- Saturday
- February 22nd, 2025

2009 முதல் 2013 ஆண்டு வரைதமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியான நெடுந்தொடர்கள், அதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் அறிவித்துள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:- 2009-ம் ஆண்டு: 1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - திருமதி செல்வம் 2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - வசந்தம் 3. ஆண்டின் சிறந்த...

பீட்சா, கத்தி திரைப்படங்களில் நடித்தவரும் தமிழ் மொழிப்பற்றாளருமான ஓவியர் வீரசந்தானம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். தமிழ் மொழிப்பற்றாளரான வீரசந்தானம் சிறந்த ஓவியராக திகழ்ந்தார். ஈழத்தமிழர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, வழக்கமான...

தொலை இயக்கி (remote control) மூலம் இந்த உலகில் பலர் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது, தானும் போராடி தன் பிள்ளைகளையும் போராட வைத்து, அனைவருக்கும் ஒரே நியாயம் என்ற கொள்கையுடன் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவமே உண்மையான தலைமைத்துவம் என்றும் இதனை யாரும் மறுக்க முடியாதென்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு ஊடகமொன்றிற்கு...

மாதவன், விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் ‘விக்ரம் வேதா’. வரலட்சுமி சரத்குமார், ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர் ஆகியோரும் நடித்துள்ளனர். புஷ்கர், காயத்ரி டைரக்டு செய்துள்ளனர். சஷிகாந்த் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து நடிகர் மாதவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- “தமிழில் ‘இறுதி சுற்று’ படத்துக்கு பிறகு ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்து இருக்கிறேன். விக்ரமாதித்தன், வேதாளம்...

அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இப்படத்தையும் அஜித்தை வைத்து இயக்கி வருகிறார் சிவா. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து இப்படத்தில்...

யன்தாராவும், பிரபுதேவாவும் காதலர்களாக கோலிவுட்டில் வலம்வந்து, இவர்கள் இருவரும் திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்துபோன விஷயங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இருவரும் தங்களது வேலைகளில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பிரபுதேவாவும், நயன்தாராவும் மீண்டும் கைகோர்த்துள்ளதாக வந்துள்ள விஷயம் என்னவென்றால், பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘குலேபகாவலி’ மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அறம்’...

தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் வகையில் படங்களை இயக்கும் இயக்குநர்களுள் வெங்கட் பிரபுவும் ஒருவர். அவரது இயக்கத்தில் கடைசியாக பெரும் எதிர்பார்ப்புகளிடையே வெளியான `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்' ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு, வசூல் ரீதியாகவும் நல்லபடியாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு தற்போது `களவு' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்....

தமிழ் சினிமாவில் படத்திற்கு பெயர் வைக்க பல இயக்குநர்கள் திணறி வருகின்றனர். இன்னும் சிலர், பழைய படங்களின் பெயர்களையே தற்போதைய படங்களுக்கும் வைத்துவிடுகின்றனர். ஆனால் அதில் முற்றிலும் மாறுபட்டு ஒரு சர்ச்சைக்குரிய பெயரை வைத்திருப்பதை கேட்டதுண்டா. அவ்வாறு தலைப்பு வைக்கப்பட்ட படம் தான் `எக்ஸ் வீடியோஸ்'. இதுகுறித்து இயக்குநர் கூறியதாவது, ஆமாம் இது ஆபாசப் படம்...

ஒரு பாடல் வெளியான ஓரிரு தினங்களிலேயே எல்லா தரப்பினர் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு மற்றும் வரவேற்பு பெறுவது மிக அரிது. ‘விவேகம் ‘ படத்தின் ”சர்வைவ ‘ பாடல் இந்த அரிய காரியத்தை செய்துள்ளது. உலக புகழ் பெற்ற தமிழ் ராப்பர் யோகி B மற்றும் அனிருத் சேர்ந்து அமைத்துள்ள இப்பாடல் வெளியான நிமிடத்திலிருந்து ரசிகர்கள்...

வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்கள் தேர்விற்கு பேர் போனவர் நடிகர் விஜய் சேதுபதி . இவரின் அடுத்த படமான ” ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ” இவருடைய பெயர் சொல்லும் அப்படி பட்ட ஒரு வித்தியாசமான படமாகும். இது ஓர் அட்வெஞ்சர் காமெடி படமாகும். இதில் இவர் , இதுவரை யாருமே செய்திராத,...

கபாலி படத்துல ரஜினி எப்படி சிறைல இருந்து வெளில வருவாரோ அதே மாதிரி இந்த படத்துலயும் ரஜினி சிறைல இருந்து வெளில வர்றது மாதிரி ஒரு காட்சி இருக்காம். ரஜினி ரிலீஸ் ஆகுற நாள தெரிஞ்சிக்குற ஒரு எதிரி கும்பல், அவர் வெளிய வந்ததும் அவர கொலை பண்ண முயற்சி பண்ணுது. இதை முன்கூட்டியே தெரிஞ்சிக்குற...

`பருத்தி வீரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களம் அமைந்ததால், தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக தற்போது வலம் வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `காற்று வெளியிடை' ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியாக ஓரளவுக்கு...

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் `காலா' படம் குறித்து தான் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினி, மீண்டும் ஜுன் 24-ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் இணைகிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஹூமா...

தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இன்ப சேகர் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இமான் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், பொன்வண்ணன், பேரரசு, எஸ்.வி.சேகர், ஏ.எல்.விஜய், டி.இமான், பிரபு சாலமன், மனோபாலா, தம்பி ராமையா...

சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.ஆர். விண்மீண் கிரியேஷன்ஸ் உரிமையாளரான கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா, சென்னை பெருநகர 6-வது உதவி உரிமையியல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா என்ற கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995...

தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும்படி படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் கடைசியாக பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு, `களவு' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்....

ரஜினிகாந்த் எனக்கு கடன்பட்டுள்ளார் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா கடந்த வாரம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இசைஞானியை வாழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா கூறியதாவது, என் பிறந்தநாள் அன்று...

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோணேட்டம்பேட்டை கிராமம். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்த கிராமத்தில் பிறந்தவர். இவர், தனது 72-வது பிறந்த நாளை தனது கிராமத்தில் எளிமையாக கொண்டாடினார். அவருக்கு கிராம மக்கள் பாராட்டு விழா நடத்தினர். முன்னதாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் கோணேட்டம்பேட்டை கிராமத்தில்...

பாரதிராஜா அவர்களை பாராட்ட நமக்கு வாழ்நாளே பத்தாது. நான் கொஞ்சம் வித்தியாசமாக அவரை பாராட்ட நினைக்கிறேன். பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார். நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் குரங்கு பொம்மை. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட...

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001-ல் வெளியான படம் `ஆளவந்தான்'. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாச முயற்சியில் ஈடுபடும் கமல், இப்படத்தில் போலீஸ் அதிகாரி, சைகோ என இரு வேடத்தில் நடித்திருந்தார். இதில் சைகோ கமலின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. எனினும் வசூலில் இப்படம் நல்ல வரவேற்பை...

All posts loaded
No more posts