- Monday
- February 24th, 2025

துருவங்கள் பதினாறு படத்தில் சிறந்த முறையில் நடித்திருப்பதாக நடிகர் ரகுமானை விஜய்யின் அம்மா ஷோபா வாழத்தியுள்ளார். 1980 மற்றும் 1990களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழந்தவர் ரகுமான். இடையே நடிக்காமல் இருந்தவர் இயக்குநர் அமீரின் ராம் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அதன் பிறகு வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர்...

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹிடாரி நடிப்பில் உருவாகி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து, `சதுரங்க வேட்டை' இயக்குநர் வினோத் இயக்கத்தில் `தீரன் அதிகாரம் ஒன்று'...

ஜல்லிக்கட்டிற்கு தமிழகம் முழுக்க ஆதரவு பெருகி வரும் வேளையில் நடிகர் கமல்ஹாசனும் ஜல்லிகட்டிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஜல்லிகட்டும் ஒன்றும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தடைபட்டு கிடக்கிறது. இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் ஜல்லிக்கட்டை நடத்த கோரி மாநிலம் முழுவதும் ஆதரவு...

விஜய்யின் கத்தி, அஜித்தின் வேதாளம் படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இளவட்ட ரசிகர்களை தன்பக்கம் முழுமையாக இழுத்துக்கொண்டவர் அனிருத். ஆனால், எதிர்பாராதவிதமாக பீப் சாங் சர்ச்சையில் சிக்கியதோடு, கபாலி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் வளர்ச்சியும் சேர்ந்து அனிருத்தை பின்தள்ளியது. இருப்பினும் தற்போது சுதாரித்துக்கொண்டுள்ள அனிருத், கைவசமுள்ள அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் படங்களை வைத்து மறுபடியும்...

பொங்கல் பண்டிகையில் 'பைரவா', 'கோடிட்ட இடங்களை நிரப்புக', 'புரியாத புதிர்' ஆகிய 3 படங்கள் மட்டுமே திரைக்கு வருகிறது. இதில் விஜயின் 'பைரவா' படத்திற்கு மாஸ் ஓப்பனிங் அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 'பைரவா' படத்தில் விஜய் 'அழகிய தமிழ்மகன்' இயக்குநர் பரதனுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை விஜயா வாஹினி...

தல 57 படத்திற்காக அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்து சாகசம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தல 57. இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகளில் அஜீத் டூப் போடாமல் நடித்து வருகிறாராம்....

தற்போது எனை நோக்கி பாயும் தோட்டாவை இயக்கி வரும் கவுதம் வாசுதேவ் மேனன், அடுத்து இயக்க இருக்கும் படம் துருவ நட்சத்திரம். அஜித்துக்காக எழுதிய கதை. அதன் பிறகு அதில் சூர்யா நடிப்பதாக இருந்தது. தற்போது கடைசியாக விக்ரமிற்கு வந்திருக்கிறது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் காற்றுவெளியிடை படத்தில் நடித்து வரும் அதிதிராவ், விக்ரம் ஜோடியாக நடிக்கிறார்....

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ஏகே57 படத்தின் கதை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடைபெறுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் கதையும் வெளிநாடுகளில் நடைபெறுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளதாக கௌதம் மேனனே தெரிவித்துள்ளார். இந்த வரிசையில் 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படமும் சேருகிறது. பொங்கல்...

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் 'சிவலிங்கா' படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வெளியானது பி.வாசு இயக்கத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் உருவான 'சிவலிங்கா' படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் இயக்குனர் பி.வாசுவே இயக்குகிறார். இப்படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக 'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகா சிங்...

ஏ.ஆர்.ரகுமானின் சூப்பர் ஹிட் பாடலான “டேக் இட் ஈசி ஊர்வசி” பாடல் ரசிகர்களின் பாடல் வரிகளுக்கேற்ப மீண்டும் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம்,’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடலை இந்த காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க பாடல் வரிகளை பரிந்துரைக்குமாறு ஏ.ஆர்.ரகுமான் தனது ரசிகர்களிடம் கேட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக பல்லாயிரக்கணக்கான...

வடிவேலு நடிப்பில், 24ம் புலிகேசி படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்க, சிம்பு தேவன் இயக்கிய, 23ம் புலிகேசி படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின், அதே பாணியில், வடிவேலு நடித்த பல படங்கள், சொதப்பலாயின. அரசியல் பிரவேச தோல்வியால் சற்று ஒதுங்கியிருந்த வடிவேலு, தற்போது, கத்திச் சண்டை படம்...

“செல்போன், வாட்ஸ்-அப் வசதி இல்லாத பழைய காலத்து காதலே உயர்வானது” என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- “இந்த காலத்து காதல் செல்போன்-வாட்ஸ்அப் யுகத்துக்கு மாறி, காதலர்கள் எப்போதும் தொடர்பில் இருக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. ஆனால் இந்த தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பழைய காலத்து...

விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து தமிழில் வெளியான மெளனகுரு படத்தை அகிரா என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார். அதைத் தொடர்ந்து சாம்பவமி என்ற படத்தை மகேஷ்பாபுவை நாயகனாக வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படமாக்கி வருகிறார். ராகுல்ப்ரீத்சிங் நாயகியாக நடிக்கும் அப்படத்தில் பரத், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி,...

கறுப்பு பணத்தை ஒழிப்பது குறித்து, இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், விஜயின் பைரவா படத்தின் கதையும், கறுப்பு பணம் ஒழிப்பதை மையமாக வைத்து தான், தயாராகி உள்ளதோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரெய்லரில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பது...

பல அதிரடி ஆக்சன் மற்றும் செண்டிமென்ட் படங்களை இயக்கியவர் பி.வாசு. அதோடு சில படங்களை காமெடி கலந்த கதையிலும் இயக்கியிருக்கிறார். அந்த வகையில், ரஜினியை வைத்து அவர் இயக்கிய மன்னன் படம் அம்மா செண்டிமென்ட் மற்றும் கணவன்-மனைவிக்கிடையே நடக்கும் ஈகோ பிரச்சினையை மையமாக வைத்து இயக்கிய அவர், பின்னர் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தை ஹாரர்...

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் அஜித். ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் இப்படம் அஜித்தின் ஆக்சன் பட வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், வேதாளம் படத்தில் நடித்து வந்தபோது காலில் அடி பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித், இந்த படத்திலும் சண்டை...

நெல்லை மாவட்டம், ஆலங்குளம் ஜோதிநகரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 55. இவர் ஆலங்குளம் பேரூராட்சி 12வது வார்டில் தொடர்ந்து இருமுறை சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று கவுன்சிலராக செயல்பட்டுள்ளார். மேலும் இயக்குநர் ஹரி இயக்கிய சாமி, ஐயா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக மோகன்ராஜ் நடித்துள்ளார். வடிவேலுவுடன் 'கிணற்றை காணோம்' காமெடி காட்சியில் நடித்து புகழ் பெற்றவர்...

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலக அளவிலும் 'பைரவா' டிரைலர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு தென்னிந்தியத் திரைப்பட டிரைலரும் இரண்டு நாட்களுக்குள் 50 லட்சம் பார்வைகள், 2 லட்சம் லைக்குகள் என யு டியூபில் பெற்றதே இல்லை. 'பைரவா' படம் முதல் முறையாக இப்படி ஒரு சாதனையைப் படைத்துள்ளது. ரஜினிகாந்த், அஜித்...

ரகுமான் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் துருவங்கள் பதினாறு படத்தை நடிகர்கள், இயக்குநர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். படம் வெளிவருதற்கு முன்பே இசைுப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் தமிழில் இதுபோன்ற ஒரு படத்தை இதுவரை பார்த்ததில்லை என்று கூறியிருந்தார். அதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறவே, சமீபத்தில் இயக்குநர் ஷங்கர் படக்குழுவிற்கு வாழ்த்து...

தற்போது கோலிவுட்டில், புதுமுகங்கள் நடிப்பில் ‘காதலில் சிம்புவும் தனுசும்‘ -என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதில் லோகேஷ், ராஜா என்ற இரு புதுமுங்கள் சிம்பு, தனுஷ் பெயரில் நடிக்கின்றனர். மேலும், சிம்பு மற்றும் தனுஷின் அதிரடி பஞ்ச் டயலாக்குகளையும் இப்படத்தில் பயன்படுத்தி வருகின்றனர். அதோடு, படத்தில் சிம்புவின் ‘’கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி...

All posts loaded
No more posts