ஆம் தேதி (வியாக்கிழமை) வெளியாகிறது. இதை கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இது குறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தடை பல கடந்து உங்கள் விஸ்வரூபம் வரும் வியாக்கிழமை 7ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.நீதி சற்றே நின்று வந்தாலும் அன்றே ஆனவனவெல்லாம் செய்து, எனக்கு உடன் உதவி செய்தமைக்கு மான்புமிகு முதலமைச்சர்க்கு நன்றி. (more…)
தென்னிந்திய திரைப்பட நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர்களான ஏக்கநாயக்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் ஜமாஅத் நிர்வாகத்திடம் வாக்குறுதி அளித்துள்ளனர். (more…)
உலக நாயகன் கமல்ஹாஸன் தயாரித்து நடித்துள்ள 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று தடை விதித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் திரையிடலாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் நேற்று இரவு 10.20க்கு தீர்ப்பு வழங்கியிருந்தது. (more…)
'அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கி விட்டனர். இந்த அரசியல் விளையாட்டை ஆடுவது யார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (more…)
நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தை திரையிடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இப்படத்தைத் திரையிடலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் அனுமதி அளித்தார்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஸ்வரூபம் திரைப்படம் தீர்ப்பு மீண்டும் நேற்றிரவு 10 மணிக்கு அறிவிக்கப்படுவதாக இருந்த போதிலும் 10.20 மணிக்கே தீர்ப்பளிக்கப்பட்டது. (more…)
சினிமாத்துறையில் எப்போதுமே புதிய முயற்சிகளையும், புதிய விஞ்ஞான வளர்ச்சிகளையும் வரவேற்று ஆதரிப்பவர் கமல்ஹாசன். இவர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் விஸ்வரூபம் AURO 3D என்ற புதிய ஒலியமைப்பில் உருவாகிவருகிறது. மேலும் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச் சேவை மூலம் ஒளிபரப்ப முயற்சி நடக்கிறது. படம் வெளியாகும் அதே நாளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளனர். (more…)