- Thursday
- February 27th, 2025

ரஜினி, விஜய், அஜீத் என பிரபலங்களுடன் ஜோடியாக நடித்த நயன்தாரா தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மாயா, நீ எங்கே என் அன்பே படங்களில் நடித்தவர் தற்போது ‘டோரா’ படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடித்தபோதும் அவருக்கு ஜோடியாக இளம் ஹீரோக்கள் நடித்தனர். ஆனால் ‘டோரா’ படத்தில்...

அட்லி இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. அண்மையில் அட்லியை நேரில் வரவழைத்து பேசிய அஜித், தனக்கேற்ற கதை இருக்குமாறு கேட்டதாகவும், அதன்பிறகு அட்லி சொன்ன கதை அஜித்துக்கு பிடித்துப் போனதாகவும், அந்த கதையில் நடிக்க அஜித் விரும்பியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இவர்கள் இணையும் இந்த படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்...

'வீரம்', 'வேதாளம்' படங்களை தொடர்ந்து இயக்குநர் சிவாவும், அஜித்தும் மீண்டும் இணையும் படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. வழக்கம்போல் அஜித்குமார் அந்த பட பூஜையில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதில் அவரது மானேஜர் மட்டும் பூஜையில் கலந்து கொண்டார். வழக்கம்போல் இந்தப் படத்துக்கும் இன்னும் தலைப்பு வைக்கவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி முடிவு...

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் ஒருவழியாக ஜுலை 22-ந் தேதி வெளியாகப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, படத்துக்கான புரோமோஷன்கள் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், ‘கபாலி’ படத்தின் சிங்கப்பூர் வெளியீட்டு உரிமையை நடிகர் அருண்பாண்டியன் வாங்கியுள்ளார். அவர் தனது ஏபிஐ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வாங்கி இதை சிங்கப்பூரில் வெளியிடுகிறார். இதுவரை...

ரசிகர்களால் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் திகதி வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக, இன்று இப்படத்தை சென்சார் போர்டு அதிகாரிகள் பார்த்து, படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்....

"பீப்' பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அமைப்புகள் சுவாதி கொலைத் தொடர்பாக பெரிய அளவில் பேசவில்லை என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சிம்பு "பீப்' பாடல் பாடியதற்காக எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட சமூக அமைப்புகள், சுவாதி கொலைத் தொடர்பாக பெரிய அளவில் பேசவில்லை....

'டார்லிங்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் காட்டில் தற்போது அடைமழை பொழிந்து வருகிறது. நடிகராக அறிமுகமான 2 வருடங்களில் 4 படங்கள் அவரது நடிப்பில் வெளியாகி விட்டன. தற்போது 'கடவுள் இருக்கான் குமாரு', 'புரூஸ்லீ' படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக 3 புதிய படங்களில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷின் புதிய படமொன்றிற்கு நேற்று...

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 60' எந்த ஹிட் படத்தின் ரீமேக்கும் அல்ல என படக்குழு விளக்கமளித்திருக்கிறது. தெறியைத் தொடர்ந்து விஜய் தற்போது 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் இருவரும் நடித்து வருகின்றனர்....

விஜய்-அட்லி கூட்டணியில் வெளிவந்த ‘தெறி’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து, மீண்டும் அந்த கூட்டணி இணையப்போவதாக செய்திகள் வெளிவந்தது. அதனால், அட்லி அடுத்தாக விஜய் நடிக்கும் படத்தைத்தான் இயக்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது அட்லி அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அட்லியை தனது இல்லத்திற்கு...

ஜோதிகா, திருமணமாகி 8 வருட இடைவெளிக்கு பிறகு நடித்த ‘36 வயதினிலே’ படம் கடந்த வருடம் வெளியாகி வசூல் குவித்தது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டுஆர்யூ’ என்ற படத்தின் தமிழ் பதிப்பாக இதனை தயாரித்து வெளியிட்டனர். அதன் பிறகு புதிய படத்தில் நடிக்க ஜோதிகா கதை கேட்டு வந்தார். ‘குற்றம்...

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இருமுகன்’. இதில் விக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் தெலுங்கு டைட்டில் மற்றும் டீசரை ஆந்திராவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி வெளியிட்டார். விக்ரம், நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேரும் இப்படத்திற்கு தெலுங்கில் “இன்கோகடு” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற, தமிழ், மலையாளம், தெலுங்கு...

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ராவ் ஹிதாரி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பு ஊட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடம் ஏற்கிறார். வழக்கம் போல படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் வைரமுத்து. இப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது. கார்த்தியின் பார்வை...

அமெரிக்கா செல்வதற்கு முன், கபாலி படத்தை முழுமையாக பார்த்த ரஜினி, அவருக்கே உரிய பாணியில், படம் ச்சும்மா அப்படியே பிரமாதமா வந்திருக்கு என, கைகளை அகல விரித்து சொல்லி சந்தோஷப்பட்டார் என்று, கபாலி பட தயாரிப்பாளர் எஸ்.தாணு பேட்டியளித்தார். கபாலி படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பட வெளியீடு போன்ற பரபரப்பான சூழ்நிலையில்...

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள அவர்களது 100வது படத்தை சுந்தர் .சி இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கப் போகிறார் என கடந்த பத்து நாட்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஏற்கெனவே, இந்தப் படத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வந்து, அதன் பின் சூர்யா தரப்பிலிருந்து...

திரைப்பட பின்னணி பாடகர், கே.ஜே.ஜேசுதாஸ், இந்து மதத்துக்கு மாறியதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, ‘டுவிட்டர்’ சமூக தளத்தில் வெளியிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ், தமிழ் உட்பட, 14 இந்திய மொழிகளில், 45 ஆயிரம் திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். ஏழு முறை தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண்...

நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டுவதாக நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் வாக்குறுதி அளித்து பொறுப்புக்கு வந்தனர். அந்த இடத்தில் 5 மாடி கட்டிடம் கட்டப்படும் என்றும், அதில் 1,000 பேர் அமரும் அரங்கம், கல்யாண மண்டபம், பிரிவியூ...

‘வேதாளம்’ படத்திற்கு பிறகு அஜித், தன்னுடைய காலில் ஏற்பட்ட வலியால் அதற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். டாக்டர்கள் அவரை 3 மாத காலம் ஓய்வெடுக்கச் சொல்லி வலியுறுத்தியதால் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். இதற்கிடையில், தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை மறுபடியும் ‘சிறுத்தை’ சிவாவுக்கே வழங்கியிருந்தார். அஜித் ஓய்வில்...

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா...’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் டீசரும் இணையதளத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில், கபாலி படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ என்ற பாடல் தலைப்பை தற்போது விக்ரம் பிரபு கைப்பற்றியுள்ளார். இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘நெருப்புடா’ என்று தலைப்பு...

சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான்கராத்தே போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் அனிருத். இந்த படங்களில் அனிருத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதால் தற்போது தனது பிரமாண்ட படமான ரெமோவிலும் அவரையே இசையமைக்க வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். வேதாளம் படத்திற்கு பிறகு தனது மார்க்கெட் மந்தமாகியிருப்பதால் இந்த படத்தின் சூப்பர் ஹிட் பாடல் களை கொடுத்து மீண்டும் பரபரப்பான இசையமைப்பாளராகிவிட வேண்டும்...

மன உறுதி இருந்தால் புற்றுநோயை எளிதில் வெல்ல முடியும் என்பதற்கு நானே சாட்சி என நடிகை கெளதமி தெரிவித்துள்ளார். பிரபல நடிகை கௌதமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அதிலிருந்து மீண்ட கௌதமி, மற்ற புற்றுநோயாளிகளுக்கு உதவுவதற்காக லைஃப் அகைன் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி...

All posts loaded
No more posts