- Monday
- February 24th, 2025

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘விவேகம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், திருவான்மியூரில் அரண்மனை போன்ற ஒரு வீட்டை அஜித் கட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வீட்டை அதிக பொருட்செலவில் அரண்மனை போன்று கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த வீட்டிற்குள்ளேயே உயர்தர உபகரணங்கள் கொண்ட நவீன ஜிம்மையும் அஜித் உருவாக்கவிருக்கிறாராம்....

சூர்யா நடிப்பில் ‘சி3’ படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரைகளில் ஓடிவருகிறது. `சிங்கம்', `சிங்கம் 2' படத்தின் அடுத்த பாகமாக உருவாக்கியுள்ள `சி3' படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா - அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன்,விவேக், சூரி, ராதாரவி, தாகூர் அனூப் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 9-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு...

அகிரா படத்தை இந்தியில் இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அதையடுத்து மகேஷ்பாபு நடிப்பில் சாம்பவமி -என்ற படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கி வருகிறார். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் ராகுல்ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், நதியா உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்,...

ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து 2010-ம் ஆண்டு வெளிவந்து வசூல் குவித்த ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழ் பட உலக வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது. ரூ.300 கோடி செலவில் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இதில் நாயகியாக எமிஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடிக்கிறார்கள்....

தமிழக அரசியல் நிலவரம் குறித்து நடிகர் அரவிந்தசாமி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். எம்.எல்.ஏ.க்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆலோசனைகள் சொல்லியும் கருத்து வெளியிடுகிறார். கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சசிகலா சென்று இருந்த நிலையில், “நினைவுபடுத்துகிறேன். அவரவர் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்....

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சி-3’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்யை இயக்குவது குறித்து ஹரி தெரிவிக்கையில் “விஜய்யை இயக்கும் விருப்பம் இருக்கிறது. நானும் விஜய்யும் சேர்ந்து படம் பண்ண விரும்புகிறோம். இது மட்டுமல்ல மற்ற ஹீரோக்களுடனும் சேர்ந்து பணிபுரிய ஆசை இருக்கிறது. விஜய்யும் நானும் சேர்ந்து பணியாற்றினாலும், சரியான தயாரிப்பாளர் அமைய காத்திருக்க...

கே.வி.ஆனந்த்-விஜய் சேதுபதி முதன்முறையாக இணையும் படம் `கவண்'. கடந்த ஆண்டு தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் சேதுபதி `கவண்' படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவரது அடுக்குமொழி வசனமும் அடங்காத நடிப்பும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையப்போகிறது. குறிப்பாக விஜய்...

‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய், அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கதாநாயகிகளாக ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வைகைப்புயல் வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒரு...

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், தற்போது நிறைய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். அந்த வேடங்கள் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தருவதால், தொடர்ந்து அதுமாதிரியான வேடங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கவுதம் மேனனின் கனவுப் படமான ‘துருவ நட்சத்திரம்’ படத்தில்...

தனிஒருவன் படத்திற்கு முன்பு வரை ரீமேக் ராஜாவாக இருந்தவர் டைரக்டர் ஜெயம்ராஜா. அந்த படத்தை முதன்முறையாக சொந்த கதையில் இயக்கியதோடு மோகன்ராஜா என்றும் தனது பெயரை மாற்றினார். அந்த படம் ஹிட்டாகி அவரது கேரியரில் ஒரு நல்ல மாற்றத்தைக்கொடுத்தது. அதனால், இந்த பெயரை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், இனிமேல் ரீமேக் படங்களை இயக்கப்போவதில்லை என்று முடிவெடுத்த...

முதலமைச்சர் ஆசனத்தில் அமர்வதற்கு, ஜெயலலிதாவுடனான நட்பு மட்டுமே போதுமான தகுதி அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கும் வழக்கமுடைய நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்....

ஹன்சிகா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் போகன். இதில் ஹன்சிகாவின் அறிமுக காட்சியே டாஸ்மாக் கடையில் தான் துவங்கும். கும்பலில் முண்டியடித்துக் கொண்டு 90 ரூபாய் சரக்கு வாங்கும் ஹன்சிகா நேராக தனது தோழியின் அறைக்கு சென்று ராவாக அதை குடிப்பார். தனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் மிலிட்டரி அப்பாவை மிரட்ட வேண்டும் என்பதற்காக...

கொடி படத்திற்கு பிறகு அதிரடி நாயகியாக உருவெடுத்த திரிஷா, தற்போது நடித்து வரும் ஒவ்வொரு படங்களிலுமே ஒவ்வொருவிதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, அரவிந்த்சாமியுடன் நடித்து வரும் சதுரங்க வேட்டை-2 படம் அப்படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நட்டி நடராஜன் நடித்த ரோலை தொடர்கிறார் அரவிந்த்சாமி. ஆனால், அந்த கதைக்குள் ஒரு...

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தியபோது சேலத்தில் ரயிலை மறித்து சிறை பிடித்தனர். இந்த போராட்டத்தின் போது உயர் அழுத்த மின்கம்பியை பிடித்து ஏறிய சேலம் மன்னார் பாளையத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்ற 17 வயது இளைஞர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். நேற்றுமுன்தினம் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதை கேள்விப்பட்ட...

‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய், அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், ஜோதிகா இப்படத்தில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக செய்தி ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் உலாவி வருகிறது. இதில் ஜோதிகா தனது கதாபாத்திரத்திற்கு...

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவில் இருந்து விலகி வந்த நடிகர் ஆனந்த்ராஜ், தற்போது தமிழக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலாவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, தமிழகத்தில் மறுபடியும் ஒரு ஜுரம் தொற்றுக் கொண்டுவிட்டது. அதிமுக ஏன் அவசரமாக...

கனடாவில் உள்ள ரோரண்டோவில் அமைந்துள்ள பிரபல நிறுவனமான ஐடியல் குழுமம், 'ஐடியல் எண்டர்டெயின்மெண்ட்' எனும் புதிய நிறுவனத்தை துவங்கவுள்ளது. படம் மற்றும் இசை விநியோகமும், படத்தயாரிப்பும் மேற்கொள்ளவுள்ள இந்நிறுவனத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் ரோரண்டோவில் துவக்கி வைத்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குநராக அறிமுகமாகும் லீ மஸ்க் ('Le musk') திரைப்படத்தையும், ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி தற்போது விரைவில் திரைக்கு...

சில வருடங்களுக்கு முன் 'புதையல்' என்ற படத்தில் அர்விந்த்சாமியை இயக்கிய செல்வா, தற்போது மீண்டும் ஒரு படத்தில் அர்விந்த்சாமியை இயக்கவிருக்கிறார். அப்போது பிஸியான ஹீரோவாக வலம் வந்த அரவிந்த்சாமியின் மார்க்கெட் ஆட்டம் காண புதையல் போன்ற படங்கள்தான் காரணம். என்றாலும் பழசை மறந்துவிட்டு தற்போது செல்வாவுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதோடு அரவிந்த்சாமி கேட்ட 3 கோடி...

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் 'தல 57' படம் வேகவேகமாக வளர்ந்து வருகிறது. சி-3 படத்தில் சூர்யா நடிப்பது போன்று சர்வதேச போலீஸாக இந்தப் படத்தில் அஜித் நடிக்கிறார். இந்தப்படத்தில் அஜித்தின் மனைவியாக காஜல் அகர்வால் நடித்துள்ளதாக தகவல் அடிபடுகிறது. முக்கிய வேடமொன்றில் அதாவது அஜித்தின் உதவியாளராக கமலின் இளைய...

நடிகர் அஜித்தின் 57 வது படத்திற்கு விவேகம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் தன்னுடைய 57வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. அஜித் நடித்து வெளிவந்த...

All posts loaded
No more posts