- Monday
- December 23rd, 2024
தேசிய கட்சியான பா.ஜனதா தமிழகத்தின் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்த தவறுவது இல்லை. ஆனால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பதில் பா.ஜனதா தொடர்ந்து குழப்பத்தில் இருந்து வந்தது. யாரை வேட்பாளராக நிறுத்தலாம்? என்று தீவிர பரிசீலனை நடந்தது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகை கவுதமி, இசை...
ரஜினியின் நடிப்பில் 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு 99 சதவீதம் படங்களில் பாலிவுட் நடிகைகள்தான் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். எந்திரன் படத்தில் ஐஸ்வர்யராய், கோச்சடையானில் தீபிகா படுகோனே, லிங்காவில் சோனாக்ஷி சின்ஹா, கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே என பாலிவுட் ஹீரோயின்களின் ஆதிக்கம்தான் அதிகமாக காணப்படுகிறது. அந்த வரிசையில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் புதிய...
அஜித்குமார் நடித்து வரும் ‘விவேகம்’ அவரது 57-வது படமாக வெளிவர இருக்கிறது. அதிரடி கதையம்சத்துடன் திகில் படமாக தயாராகிறது. இந்த படத்தை சிவா டைரக்டு செய்து வருகிறார். இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என்ற இரண்டு படங்களை இயக்கி வெளியிட்டார். இந்த படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தன. இதனால், ‘விவேகம்’ படத்தில்...
சிறிய பட்ஜெட்டில் கோலி சோடாவை கொடுத்து வெற்றி பெற்ற விஜய் மில்டன், பெரிய பட்ஜெட்டில் பத்து எண்றதுக்குள்ள படத்தை கொடுத்து தோல்வி அடைந்தார். ஒரு வெற்றி, ஒரு தோல்விக்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கி உள்ள படம் கடுகு. இதில் பரத், ராஜகுமாரன், சுபிக்ஷா, ராதிகா பிரதிஷ்டா உள்பட பலர் நடித்துள்ளார்கள். எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார்....
ஜித்தன் 2, கிரிங் கிரிங் போன்ற திகில் படங்களை இயக்கியவர் ராகுல். இவர் தற்போது இயக்கி இருக்கும் 3வது திகில் படம் 1 ஏ.எம் இதில் புதுமுகங்கள் மோகன், சவ்ரவ், பிரதீப் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திக் இசை அமைத்துள்ளார். ஆர்.பி.என்., சினிமா சார்பில் இயக்குனர் ராகுலே தயாரித்தும் உள்ளார். படம்...
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த டிரைலர் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ‘பாகுபலி-2’ டிரைலர் 2 நிமிடம் 20 வினாடிகள் ஓடக்கூடியதாக தயாராகியுள்ளதாம். இந்த டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும்படியும் அமைக்கப்பட்டுள்ளதாம். படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் காட்சிகளில்...
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் மலையாள ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான். அவரது ஒர்க்கிங் ஸ்டைல் பிடித்துப்போகவே விக்ரமை வைத்து தான் இயக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்திற்கும் அவரையே ஒளிப்பதிவாளராக பணியாற்ற வைத்தார் கௌதம் மேனன். சும்மா சொல்லக்கூடாது படப்பிடிப்பின் ஆரம்பத்திலேயே ஐந்து நிமிட...
பெரும்பாலும் படப்பிடிப்பு தளங்களில் நடிகர் - நடிகைகள் கேரவனுக்குள் அமர்ந்து கடலை போடுவது வழக்கம். கடலை என்றால் ஏதாவது ஜாலியாக பேசிக்கொண்டிருப்பார்கள். சிலர் சீட்டு விளையாடுவார்கள். சிலர் சினிமா உலகத்துக் கதைகளை பேசுவார்கள். இன்னும் சிலர் வீடியோ கேம் விளையாடுவார்கள். கிராமப்புறங்களுக்குப் போனால் கிரிக்கெட் கூட விளையாடுவார்கள். இப்படித்தான் படப்பிடிப்பு தளங்களில் நடிகர் நடிகைகளை ஓய்வு...
அமலாபால் தற்போது தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘வடசென்னை’ படங்களில் ஜோடியாக நடிக்கிறார். இதுபற்றி கேட்ட போது அமலா பால் அளித்த பதில்... “தனுஷ் ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்தேன். இப்போது அதன் 2-வது பாகத்திலும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம். தனுஷ் எனக்கு பிடித்த நடிகர். அவரிடம் பலவித திறமைகள் இருக்கின்றன. கதை, கதாபாத்திரங்களை கவனமாக...
தற்போதைக்கு தமிழ் சினிமாவில் கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான். தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகிக் கொண்டே வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதியை வைத்து ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தியை வைத்து ‘காஷ்மோரா’ படத்தை...
நடிகர் கமல்ஹாசன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- ‘விஸ்வரூபம்’ படத்துக்கு பிறகு எழுந்த பிரச்சனைக்கு காரணம் இஸ்லாமியர்கள் அல்ல. அரசியல்வாதிகள் தான் முழுக்க முழுக்க காரணம். எனது படத்தை வெளியிடவிடாமல் தடுத்ததே அப்போதைய ஆட்சியில் இருந்தவர்கள் தான். நான் பகுத்தறிவாதத்தை பேசிக்கொண்டேதான் இருப்பேன். அரசியல் வர்த்தகம் ஆகிவிட்டது. நிகழ்கால அரசியலுக்கு தீங்கு...
ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி, கோவை சரளா ஆகியோரது நடிப்பில், இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் ராகவா லாரன்ஸுக்கு கொடுக்கப்பட்ட ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், ரஜினி ரசிகர்களை கோபத்திற்கும் ஆளாகியுள்ளது. இந்நிலையில், படம்...
தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் 'பவர் பாண்டி' படத்தின் இசை நேற்று வெளியானது. 'ஜோக்கர்' படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டனின் திறமையைப் பார்த்து அவருக்கு 'பவர் பாண்டி' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தனுஷ். அது திரையுலகில் உள்ள பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளராக கடந்த சில வருடங்களாக இருந்த அனிருத்தை விட்டு ஷான்...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையிலுள்ள பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் தாடி வைத்த நடுத்தர வயது கெட்டப்பில் விஜய் நடித்து வருகிறார். இந்த வேடத்துக்காக ஏற்கனவே தான் இருந்ததைவிட ஓரளவு வெயிட் போட்டுள்ளார் விஜய். ஆனால் இதன்பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில்...
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். இந்த படத்தில் காக்கி சட்டையைத் தொடர்ந்து மீண்டும் போலீசாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் அதை விட ஆக்சன் கலந்த போலீசாக நடிக்கிறார். கூடவே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகி என்பதால் அவருக்கு இந்த கதையில் ரொமான்சை குறைத்து வித்தியாசமான வேடத்தில் அவரை நடிக்க வைத்துள்ளார்...
சந்தானம் நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்துக்கு சிம்பு இசையமைத்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தே. நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக அவதாரம் எடுத்த சிம்பு, இசையமைப்பாளராக அறிமுகமாவது இந்த படத்தில்தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தன்னுடைய இசையில் இந்த படத்திற்காக சிம்பு 5 பாடல்களை அமைத்துள்ளார். அதில் ஒரு பாடலை அனிருத்...
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்சுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அடைமொழியாக கொடுக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட இந்த அடைமொழி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ராகவா லாரன்ஸ் எப்போதும் புகழ்ச்சியை விரும்பாதவர். அப்படிப்பட்டவர், இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு விட்டாரே...
'அவள் பெயர் தமிழரசி' திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி தயாரித்திருக்கும் படம் 'விழித்திரு'. கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'விழித்திரு' படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவன் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் தன்ஷிகா, அபிநயா, தம்பி ராமையா,...
அக்கா ஸ்ருதி, மூன்று மொழிகளில் பிசியான நடிகையாக உருவெடுத்து விட்டாலும், தங்கை அக் ஷராவுக்கு, இன்னும், தன் திறமையை காட்டும் வகையிலான வாய்ப்பு கிடைக்கவில்லை. அஜித்தின் விவேகம் படத்தில், காஜல் அகர்வாலுடன் அக் ஷராவும் நடித்து வருகிறார். இதில், அக் ஷரா ஹீரோயின் இல்லையாம். வில்லன்களால் கடத்தப்பட்ட பெண்ணாக அக் ஷரா நடிக்கிறார். அவரை கடத்தல்காரர்களிடமிருந்து...
விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போ இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கிய படப்பிடிப்பு தளமான பின்னி மில்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ்,...
Loading posts...
All posts loaded
No more posts