- Wednesday
- February 26th, 2025

பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி தமிழ் கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலமானார். இந்நிலையில், ஐபிஎல்-க்கு இணையாக தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் நடத்தும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை...

அமெரிக்கா சென்ற பாலிவுட் நடிகர் ஷாருக் கானை லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் நிறுத்திவைத்த சம்பவம் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அமெரிக்காவுக்கு போகும் போதெல்லாம் அங்குள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் சிக்கி படாதபாடு பட வேண்டியதாகி விடுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு அவர் அமெரிக்காவுக்கு சென்றபோது நியூ ஜெர்சி விமான...

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு அரைகுறை ஆடையில் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். தமிழில் முத்திரை, கம்பீரம் படங்களில் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திடீரென்று அரசியலில் குதித்தார். ராஷ்டிரிய ஆம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி வடமேற்கு மும்பை...

கபாலி படம் திரைக்கு வந்த பிறகு உலகம் முழுவதும் ரஜினியை பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ரஜினியின் இளையமகளும் இயக்குனருமான சவுந்தர்யா ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த...

இந்த வாரம் திரையுலகத்துக்கு சோதனையான வாரமாக அமைந்துள்ளது. முன்னாள் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி நேற்று காலமானார். அவரது மறைவு செய்தி வெளியான சற்று நேரத்தில், தயாரிப்பாளர், பாடலாசிரியர், கதாசிரியர் என பன்முகம் கொண்ட பஞ்சுஅருணாசலத்தின் மறைவு செய்தி வெளியானது. ஒரே நாளில் இரண்டு திரையுலக பிரபலங்களை இழந்த சுவடு மறைவதற்குள் மற்றொரு மரண செய்தி.சூர்யா இரட்டை...

குறும்பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய உள்ள படம் துருவங்கள் பதினாரு. இதில் ரகுமான் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்திருக்கிறார். படத்தில் மொத்தம் 16 கேரக்டர்கள், 16 மணிநேரத்தில் நடக்கிற கதை. போலீஸ் அதிகாரியான ரகுமான் ஒரு போலீஸ் ஆபரேஷனில் இறங்கும்போது கால் ஊனமாகி ஓய்வில் இருக்கிறார். 5 வருடங்களுக்கு பிறகு அவர் விசாரித்த...

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் இருமுகன். இந்த படத்தில் இரண்டுவிதமான வேடங்களில் நடித்துள்ள விக்ரமுடன் நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமைய்யா, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது இதே நாளில் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படமும் ரிலீஸ்...

திரைப்பட கதாசிரியரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம் நேற்று மதியம் மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், ரஜினியும் பஞ்சு அருணாச்சலம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும்போது, பஞ்சு சார், நான் உண்மையில் உங்களை இழப்பது துக்கமாக இருக்கிறது....

2.ஓ செட்டில் ரஜினி எமி ஜாக்சனை ஜுனியர் ஐஸ்வர்யா ராய் என்றுதான் அழைப்பாராம். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதைச் சொல்லி பெருமிதப்பட்டுள்ளார் எமி ஜாக்சன். அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த படத்தில் எல்லோருக்குமே ஸ்பெஷல் ரோல்கள் தான். முக்கியமா ரஜினி சார் ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன். ஸோ ஹம்ப்ள். எங்களுக்கான காஸ்ட்யூமே இதுவரைக்கும் இந்திய...

தல 57 படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவை ஒப்பந்தம் செய்துள்ளாராம் சிவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அதனால் தற்போதைக்கு தல 57 என கூறுகின்றனர். அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு வில்லனாக யாரை...

'வேதாளம்' படத்திற்கு பிறகு காலில் ஆபரேசன் செய்து கொண்ட அஜித். அது குணமானதும் அப்படியே அடுத்த படத்துக்கான பிட்னசுக்கு 6 மாதம் எடுத்துக் கொண்டார். காரணம் அடுத்த படம் ஹாலிவுட் ஸ்டைலிலான பக்கா ஆக்ஷ்ன் படம். இதில் அவர் இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தமிழ் நாட்டில் ஒரு மிகப்பெரிய மனிதர் கொல்லப்படுகிறார். குற்றவாளி யார்...

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஏசியன் சினி கம்பைன்ஸ் ஐஸ்வர் வி. சந்திரசாமி மற்றும் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் இணைந்து தயாரிக்கும் படம் மாவீரன் கிட்டு. கதாநாயகனாக விஷ்ணு விஷால், அவருக்கு ஜோடியாக ஶ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு வசனம், பாடல்களை எழுதுகிறார் கவிஞர்...

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார். கால் எலும்பு முறிவு காரணமாக கடந்த 3 வாரமாக அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் குணமடைந்துசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்து முடித்த சபாஷ் நாயுடு முதல் கட்ட படப் பிடிப்புக்கு பிறகு, சென்னை...

இந்தி நடிகையான ராதிகா ஆப்தே, பிரகாஷ்ராஜ் நாயகனாக நடித்த தோனி படத்தில் தமிழுக்கு வந்தவர். அதன்பிறகு ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் என சில படங்களில் நடித்தவருக்கு தமிழில் பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கோலிவுட்டிலுள்ள முன்னணி நடிகைகள் யாருக்குமே கிடைக்காத அரிய வாய்ப்பாக கபாலியில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு...

ஸ்டுடியோ-9 புரொடக்சன்ஸ் ஆர்.கே. சுரேஷ் தயாரித்துள்ள படம் தர்மதுரை. சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜயசேதுபதி நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டான்கே, ராதிகா சரத்குமார், கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உள்பட பலர் நடித் துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது விஜயசேதுபதி பேசுகையில்,...

சாதாரண நடிகையாக இருந்த அமலாபாலை இயக்குனர் விஜய் தெய்வதிருமகள் படத்தில் விக்ரமுடன் நடிக்க வைத்து பெரிய நடிகையாக்கினார். அந்த நன்றி கடனே விஜய் மீது அமலாபாலுக்கு காதலை உருவாக்கியது. அந்த காதல் திருமணத்தில் முடிந்தது. அமலாபால் சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்டார். குறைந்த வயதில் குடும்ப வாழ்க்கைக்கு திரும்பினாலும். அவருக்குள் ஒரு நடிகை...

விக்ரம்-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் ‘இருமுகன்.’ இந்த படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கி உள்ளார். சிபுதமீன்ஸ் தயாரித்து உள்ளார். ‘இருமுகன்’ படத்தின் பாடல் மற்றும் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு பேசியதாவது:- நயன்தாராவுடன் இதுவரை நான் நடிக்கவில்லை. இந்த படத்தில் அவர் என்னுடன் ஜோடி சேர்ந்து உள்ளார்....

கடந்த மாதம் தனது வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த கமலின் காலில் அடிபட்டது. அதனால் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் அறுவை சிகிச்சையின்போது அவரது காலில் சில துகள்கள் சிக்கிக் கொண்டதால் சில நாட்களுக்கு முன் அவரது காலில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை...

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘கபாலி’ படம் வசூலில் பெரும் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்நிலையில், ரஜினியின் டுவிட்டர் அக்கவுண்டை மர்ம நபர்கள் முடக்கிய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஜினி டுவிட்டரில் இணைந்தார். சேர்ந்த...

விக்ரம் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி விக்ரம்-திரிஷா இருவருக்கும் மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்த படம் ‘சாமி’. ஹரியின் திரைக்கதை, விக்ரம் நடிப்பு, ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களைக் கவர்ந்ததில் பாக்ஸ் ஆபீஸில் இப்படம் பட்டையைக் கிளப்பியது. ‘சாமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-வது பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஹரி இறங்கினார்....

All posts loaded
No more posts