- Wednesday
- February 26th, 2025
அழகிய தமிழ்மகன் படத்திலேயே விஜய்யை ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான கோணங்களில் வெளிப்படுத்திய பரதன், இப்போது பைரவா படத்திலும் இரண்டுவிதமான விஜய்யை இயக்கிக்கொண்டிருக்கிறார். மேலும், இந்த படத்தில் காதல், காமெடி, செண்டிமென்ட், ஆக்சன் என அனைத்து விசயங்களையும் கலந்து வைத்திருக்கிறார். அதோடு குழந்தைகளுடன் விஜய் பாடும் ஒரு பாடலும் உள்ளதாம். மேலும், ஆக்சன் காட்சிகளில் தற்போது...

விக்ரம் நடித்து கடந்த வாரம் வெளிவந்துள்ள 'இருமுகன்' படம் வியாபார ரீதியாக எவ்வளவு வசூல் செய்தது என்பது பற்றி படத்தை வெளியிட்டுள்ள வினியோக நிறுவனமான ஆரா சினிமாசின் மகேஷ் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். படத்தை வெளியிட்டவரே அதன் வசூலைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு அந்தப் படத்தின் வசூலைப் பற்றி மற்றவர்கள் ஏற்றியோ, இறக்கியோ...

ராகவா லாரன்ஸ் நடிப்பு, இயக்கம், நடனம் இவற்றில் மட்டுமல்ல அடுத்தவருக்கு உதவும் குணமும் கொண்டவர். பல்வேறு குழந்தைகளுக்கு இதய சிகிச்சைக்கு உதவி இருக்கிறார். ஏழை குழந்தைகள் கல்விக்கும் உதவி வருகிறார். அவரது தாயாருக்கும் கோவில்கட்டி வருகிறார். இதுமட்டுமல்ல, தான் நடிப்பதற்காக பதிவு செய்துள்ள படங்களின் தலைப்புகளையும் தனது அபிமான ஹீரோக்களுக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறார். ராகவா...

ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர் ‘கோவா’ படத்தை தயாரித்தார். சரித்திர பின்னணியுடன் உருவான ரஜினியின் அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’ படத்தை இயக்கினார். சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் சவுந்தர்யாவும், அஸ்வின் ராம்குமாரும் தற்போது பிரிந்து இருப்பதாக...

ரஜினி - லதா தம்பதியின் இளைய மகள் சௌந்தர்யா, 2010ல், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை, திருமணம் செய்தார். இந்நிலையில், நான்கு மாதங்களாக, அஸ்வின் - சௌந்தர்யா இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை, சேத்துப்பட்டில் தனியாக வசிக்கும் சௌந்தர்யா, விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்தி...

வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்த வெங்கட்பிரபுவுக்கு அஜித்தின் மங்காத்தா படத்தை இயக்கிய பிறகு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்து கிடைத்தது. அதன்பிறகுதான் அவர் சூர்யா, கார்த்தியை வைத்து படங்கள் இயக்கினார். ஆனால் அப்படி அவர் இயக்கிய படங்கள் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை...

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் இருமுகன். கடந்த வியாழக்கிழமை அன்று திரைக்கு வந்த இப்படத்திற்கு இரண்டுவிதமான விமர்சனங்களும் வெளியாகின. ஆனபோதும் படத்தின் வசூலுக்கு எந்தவித பங்கமும் ஏற்படவில்லை என்கிறார்கள் அப்படக்குழுவினர். அதோடு, நேற்று இருமுகன் படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டும் சென்னையில் நடைபெற்றது. அப்போது நேற்று வரை தமிழகத்தில் மட்டும்...

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அடுத்து, கர்நாடகா முழுவதும், கடந்த சில தினங்களாக வன்முறை வெடித்துள்ளது. குறிப்பாக தமிழர்களுக்கு சொந்தமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. தமிழக பதிவெண் உடைய வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த, பெங்களூரு, மைசூரு, மாண்டியா ஆகிய...

கடந்த வெள்ளியன்று ஓணம் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் வெளியான படங்களில் மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் உருவாக்கி இருக்கும் 'ஒப்பம்' படம் முதலிடத்தை பிடித்திருப்பதாக தெரிகிறது. இந்தப்படத்தில் கண்பார்வையற்றவராக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மோகன்லால். அதனால் தானோ என்னவோ இந்தப்படம் ரிலீஸாவதற்கு முன்பே சூப்பர்ஸ்டார் ரஜினியும் ரிலீஸான மறுநாளே அஜித்தும் இந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை விரும்பி பார்த்துள்ளனர்....

பெண்கள் கார் ஓட்டுவதென்பது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. விமானத்தையே பெண்கள் ஓட்டும் போது காரை ஓட்டுவது பெரிய விஷயமா என்ன?. ஆனாலும், பெண்கள் பைக் ஓட்டுவது என்பது ரொம்பவே ஆச்சரியமான விஷயம்தான். ஸ்கூட்டி, ஸ்கூட்டர் ஆகியவற்றை பெண்கள் அதிகம் ஓட்டுவார்கள். ஆனால், 'கியர்' வைத்த பைக்கை ஓட்டுபவர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது. எப்போதோ ஒரு முறைதான்...

காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் தேவையற்றது என்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் கூறினார். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. குறிப்பாக பெங்களூரில் 144 தடை உத்தரவு போடும் அளவிற்கு வன்முறை உருவாகியிருக்கிறது. மேலும் இருமாநிலத்தின் திரையுலக பிரபலங்களும் போராட்ட களத்தில் இறங்க தயாராகிவிட்டனர். இந்த விவகாரம்...

காமெடியனாக வலம் வந்துகொண்டிருந்த வடிவேலு, ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறி ஒருசில படங்களில் நடித்தார். முதல் படம் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தாலும், அடுத்தடுத்த படங்கள் அவருக்கு மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்தன. இந்நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கத்திசண்டை’ படத்தின் மூலம் காமெடியனாக களம் இறங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்...

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்பு-கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கூடவே, ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைப்பது படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு...

தான் இயக்கும் படங்களில் ரஜினி படமாக இருந்தாலும் பாடல் காட்சிகளிலாவது நடித்து விடுவதை வழக்கமாகக் கொண்டு வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். அந்த வகையில், அதேபோல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் அவ்வப்போது நடித்து வந்த அவர், சமீபகாலமாக நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, முடிஞ்சா இவனை புடி படத்தை இயக்கிய பிறகு டைரக்சனைப்பற்றி யோசிக்காமல் நடிப்பதில்...

அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் ‘ஆலுமா டோலுமா’. அனிருத் இசையில் அமைந்த இப்பாடல் படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் வெளிவந்த பிறகு, அந்த பாடலில் அஜித் ஆடிய விதம், அவருடைய கெட்டப் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது. இந்த பாடலுக்கு கல்யாண்...

பிரபல வட இந்திய நடிகை மந்த்ரா பேடி. சிம்பு நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான 'மன்மதன்' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதன் பிறகு தமிழ் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தவர் 12-ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளர் , நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை...

சமீபகாலமாக ஒவ்வொரு படங்களின் பர்ஸ்ட் லுக், டீசர், டைட்டீல், ஆடியோ என ஒவ்வொன்றாக வெளியிட்டு அந்த படங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், நேற்று ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா-தமன்னா நடித்துள்ள தேவி, காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜயசேதுபதி-ரித்திகா சிங் நடித்துள்ள ஆண்டவன் கட்டளை, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள புருஸ்லீ ஆகிய படங்களின் டீசர்கள் இணையதளத்தில்...

விஜய் நடித்த தெறி படத்தை இயக்கியவர் அட்லி. அதன்பிறகு இரண்டு படங்களை தயாரித்து வருபவர், தான் இயக்கும் புதிய படம் குறித்த தகவலை வெளியிடாமல் வைத்திருந்தார். அதுகுறித்து கேட்டபோது, இப்போதைக்கு அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தை மட்டுமே நடக்கிறது. இன்னும் முடிவாகவில்லை, முடிவானதும் நானே தெரிவிப்பேன் என்று கூறி வந்தார். அதோடு டைரக்டர் மகேந்திரன் இயக்கும்...

வெறும் கையால் முழம்போடுவது என்ற சொல்வார்கள். இது இயக்குநர் கௌதம் மேனனுக்குத்தான் மிகவும் பொருந்தும். கையில்போதிய பணம் இல்லாமலேயே முன்னணி ஹீரோக்களை வைத்து படத்தைத் தொடங்கிவிடுவார். ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் ஹீரோக்கள் ஒருகட்டத்தில் சம்பளத்தைக் கேட்கும்போது, படப்பிடிப்பையே நிறுத்திவிடுவார். இப்படித்தான், கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வளர்ந்த வந்த 'அச்சம் என்பது மடமையடா' படம்...

ரஜினிக்கு பிறகு விஜய் நடித்த படங்களில் அதிரடி பஞ்ச் டயலாக்குகள் அதிகமாக இடம்பெற்று வந்தன. ஆரம்பத்தில் கதைக்காக எழுதப்பட்ட பஞ்ச் டயலாக்குகள்கூட பின்னர் அரசியலை அட்டாக் பண்ணும் விதத்தில் இடம்பெற்று வந்தன. இதற்கு தியேட்டர்களில் விசில் பறந்தபோதும், அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்புகள் அதிகரித்தன. இதனால் ஒருகட்டத்தில் விஜய் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. அதனால்...

All posts loaded
No more posts