- Sunday
- February 23rd, 2025

36 வயதினிலே படத்திற்குப் பிறகு ஜோதிகா நடித்து வெளிவர உள்ள மகளிர் மட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய ஜோதிகா “பெண்களுக்கு மரியாதை கொடுங்கள், ஒரு படத்தில் நாயகனுக்கு 4 நாயகிகள் வைக்காதீர்கள், நாயகன் பின்னால் நாயகி சென்று ஐ லவ் யூ சொல்வது போன்ற காட்சிகளை நிறுத்துங்கள்,” என திரைப்பட...

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய படப்பிடிப்பில் வடிவேலு, விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை ராஜஸ்தான், சென்னை என ரொம்பவும் வெப்பமான...

சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ்...

தமிழ் சினிமா எம் ஜி ஆர், சிவாஜி என்கிற இரு ஆளுமைகள் நடித்துக் கொண்டிருந்த போது தங்களுக்கென்று ரசிகர் மன்றங்கள் வைத்திருந்தார்கள். அதைத் தாண்டி தங்களுக்கு பாராட்டு விழா நடத்தவோ, பட்டங்கள் வேண்டியோ மத்திய மாநில அரசுகளிடம் மனு கொடுத்ததில்லை. இதற்காக திரையுலகின் சங்கங்கள், அமைப்புகளை தங்கள் வசதிக்கு வளைத்துக் கொண்டதுமில்லை. வாரக் கடைசியில் சொந்த...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். அவர் தற்போது `சபாஷ் நாயுடு' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர, சிக்கலில் இருந்த `விஸ்வரூபம்' படத்தின் இரண்டாவது பாகத்தை வெளியிடவும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார். இப்படமும் இந்த ஆண்டு வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர்...

திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகும் திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இயக்குநர் பிரியதர்ஷனின் உதவியாளரும், 'நடிகவேல்' எம் ஆர் ராதாவின் பேரனுமான அறிமுக இயக்குநர் ஹைக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. இப்படத்தில் ஜீவா - ஸ்ரீதிவ்யா - சூரி முன்னணி...

இந்தி நடிகர் அக்ஷய் குமார் ‘ருஸ்டம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச்சென்றார். அவர் தேசிய விருது பெறுவது இதுவே முதல் முறை. இந்த நிலையில், அக்ஷய் குமாருக்கு தேசிய விருது அளித்தது சரியல்ல என்று பரபரப்பான விவாதம் எழுந்தது. இதுபற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க...
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் `2.ஓ'. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் இப்படத்தின்...

நடிகர் தனுஷை உரிமை கொண்டாடிய வழக்கில் மேலூர் தம்பதியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரை, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமி தம்பதியரின் மகனான இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, இப்போது தயாரிப்பாளர், இயக்குநர்...

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்தின் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் - 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. ஏஏஏ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடங்கல்களுடன் நடந்து வருகிறது. இந்தப்படத்தில் சிம்பு நான்கு வேடங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஏஏஏ படம் பற்றி புதிய தகவல் வெளியானது. அதாவது,...

‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி-ரஞ்சித் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கிறார். ‘கபாலி’ படத்தைப் போன்றே இப்படத்திலும் ரஜினி டானாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், தற்போது மும்பையில் மிகப்பெரிய டானாக வலம்வந்த தமிழர் மிர்ஜா காஜி மஸ்தானின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை எடுக்கப்போவதாக...

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானா கான் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், நான்காவதாகவும் ஒரு வேடத்தில் நடித்து வருவதாக சிம்பு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால், நாளுக்கு நாள் இப்படம் மீதான எதிர்பார்ப்பு...

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் என்பவர் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 26-ந் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இந்நிலையில், இந்த...

“நான் எதற்கும் பயப்பட மாட்டேன்” என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம். “முடியாது, நடக்காது என்ற சொல்லே எனது அகராதியில் கிடையாது. சிறுவயதில் இருந்தே உன்னால் இதை செய்ய முடியாது என்று யாராவது சொன்னால் அதை வைராக்கியத்தோடு செய்து முடிக்கும் மனோபாவம் எனக்குள் இருக்கிறது. அந்த வேலையை செய்து...

விஜய் சேதுபதியும் நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது மீண்டும் இருவரும் புதிய படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் போடப்பட்டது. இப்படத்தில் கதநாயகி இருந்தாலும் விஜய்...

80-களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான, எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் சாருஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணனுமாவார். அதேபோல், 80, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ஜனகராஜ். சாருஹாசன் தமிழ் சினிமாவில் தற்போதும் சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால், ஜனகராஜோ சினிமாவை விட்டு...

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘வடசென்னை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தகையோடு படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. ‘விசாரணை’ படத்தை ஆஸ்கர் பரிந்துரைக்காக அனுப்ப காலஅவகாசம் தேவைப்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்ததாக இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் கூறியிருந்தார். ஆனால், இப்படத்தில் நடிப்பதாக கூறி முன்னதாக கால்ஷீட் கொடுத்த விஜய் சேதுபதி, படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில்...

அச்சம் என்பது மடமையடா படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வந்தார் கெளதம்மேனன். திடீரென்று ப.பாண்டி படத்தை இயக்கும் பணிகளில் தனுஷ் பிசியாகி விட்டதால், விக்ரம் நடிப்பில் துருவநட்சத்திரம் படவேலைகளை தொடங்கினார் கெளதம் மேனன். அதோடு, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே லண்டன் சென்று அப்படத்திற்கான பர்ஸ்ட் லுக், டீசரை...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள நடிகர் மம்மூட்டி இணைந்து நடித்த தளபதி படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று. தற்போது நடிகர் மம்மூட்டி ஒரு பேட்டியில் பேசும்போது ரஜினியை இயக்குவது தான் தன்னுடைய வாழ்நாள் கனவு என கூறியுள்ளார். மேலும் பல வருடங்களுக்கு முன்பு ´பூதக்கண்ணாடி´ என்ற படத்தின் கதையை ரஜினியிடம் கூறியதாகவும், ஆனால்...

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த கபாலி படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்தார். இளமை தோற்றத்தை விட வயதான தோற்றத்திற்குத்தான் அதிகமான காட்சிகள் படத்தில் இருந்தன. தன் வயதுக்குரிய தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்ததைப் பலரும் பாராட்டினர். இன்னமும் அவர் இருபது வயது கதாநாயகிகளுடன் டூயட் பாடுவதெல்லாம் அவருக்குச் சரியாக இருக்காது என்றே பல விமர்சகர்களும் கருத்து...

All posts loaded
No more posts