‘காலா’ படத்தில் ரஜினியுடன் இணையும் மம்முட்டி?

ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் உள்ள குடிசைப்பகுதிகள், கடை வீதிகள், வழிபாட்டு தலங்களில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்நடிகைகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி ஜிப்பா, முஸ்லிம் குல்லா அணிந்து மிடுக்காக நடந்து சென்று மக்களிடம் குறைகள் கேட்பது போன்றும், மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து குறுகலான தெருக்களில் பயணித்து தமிழர்களுக்கு உதவுவது...

காலா படத்தின் ஆரம்ப காட்சியில் ரஜினி பேசும் பஞ்ச் வசனம் லீக்!

பாட்ஷா படத்துக்கு முன்பு வரை ரஜினி படங்களின் உருவாக்க முறையே வேறு. படங்கள் அறிவிக்கப்படும். முதல் நாளே படப்பிடிப்பு காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகும். பின்னர் குறித்த இடைவெளியில் சில ஸ்டில்களை பிஆர்ஓக்கள் தருவார்கள். அடுத்து படம் வெளியாகும். முத்து படத்துக்குப் பிறகு படங்களின் ஸ்டில்களை வெளியிடுவதில் கெடுபிடி காட்டினர். குறிப்பாக பாபாவில் அனுமதியின்றி எந்தப் படமும்...
Ad Widget

விஜய் படத்திலிருந்து லைகா விலகல்?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தற்போது மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் தெலுங்குப்படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஸ்பைடர் பட பணிகளை முடித்துவிட்டு, 2017 தீபாவளிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக...

`விவேகம்’ படத்தை தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த அறிவிப்பு என்ன?

அஜித் தற்போது `சிறுத்தை' சிவா இயக்கத்தில் `விவேகம்' படத்தில் நடித்து வருகிறார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள `விவேகம்' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான `விவேகம்' படத்தின் டீசர்,...

தமிழ் மொழியின் சிறப்பு: `சங்கமித்ரா’ குறித்து படக்குழு வெளியிட்டுள்ள தகவல்

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா'. ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்தின் தொடக்க விழா பிரான்சில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில், அதாவது ரூ. 300 கோடி செலவில் உருவாக உள்ள...

வித்யா பாலனுக்கு பதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் யூமா குரேஷி!

பா.ரஞ்சித் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் உருவான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை அடுத்து, “எந்திரன்-2” படத்திற்கு பிறகு, ரஜினியின் அடுத்த படத்தையும் ரஞ்சித்தே இயக்குவது என்று முடிவானது. இப்படத்தை தனுஷின் wunderbar தயாரிக்கிறது. மும்பையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகிறது என்ற தகவலை தயாரிப்பு...

சாமி வெற்றிக் கூட்டணி உடைந்தது!!

ஹரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் விக்ரம், த்ரிஷா, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடிக்க 2003ம் ஆண்டு வெளிவந்த 'சாமி' படம் மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பரபரப்பான ஆக்ஷன் ஒரு காரணமாக இருந்தாலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இடம் பெற்ற பாடல்களும் முக்கிய காரணமாக இருந்தது. படத்தில்...

ரஜினியின் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்

கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ஆம் தேதி சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் துவங்கவிருக்கிறது. படத்திற்கு பூஜை போடப்படும் அன்று பப்ளிசிட்டி செய்வதற்காக ரஜினி- 161 படத்திற்கான ரஜினி சம்பந்தப்பட்ட ஃபோட்டோ ஷூட் சமீபத்தில் நடந்தது. பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் இப்படத்தின் கதை மும்பை தாராவி பகுதியில்...

‘கேப்டன்’ ஜேக் ஸ்பாரோவை கதிகலங்க வைக்கும் வைரஸ்!

உலக நாடுகளை மிரட்டிவரும் ‘Wannacry ransomware' எனப்படும் இணைய வைரஸ் ‘பைரட்ஸ் ஆப் தி கரீபியன் - 5’ திரைப்படத்தை ஹாக் செய்து கோடிக்கணக்கில் பணத்தை கேட்டு மிரட்டிவருகிறது. ஏறத்தாழ 150 நாடுகளுக்கு மேல் இணையத்தின் மூலம் பரவி பன்முனை சைபர் தாக்குதலை நடத்திவருகிறது ‘WannaCry ransomware’ எனப்படும் இணைய வைரஸ். இதுவரை 3 லட்சம்...

பணத்துக்காகவே டி.வி. தொகுப்பாளர் ஆனேன்: கமல்

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கமல், முதன்முறையாக சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார். இந்தியில் அமிதாப் பச்சன், சல்மான்கான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிகழ்ச்சிக்குண்டான டீசரை தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் காந்த கண்களை வைத்தே அந்த டீசரை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இந்நிலையில்,...

மேஜிக் கலைஞராக நடிக்கும் விஜய்!

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். சென்னை, மதுரையில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்...

சுசி லீக்ஸில் தொடர்ந்து பகிரப்படும் தகவல்கள்: கமிஷனர் அலுவலகத்தில் சுசித்ரா புகார்

கடந்த மார்ச் மாதம் சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் ஆபாச படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது. இவ்வாறு வெளியாகும் படத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா கூறி வந்தார். பின்னர் தனது டுவிட்டர்...

நான் அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன்தான் முடிவு செய்யவேண்டும்: ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இன்று காலை 8 மணி...

ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுத்த மும்பை தாதா மகன்! திரையுலகில் பெரும் பரபரப்பு!!

மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தாரவி பகுதியை மையாக...

உண்மை சம்பவத்தை இயக்குகிறார் சுதா

இறுதிச்சுற்று படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் சுதா கொங்கரா. தற்போது தெலுங்கில் இறுதிசுற்றான குருவையும் முடித்து விட்டார். தற்போது அடுத்த தமிழ் படத்திற்கான வேலைகளை துவங்கி உள்ளார். அடுத்து சுதா இயக்கப்போகும் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திகில் படம். இதில் விஜய்சேதுபதி நடிக்கலாம் என்று தெரிகிறது. இதுபற்றி சுதா கொங்கரா கூறியதாவது:...

விஜய் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு காத்திருக்கும் மற்றொரு விருந்து

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு `இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ஆம் தேதி வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதேநோளில் விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

விஜய்-61ல் இணைந்தார் ஆண்டவன் கட்டளை அதிகாரி!

மலையாள திரையுலகில் 'லெப்ட் ரைட் லெப்ட்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஹரீஷ் பெராடி. கம்யூனிஸ சிந்தனையுடன் உருவான அந்தப்படத்தில் அரசியல் ராஜதந்திரங்களை உள்ளடக்கிய அமைச்சராக மிக அருமையாக வில்லத்தனம் காட்டியிருந்தார் ஹரீஷ் பெராடி... அதன்பின் தற்போது அங்கே முன்னணி நடிகர்கள் படங்களில் தவறாது இடம்பெறவும் ஆரம்பித்து விட்டார். குறிப்பாக கடந்த வருடம்...

சமூக வலைத்தளங்களின் ஆபத்தை சொல்லும் ‘லென்ஸ்’

கிராஸ் ரூட் பிலிம்ஸ், மினி ஸ்டுடியோ நிறுவனங்கள் வழங்கும் படம் ‘லென்ஸ்’. இதில் ஆனந்தசாமி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அஷ்வதிலால், மிஷா கோ‌ஷல், ராஜாகிருஷ்ணன், உதயகுமார் உள்பட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது.... பொதுவாகவே மக்களுக்கு மற்றவர்களின் அந்தரங்க...

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்த `விவேகம்’ டீசர்

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விவேகம்' படத்தின் டீசரால், சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பித்த கிடுகிடுப்பு இன்னமும் அடங்கவில்லை. எங்கு சென்றாலும் `விவேகம்' என நகரின் சூடான தலைப்பாக மக்களால் பேசப்பட்டு வருகிறது. டீசரைப் பார்த்தவர்கள் அதை திரும்ப திரும்ப பலமுறை விரும்பி பார்க்கும் அளவுக்கு தல புயல் கடுமையாக வீசியுள்ளது...

ஹீரோயின் ஆனார் பாபநாசம் எஸ்தர்

மலையாளத்தில் பிரபல குழந்தை நட்சத்திரம் எஸ்தர். 50க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பெரும்பாலும் ஹீரோயின்களின் குழந்தை பருவத்திலும், ஹீரோக்களின் தங்கையாகவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்தார். த்ரிஷ்யம் தமிழில் பாபாநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனபோதும், அதிலும் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தார். தெலுங்கு த்ரிஷயத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts