- Monday
- February 24th, 2025

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தமிழா தமிழா கண்கள் கலங்காதே என்று பாடல் பாடி தனது உண்ணாவிரதத்தை முடித்துள்ளார். காலை 4.30 மணியில் இருந்து தனது வீட்டில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த ரஹ்மான் மாலை பழச்சாறு குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார். இதை தனது பெரிஸ்கோப் வீடியோ ஸ்ட்ரீமிங் ஆப்பில் பதிவு செய்துள்ளார் ரஹ்மான். அந்த...

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சி-3’ படம் வருகிற 26-ந்தேதி ‘ரிலீஸ்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை விளம்பரம் செய்யும் வகையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சூர்யா, ஹரி கலந்து கொண்டனர். முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரிப்பதாக சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதை கிண்டல் செய்த பீட்டா அமைப்பு, சூர்யா...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் இன்று மவுன போராட்டம் நடத்தி வருகிறது. இதில் அஜித், சூர்யா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று தமிழர்கள் அனைவரும் களத்தில் குதித்துவிட்டனர். குறிப்பாக, மாணவர்களின் எழுச்சி போராட்டம் தமிழகத்தை உலகளவில் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு...

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தமிழகமெங்கும் பொதுமக்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில், பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. தமிழர்களின் மரபுசார்ந்த விளையாட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் என பலர்...

பிரபல சினிமா இயக்குனர் சுந்தர் சி சின்னத்திரை சீரியல் ஒன்றை இயக்கி வருகிறார். நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. ‘முறைமாமன்’ படத்தில் தொடங்கி, ‘அரண்மனை இரண்டாம் பாகம்’ வரை 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் அவர் இயக்கியதில் ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘மேட்டுக்குடி’, ‘அருணாச்சலம்’, ‘அன்பே சிவம்’, ‘வின்னர்’, ‘கிரி’ ஆகியவை வெற்றிப்படங்களாக அமைந்தன. ‘தலைநகரம்’...

ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்க ராணுவமே வந்தாலும் கவலையில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக சினிமா நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,நடிகர் சிம்பு தி.நகரில் உள்ள தனது வீட்டிற்கு முன்னர் நேற்று இரவிலிருந்து அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சிம்புவின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான அவரது ரசிகர்கள்,அவரது வீட்டு...

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்கில் பேச தென்னிந்திய நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் மாதவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்திய மாநாட்டில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்துக் கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலையில் பேசிய முதல் தென்னிந்திய நடிகர் என்ற...

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, கார்த்தி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது....

ஜல்லிக்கட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். நடிகர் விஜய் தனது வீடியோ பதிவில், ‛‛உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களின் கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கவே பறிப்பதற்காக அல்ல. தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பார்க்காமல், யாருடைய தூண்டுதலும் இல்லாமல், எந்தவித கட்சி...

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். மேலும், பிரசன்னா, வினய் ராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கே.பாக்யராஜ் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் இன்னொரு வில்லி வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆண்ட்ரியா நடிக்கப்போவதாக ஏற்கெனவே செய்திகள்...

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் தெறி. இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்த விஜய், அதற்காக தனது உடல் எடை மற்றும் ஹேர்ஸ்டைலையும் மாற்றி மிடுக்காக தோன்றினார். அந்த தோற்றம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, விஜய்க்கும் அதிகம் பிடித்து விட்டது. அதையடுத்து மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்த விஜய்,...

ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்ற கருத்தை தெரிவிக்கவில்லை என, ச.ம.க., தலைவர் சரத்குமார் விளக்கம் அளித்த பின், அவரது உருவ பொம்மைகளை ரசிகர்கள் எரிக்கும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என, ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நேற்று, நடிகர் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வேண்டும் என, அவரது ரசிகர்கள்...

விஜய் தன்னுடைய மக்கள் இயக்க தலைவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். கூடுவாஞ்சேரி, விஸ்வநாதபுரம், 3-வது தெருவை சேர்ந்தவர் இமயம் ரவி (வயது 48). ஓவியரான இவர் காஞ்சீபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்தார். விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படம்...

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான 'ராவணன்' திரைப்படத்தில் வெளியான பாடல் ஒன்றை மறு உருவாக்கம் செய்து பாடியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன். 2010-ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் 'ராவணன்' திரைப்படம் வெளியாகியது.இந்த படத்தில் இடம்பெற்ற 'காட்டுச் சிறுக்கி' என்ற பாடல்,ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ’எம்.டிவி...

இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ’பைரவா’ திரைப்படம் கேரளாவில் மேலும் 67 தியேட்டர்களில் நேற்று வெளியாகியது. கடந்த 12-ஆம் தேதி வெளியான பைரவா திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி கேரளாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கேரளாவில் ரசிகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிக தியேட்டர்களில் பைரவா திரையிடப்படவில்லை.எனவே நேற்று முதல் கேரளாவில் உள்ள 67 தியேட்டர்களில்...

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா மனைவியின் அடிக்கு பயந்து வீடு போக மறுத்துவிட்டாரா என்கிற செய்தி உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.. உல்லாசத்தில் உச்சம் பெற்றவர் நாகர்ஜுனா. அதனால் அவர் விரைவிலேயே எமலோகம் செல்ல வேண்டியதாயிற்று. அங்கு போன பிறகும் இவரது சரச விளையாட்டு நின்றபாடில்லை. எமதர்மராஜா பலவகையிலும் துன்புறுத்த...

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்தி வாசு நடித்திருக்கும் படம் `சிவலிங்கா'. கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம் பிப்ரவரியில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், `சிவலிங்கா' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தமன் இசையில்...

தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனிஇடத்தை பிடித்துள்ளவர் இயக்குநர் அமீர். திரைக்கதையின் மூலம் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அமீரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. `சேது`, `மௌனம் பேசியதே`, `பருத்திவீரன்`, `ஆதி பகவன்` உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அமீர், ஒருசில படங்களில் நடித்துள்ளார். 3 வருடங்களுக்கு பிறகு அமீர்,...

நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தபோது, பூபதி பாண்டியன் இயக்கிய காதல் சொல்ல வந்தேன் படத்தில் என்ட்ரியானவர் மேக்னாராஜ். அவர் நயன்தாரா சாயலில் இருந்ததால் ஜூனியர் நயன்தாரா என்று அப்போது அழைத்தனர். அதோடு, இவரது வருகையினால் நயன்தாராவிற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில், நயன்தாரா சாயலில்...

'கேவலமான மனநிலை உள்ளவர்களுக்கு,கோவிலில் உள்ள சிலைகள் கூட ஆபாசமாகத்தான் தெரியும்' என இயக்குநரும்,நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். 'என்னம்மா இப்படி பண்றிங்களேமா' என்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் வசனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இப்போது இல்லை எனலாம். ஆனால் அவர் தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை “கடவுள் இருக்கான் குமாரு” படத்தில் கிண்டல் அடித்ததால்,அதில்...

All posts loaded
No more posts