- Wednesday
- January 22nd, 2025
மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த திரிஷா, சமீபகாலமாக அதிரடியான வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, தனுசுடன் நடித்த கொடி படத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு அதிரடி வில்லியாக நடித்திருந்தார் திரிஷா. அதையடுத்து திரிஷாவைத்தேடி ஆக்சன் கலந்த வேடங்கள் செல்லத் தொடங்கின. அந்த வகையில், நாயகி படத்தை அடுத்து சதுரங்கவேட்டை-2, மோகினி, கர்ஜனை என பல படங்களில்...
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில் பெயர் போனவர் நடிகர் சரத்குமார். திரையுலகிற்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், நாளுக்கு நாள் அவரது உடலழகு மெருகேறி கொண்டே போகின்றது. இன்றைய தலைமுறை கதாநாயகர்களுக்கும் அவர் போட்டியாக இருப்பதற்கு அவரின் கட்டுக்கோப்பான உடலமைப்பும் ஒரு மிக முக்கிய காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். சவாலான கதைக்களங்கள் மீது பேரார்வம்...
தனுஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ப.பாண்டி’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி நேற்று ரசிகர்களிடம் டுவிட்டர் பக்கத்தில் நேரடியாக பேசிய தனுஷ், தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, நான் நடிக்கவிருக்கும் ‘மாரி-2’ படத்தை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளோம். கார்த்திக் சுப்பாராஜ் உடன் இணையவிருக்கும் படம் அக்டோபர் மாதத்தில் தொடங்கவிருக்கிறது....
இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவன் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஸ்டாராகி நிற்பான் என இயக்குனர் பாலா விக்ராந்தை பாராட்டியுள்ளார். சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள படம் தொண்டன். இந்த படத்தில் விக்ராந்த் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா பேசும்போது, நான் இங்கிருந்து பார்த்துக்கிட்டே இருக்கேன்....
பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தை பார்த்து வியந்த ரஜினி, அவருக்கு தன்னை வைத்து கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பினை கொடுத்தார். அந்த படத்தையும் சிறப்பாக இயக்கி ரஜினி மனதில் இடம்பிடித்தார் ரஞ்சித். அதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தில் நடித்துள்ள ரஜினி, மீண்டும் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். ரஜினியின் கேங்ஸ்டர் படமான பாட்ஷா...
சமீபகாலமாக இரண்டு மணி நேரத்தைத் தாண்டும் படங்களை ரசிகர்கள் அவ்வளவாக ரசிப்பதில்லை. ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக சொல்வதையே ரசிக்கிறார்கள். அதேபோல் பாடல்களையும் அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒன்றிரண்டு பாடல்களோடு நிறுத்திக்கொள்கிறார்கள் சினிமாக்காரர்களும். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் 2.ஓ படத்தில் இரண்டே பாடல்கள்தானாம். ரஜினியின் படங்களில் ஓப்பனிங் பாடல்கள் இருக்கும்....
விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் என்று மூன்று ஜோடிகள். விஜய் அடுத்து நடிக்கவிருப்பது ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில். ஏஆர்.முருகதாஸ் - விஜய் இணைகிறார்கள் என்பது மட்டும் தான் உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரகுல்ப்ரீத் சிங் நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது....
விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் சத்யராஜின் மகளான அனுயா பிரசவ வலியால் துடிக்க, அங்கிருந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில், கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே இருந்துகொண்டு, அங்கிருந்து வெப் கேமரா மூலம் மருத்துவரின் ஆலோசனை பெற்று அந்த குழந்தையையும், அம்மாவையும் காப்பாற்றுவார்கள். இந்த காட்சி போன்று தற்போது உண்மையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது....
அடுத்தடுத்து படம் இயக்காதீங்க மாப்பிள்ளை என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷிடம் கூறியுள்ளாராம். நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகராக இருந்து வரும் தனுஷ் பவர் பாண்டி சாரி ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். தனது அப்பாவின் முதல் பட ஹீரோவான ராஜ் கிரணையே தனது முதல் ஹீரோவாக ஆக்கியுள்ளார். படத்தில் ஸ்டண்ட்...
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெருப்புடா’ படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள சிவாஜியின் ‘அன்னை இல்லத்தில்’ நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டு படத்தின் ஆடியோவை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர்கள் விவேக், விஷால், பிரபு, சத்யராஜ், தனுஷ், ராகவா லாரன்ஸ், கார்த்தி, விஜய்யின் மனைவி சங்கீதா, நிக்கி கல்ராணி, இயக்குனர் விக்ரமன்...
அமெரிக்காவில் இசைக்கச்சேரியில் பிசியாக இருக்கும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இயைராஜாவுடனான காப்புரிமை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இளையராஜாவும், நானும் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்கள். தங்களுக்கிடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும் என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். காப்புரிமை பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என்பது நாம்...
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில், நள்ளிரவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்த கமல், புகைமூட்டத்திற்கு நடுவே படி வழியாக இறங்கி வெளியேறினார். இவ்விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: என் வீட்டில் தீ விபத்து...
சிறந்த படங்களுக்கான 64-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குனர் பிரியதர்சன் தலைமையிலான குழு இதை அறிவித்தது. அதன் முழுவிவரங்களை கீழே பார்ப்போம். தேசிய அளவில் சிறந்த படமாக மராத்தி மொழியில் வெளிவந்த ‘காசவ்’ தேர்வு பெற்றது. சிறந்த நடிகராக அக்ஷய் குமார் விருது பெறுகிறார். ‘ருஷ்டம்’ படத்தில் நடித்தற்காக இந்த விருது கிடைத்துள்ளது. இவர்...
சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த பாடலாசிரியர் விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மதுரை படத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வைரமுத்துவுக்கு இது 7-வது தேசிய விருதாகும். இதுகுறித்து அவர் கூறும்போதும், இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய விருதை...
`சிறுத்தை' சிவா இயக்கத்தில் தல அஜித் தற்போது நடித்து வரும் படம் `விவேகம்'. அஜித் நடித்துள்ள படங்களிலேயே பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது. இதுவரை `விவேகம்' படத்தின் மூன்று மாறுபட்ட போஸ்டர்களை வெளியிட்டுள்ள படக்குழு, அஜித் பிறந்தநாளில், அவரது ரசிகர்களுக்கு...
வாலு படத்தின் இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இப்போது இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடிக்க இருக்கிறார். 'கங்காரு', 'வந்தாமல', 'நிலா மீது காதல்', 'அகடம்', உட்பட பல படங்களில் நடித்துள்ள ஸ்ரீப்ரியங்காவுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, வெறுத்துப்போன அவர், தன் சொந்த...
சித்திக் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் பாஸ்கர் தி ராஸ்கல். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீ-மேக் பண்ண இருப்பதாகவும், அவற்றை தானே இயக்கவிருப்பதாக கூறி வந்தார் இயக்குநர் சித்திக். தமிழ் ரீமேக்கில் மம்முட்டி வேடத்தில் ரஜினி நடிப்பதாக எல்லாம் சொல்லப்பட்டு, தற்போது அரவிந்த்சாமி நடிக்க...
பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான், இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் மாதவன் நடித்த `வாழ்த்துக்கள்' திரைப்படம் வெளியானது. கடந்த 2013-ல் `நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்....
வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, அஜித்தை வைத்து மூன்றாவது முறையாக இயக்கும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அஜித்தின் சிக்ஸ் பேக்கை பார்த்து அவருடைய ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். தொடர்ந்து விவேகம் படத்தில் அஜித்தின் கெட்டப்பை வெளிப்படுத்துவது போல் புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் விவேகம் படம் பற்றி தொடர்ந்து...
போகன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. தற்போது இவர், டிக் டிக் டிக் மற்றும் வனமகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வனமகன் படத்தில், சாயீஷா சைகல் என்பவர் நடிக்கிறார். இவர், ஏற்கனவே, தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள்,...
Loading posts...
All posts loaded
No more posts