- Thursday
- December 26th, 2024
காதல் படத்திற்கு பிறகு வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்து வந்த பரத்திற்கு, ஒருகட்டத்தில் தொடர்ந்து வீழ்ச்சியாக அமைந்தது. அதனால் தற்போது அவர் தனது ரூட்டையும் மாற்றி மார்க்கெட்டில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். அதன்காரணமாக, என்னோடு விளையாடு படத்தில் குதிரை ரேஸ் விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் நடித் திருக்கும் அவர், அதற்கடுத்து பொட்டு,...
இருமுகன் படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் சாமி-2 வில் விக்ரம் நடிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிங்கம்-3 வேலைகளில் ஹரி பிசியாக இருந்தார். அதனால் சிங்கம்-3 வெளியான பிறகு ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கி ஜூன் மாதம் சாமி-2 படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் ஹரி. இந்தநியைில், தற்போது கெளதம்மேனன், வாலு விஜயசந்தர் இயக்கும் படங்களில் நடிக்க கதை...
அஜித்தின் பைக் ஓட்டும் திறனை பார்த்து வியந்து பாராட்டியிருக்கிறார் பிரபல பைக் ரேஸ் பிரியரும், சண்டைக்கலைஞருமான பல்கேரியாவை சேர்ந்த ஜோரியன். வேதாளம் படத்தை தொடர்ந்து அஜித், மீண்டும் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தற்காலிகமாக AK 57 என்றே அழைத்து வருகிறார்கள். இப்படத்தில் அஜித் இண்டர்போல் ஆபீசராக நடிக்கிறார். அஜித் உடன்...
நடிகர்-நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவற்றில் அதிகமான ரசிகர்கள் தங்களை பின்தொடர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். சமூக வலைத்தளத்தில் பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையை வைத்தே நடிகைகளின் மார்க்கெட் நிலவரங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதற்காகவே அடிக்கடி சமூகம் சம்பந்தமான கருத்துகளை பதிவிடுகின்றனர். தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்களையும் பதிவேற்றம்...
தெறி படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛பைரவா'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சதீஷ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ‛அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து, இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில தினங்களில் பாடல்கள்...
பீலே - பெர்த் ஆப் எ லெஜென்ட்' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் சினிமா, இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட்டிலும் முத்திரை பதித்தார். 2009-ம் ஆண்டு ‛ஸ்லம்டாக் மில்லினியர்' என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று...
பிரபல ஹிப்-ஹாப் பாடகர் யோகி பி. மலேசியாவை சேர்ந்தவரான இவர், தனது மலேசிய நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கியுள்ளார். அதில் இவரது ‛மடை திறந்து பாடல்...' மிகவும் பிரசித்து பெற்றவை. இசை ஆல்பங்களை இயற்றி வந்த யோகி பி-யை விஜய்யின் குருவி படத்திற்காக அழைத்து வந்தார் வித்யாசாகர். அதில் இடம்பெற்ற ‛ஹேப்பி நியூ...
விக்னேஷ் சிவன் இயக்கிய ‛நானும் ரவுடிதான்' படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்தனர் விஜய்சேதுபதியும், நயன்தாராவும். அந்தப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் இணைய இருக்கிறார்கள். டிமான்டி காலனி இயக்குநர் அஜய் ஜானமுத்து, தற்போது ‛இமைக்கா நொடிகள்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அதர்வா ஹீரோவாக நடிக்க அவருடன் நயன்தாரா முக்கியமான...
அப்பா கமலின் இயக்கத்தில் தனக்கு நடிப்பது பயமாக இருப்பதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் வாரிசான ஸ்ருதிஹாசன், தற்போது முதன்முறையாக கமலின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. இதையடுத்து கமல், வீட்டு மாடிப்படியிலிருந்து கீழே விழுந்ததால் படப்பிடிப்பு தடைபட்டது. சிலகாலம்...
சுசீந்திரன் இயக்கியுள்ள மாவீரன் கிட்டு படம் சமீபத்தில் வெளியானது. விஷ்ணு, விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் எழுதுவதுடன் இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் அறிமுகமாகியுள்ளார் கவிஞர் யுகபாரதி. இந்தப் படத்துக்கு வந்த விமரிசனங்களைத் தொடர்ந்து இதன் திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்றுமுதல் திரைக்கதையின் சுவாரசியத்தை முன்னிட்டு...
உலக அழகி பட்டம் வென்று இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஐஸ்வர்யாராய். தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரும் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனும் மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் ஜோடியாக நடித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆரத்யா...
சரியான கதைகள் கிடைக்காமல் திண்டாடி வரும் தமிழ்ப்பட ஹீரோக்களின் பார்வை எப்போதும் பிற மொழிப்படங்கள் மீது இருக்கும். குறிப்பாக மலையாளத்திரைப்படங்கள் மீது. அங்கே வெற்றியடைந்த படங்களின் கதையை வாங்க போட்டிபோடுவார்கள். அந்தவகையில் மலையாளத்தில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் கதையை வாங்கவும் கடுபோட்டி இருந்தது.. சித்திக் இயக்கிய இப்படத்தில்...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த வாரம் வரும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி ரஜினி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆண்டுதோறு டிச.12ஆம் தேதி சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்கள். இந்த ஆண்டு ரஜினிகாந்தின் 66 வது பிறந்தநாளை...
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.ஓ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்தி நடிகர் அக்ஷய்குமாரின் போர்ஷன் முடிந்து விட்டது. ரஜினி இன்னும் 35 நாட்கள் நடிக்க வேண்டியது இருக்கிறது. இதில் ரஜினி, எமி ஜாக்சன்...
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துப் பரிமாற்றங்கள், கருத்துக்கள், பதிவுகள் என ஒவ்வொருவரும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிமிடத்திற்கு ஒருமுறை புதுப் புது செய்திகள், உண்மையோ, பொய்யோ 'வாட்ஸ்-அப்' மூலம் பரவிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு அரசியலையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. கடந்த...
பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'பைரவா' படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில், ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். 'அழகிய தமிழ் மகன்' படத்தை தொடர்ந்து விஜய்யும், பரதனும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் இது. பைரவா படத்தின் வெளியீட்டு தேதி...
சூர்யா நடித்துள்ள 'சிங்கம்-3' படத்தின் கதை உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் 3 திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்காக பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா கலந்து கொண்டு வருகிறார்.இந்த நிகழ்ச்சிகளில் பேசிய சூர்யா,சிங்கம் 3 படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை...
ரஜினிகாந்தை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ள புதிய படத்தின் கதை விவாதத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சூப்பர் ஸ்டார் அறிவித்தார்.இதனை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க...
சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது கருணாஸின் போட்டோ. ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கின்போது ஒரு இளைஞரோடு கருணாஸ் எடுத்துக்கொண்ட செல்ஃபியை வைத்து, ‘சட்டசபையில் ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’னு பாட்டு பாடிட்டு, இறுதிச்சடங்கில் சிரிச்சுக்கிட்டே போட்டோவுக்கு போஸ் கொடுக்குறீங்களே பாஸ்..!’ என்று பலரும் சமூக வலைதளங்களில் கருணாஸை விமர்சித்துவர, அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் கருணாஸ்....
நடிகர் கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடனை தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். முதன்முதலாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாஸ், சட்டசபையில் ஜெயலலிதாவை புகழ்ந்துப் பாடி, அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்களும் நடந்ததுண்டு. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்ததாக வெளிவந்த செய்திக்கு பிறகு, ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது....
Loading posts...
All posts loaded
No more posts