- Wednesday
- February 26th, 2025

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை அவர் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம்...

தமிழ்சினிமாவில் எப்போதும் பரபரப்பாக இயங்கி வந்தவர் கமல்தான். யாருடைய கண் பட்டதோ... அவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக கமலின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட கமலை, குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஓய்விலிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் கடந்த சில வாரங்களாக ஓய்வில் இருந்து...

சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமாகி பின்னர் மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான த்ரிஷா, அதன்பின்னர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் அநேக ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நம்பர்-1 இடத்தை பிடித்த...

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாம் சிந்துவின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டதாகவும் ரஜினிகாந்த் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

அஜித் தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியா நாட்டில் நடந்து வருகிறது. அங்குள்ள எல்லையோரப் பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு ஆக்ஷன் காட்சிகளில் அஜித் நடித்து வருகிறார். அந்தப் படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. பார்ப்பதற்கு அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தின் புகைப்படம் போலவே...

விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. மிமிக்ரி மற்றும் மற்றும் காமெடி திறமைகளை வெளியே கொண்டு வரும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் திறமைகளை காட்டிய சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ஈரோடு மகேஷ், உள்ளிட்ட பலர் திரைப்பட நடிகர்களாகிவிட்டார்கள். கலக்கப்போவது யாரின் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது. இதன் 6வது சீசனுக்கான பணிகள்...

ஏழாம் அறிவு படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் எஸ்-3 படத்தில் அவருடன் மீண்டும் இணைந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் இருவருமே நாயகிகளாக நடிக்கின்றனர். கதைப்படி இந்த படத்தில் அனுஷ்கா சூர்யாவின் மனைவியாகி விடுவதால் அவருக்கு நடிப்பதற்கான ஸ்கோப் அதிகமாக இல்லையாம். ஆனால் ஸ்ருதிஹாசன், படம் முழுக்க சூர்யாவுடன் பயணிக்கும் வேடத்தில் நடித்துள்ளாராம்....

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்க கோகுல் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் 'காஷ்மோரா'. இப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல் பார்வை நேற்று இரவு வெளியிடப்பட்டது. இந்தப் படம் பற்றி இதுவரை எந்த ஒரு புகைப்படம் வெளிவராத நிலையில் நேற்று வெளியான முதல் பார்வை புகைப்படம் வியக்க வைக்கும் அளவில் அமைந்துள்ளது. மொட்டைத்...

தமிழ்த் திரையுலகத்தில் எப்போதாவது ஒரு முறைதான் இப்படி ஒரு படம் வருவதுண்டு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படம் 'ஜோக்கர்'. இந்தப் படத்தில் நடித்தவர்கள் யாரையும் இதற்கு முன் பார்த்த ஞாபகம் கூட திரைப்பட ரசிகர்கள் யாருக்கும் இருக்காது. இந்தப் படத்தில் நாயகனாக நடித்த குரு சோமசுந்தரம் இதற்கு முன் 'ஜிகர்தண்டா' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர்....

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த ஜுலை மாதம் 22-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகியது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வெளியானதுமே படம் பற்றி இருவேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன. சிலர் வேண்டுமென்றே...

வேல், ஆறு, சிங்கம், சிங்கம்-2 படங்களை அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ஐந்தாவது படம் எஸ்-3. இந்த படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் இந்த படத்தில் உலக அளவில் பரவிக்கிடக்கும் சமூக விரோதிகளை களை எடுக்கும் அதிரடி போலீசாக நடிக்கிறார் சூர்யா. ஏற்கனவே இரண்டு பாகங்கள்...

1985-ல் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்த படம் நான் சிகப்பு மனிதன். அம்பிகா நாயகியாகவும், சத்யராஜ் வில்லனாகவும் நடித்த இந்த படத்தில் இயக்குனர் கே.பாக்யராஜ் ஒரு சிஐடி வேடத்தில் நடித்திருந்தார். ரஜினி படம் என்றாலும் பாக்யராஜின் கேரக்டரும் அப்படத்தில் திருப்புமுனை வேடமாக அமைந்தது. இப்போதுவரை பேசப்படும் கேரக்டராகவும் உள்ளது. இந்தநிலையில், தற்போது...

பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாகவே பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், அந்த வேதனையிலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு இடைவிடாது பணிகளை செய்து முடித்துக் கொடுத்து வந்துள்ளார். ஆனால், அவருடைய நேர்மை அவருக்கு கைகொடுத்ததா? என்றால் அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்....

சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் டப்பிங் தொடர்களை கட்டுப்படுத்தக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இதனை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகை ராதிகா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் நடிகர்-நடிகைகள் குஷ்பு, மனோபாலா, ரமேஷ்பாபு, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை நடிகர்-நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஏராளமானோர் கலந்து...

வணிக ரீதியான படங்களின் ஜாம்பவான் என்கின்றனர் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரை. ரசிகர்களின் நாடி துடிப்பு அறிந்தவர். காதல், நகைச்சுவை, குடும்ப பாசம், அதிரடி என அனைத்து விஷயங்களையும் கலந்து படம் பார்ப்பவர்களை கட்டிப்போடுவதில் கில்லாடி. இவர் இயக்கும் படங்கள் லாபத்துக்கு உத்தரவாதம் தருபவை என்று தயாரிப்பாளர்களின் டைரக்டராகவும் பார்க்கப்படுகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித்குமார், சரத்குமார்,...

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல், சென்னை அயனாவரம் நியூ ஆவடி சாலையில் உள்ள வேளங்காடு மயானத்தில் நேற்று இரவு 08.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. முத்துக்குமாரின் 9 வயது மகன் ஆதவன் இறுத்திச் சடங்குகளைச் செய்தார். முன்னதாக சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள முத்துக்குமார் இல்லத்தில் இருந்து அவரது உடல் நியூ ஆவடி சாலையில் உள்ள...

கமல்ஹாசனின் எவர்கிரீன் காமெடி படங்களில் ‛பஞ்சதந்திரம்' படமும் ஒன்று. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன், சிம்ரன், ரம்யாகிருஷ்ணன், ஊர்வசி, சங்கவி, ஐஸ்வர்யா, நாகேஷ்.... என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் 2002-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. கமல், கிரேஸி மோகன் இணைந்து இந்த...

தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்த வடிவேலு, இடையில் சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். பின்னர் தெனாலிராமன், எலி படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்தப்படங்கள் அவருக்கு வெற்றியை தரவில்லை. நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த வடிவேலுவை எப்படியோ சம்மதிக்க வைத்து தனது ‛கத்திச்சண்டை' படத்தில் நடிக்க வைத்துவிட்டார் விஷால்....

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞர் தனுஷ். ‛தொடரி', ‛கொடி' படங்களை முடித்துவிட்டு தற்போது, ‛எனை நோக்கி பாயும் தோட்டா', ‛வட சென்னை' படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். படங்களில் நடித்து வந்தபோதும் அவ்வப்போது படங்களில் பாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் தனுஷ். சமீபத்தில் கூட தெலுங்கு படம் ஒன்றில் தமன் இசையில் ஒரு...

சன்டிவியில் ஒளிபரப்பாகும் பிரியமானவள் சீரியலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. கூடவே அம்பேத்கார், பெரியார், இரட்டமலை சீனிவாசன் ஆகியோரின் புகைப்படங்களும் புதிய கதாபாத்திரமான இசையின் வீட்டிற்குள் மாட்டப்பட்டிருந்தது சீரியல் பார்த்தவர்களிடையே புதிய கேள்வியை எழுப்பியுள்ளது. பிரியமானவள் தொடரின் நாயகி உமா தமிழ் ஈழத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்தப்பட்ட போதும் இதுவரை ஈழம் பற்றி...

All posts loaded
No more posts