- Sunday
- February 23rd, 2025

காமெடி நடிகர் விவேக், அஜித்துடன் ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் விவேக்குக்கு அஜித் கொடுத்த பரிசு குறித்த செய்தியை வைரலாக பரவி வருகிறது. அதாவது ஒருமுறை அஜித்தும், விவேக்கும் காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அஜித் கையில் இருந்த...

பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் `ரங்கா' படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. சிபிராஜ் - நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துள்ளது. இயக்குனர் வினோத்தின் யோசனைப்படி, படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி உள்ளனர். எனினும் அதற்கான சூழ்நிலை, அரசியல்...

வருடக்கணக்கில் கிடப்பில் கிடந்த விஸ்வரூபம் 2 படம் விரைவில் வெளியாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் அறிகுறியாக, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார் கமல். விஸ்வரூபம் வெளியான உடனே, விஸ்வரூபம் 2 படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். விஸ்வரூபம் 2 படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடைபெற்றது....

டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். ஆனால், அதையடுத்து ரஜினி படத்தை ரஞ்சித் இயக்கப்போகிறார் என்றதும், சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டைரக்டர் ரஞ்சித் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை விடவில்லை. தங்கள் கூட்டணி வெற்றிகரமாக இருப்பதால் கபாலியிலும் அவரையே இசையமைக்க வைக்க விரும்பினார்....

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'விவேகம்'. இப்படத்தின் முதல் பார்வையும், படத்தின் தலைப்பும் பிப்ரவர் 2ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த முதல் பார்வையில் அஜித்தின் கட்டுமஸ்தான தோற்றமும், போஸ்டரின் டிசைனும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்...

போலீசில் சிக்கிவிட்டதாக ராணா தனது நண்பர் பிரபாஸுக்கு போன் செய்ய அவர் சொன்ன பதில் சூப்பர். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் பல்லாள தேவனாக நடித்துள்ளார் ராணா. படத்தில் தான் ராணாவுக்கு பிரபாஸை பிடிக்காது. ஆனால் நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்கள். அந்த நட்பு பொது இடங்களில் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்தே...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஏப்.28-ந் தேதி வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை இந்திய சினிமா படைத்த அனைத்து சாதனைகளையும் இந்த படம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது. விரைவில், இப்படத்தின் வசூல் ரூ.1000 கோடியை எட்டவிருக்கிறது. இந்நிலையில், எஸ்.எஸ்.ராஜமௌலியும், ரஜினியும் இணைவார்களா? என்ற ஒரு பேச்சு சினிமா வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே எஸ்.எஸ்.ராஜமௌலி,...

இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஹாப் தமிழா ஆதி உள்பட சில இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக நடித்து வருகிறார்கள். இவர்களைப்போலவே இசையமைப்பாளர் அனிருத்தும் ஹீரோவாக உருவெடுப்பார் என்று முன்பே கூறப்பட்டது. அவரும் வணக்கம் சென்னை என்ற படத்தில் ஒரு பாடலில் தோன்றி நடனமாடினார். தான் இசையமைத்த சில படங்களில் ஒரு காட்சியிலும் தோன்றி நடித்தார். ஆனால் அனிருத்...

விஷால்-கார்த்தி முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் `கருப்பு ராஜா வெள்ளை ராஜா'. மறைந்த இயக்குநர் சுபாஷ் எழுதியிருந்த கதையை நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா இயக்கி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ள இப்படத்தில், கதாநாயகியாக `வனமகன்' படத்தில் நடித்துள்ள ஷாயிஷா சய்கல் ஒப்பந்தமாகி இருக்கிறார். நடிகர் சங்க...

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையை அமைத்து அதில் பயணம் செய்து வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. அவர் நடிப்பில் வெளியான படங்களில், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதை, கதாபாத்திரம் என தேர்வு செய்து நடிக்கும் இவரை "மக்கள் செல்வன்" என்றும் அழைக்கின்றனர். சீனு ராமாசாமி இயக்கத்தில் கடந்த 2010-ல் வெளியான `தென்மேற்கு பருவக்காற்று' படத்தின்...

‘கபாலி’ படத்திற்கு பிறகு தன்ஷிகா நடித்து வரும் புதிய படம் ‘எங்க அம்மா ராணி’. இப்படத்தை பாணி என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் சமுத்திரகனியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட இப்படம் வருகிற மே 5-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைத்த அனுபவம் குறித்து...

கமல் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என உருவான ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில மாதங்களிலேயே இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், ஒருசில காரணங்களால் படம் இன்னும் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே...

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் `சாமி' படத்தில் நடித்த த்ரிஷாவையே `சாமி-2' விலும் நடிக்க...

இயக்குனர் கவுதம் மேனன் படத்துக்கு படம் ஏதோ ஒரு வகையில் புதுமை செய்து தன் படத்தை பற்றி பேச வைத்துக் கொண்டிருப்பார். அந்த வரிசையில் அவர் தற்போது இயக்கி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இரண்டு பாடல்களை வெளியிட்டிருப்பவர், இசை அமைப்பாளர் யார் என்பதை வெளியிடாமல் மிஸ்டர் எக்ஸ் என்ற பெயரில் சஸ்பென்சாக...

தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை பிடித்திருப்பவர் `வைகைப் புயல்' வடிவேலு. நகைச்சுவை, நடிப்பு மற்றும் தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் அனைத்து தரப்பினரையும் சிரித்து ரசிக்க வைத்திருக்கிறார். சில மாதங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலின் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெறாத...

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் டோனி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் படமாக எடுத்தார்கள். தற்போது, டோனியே நேரடியாக சினிமாவில் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தி சினிமாவில் அவர் தயாரிப்பாளராக களமிறங்கப்போவதாக செய்திகள் கூறுகிறது. இந்தி பட இயக்குனர் கரண்ஜோஹர், பிரபல ஹாக்கி வீரர் தியான்சந்த் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக...

தனது பெயரில் ட்விட்டரில் வெளியான பிரபலங்களின் கசாமுசா புகைப்படங்கள், வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார் பாடகி சுசித்ரா. பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சுசித்ரா தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு...

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். இதில் அஜித்துடன் காஜல்அகர்வால், அக்சராஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, முக்கிய வில்லனாக இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்த படம் இந்தி சினிமா ரசிகர்களையும் கருத்தில் கொண்டு தயாராகி வருவதால், விவேக் ஓபராய்க்கும் அதிக முக்கியத்துவம்...

தமிழ் சினிமாவில் மருத்துவத்துறையின் அவலங்களை வெளிச்சம் போட்ட படங்களில் விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ரமணா முக்கியமான படமாக இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61வது படத்திலும் மருத்துவத்துறையின் அவலங்களை தட்டிக் கேட்கிறாராம் விஜய். இந்த படத்தில் அப்பா விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுவதுமாக படமாக்கி விட்ட அட்லி, தற்போது...

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். திரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமாகி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் வினு சக்கரவர்த்தி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்....

All posts loaded
No more posts