- Saturday
- February 22nd, 2025

2021 ஆம் ஆண்டு டி. கிட்டு இயக்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. ஓடிடி தளமான பிளாக்ஷீப் சார்பில் பி.எஸ் வால்யூவில் வெளியிடப்பட்டது. குட்டி மணி, ஈஸ்வர் பாஷா, ஆனந்தன், விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான பிரவீன்...

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் `கட்டியம்`சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடிய திரைப்படப் பாடல் ஒன்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது. தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற “புத்தி கெட்ட மனிதரெல்லாம்”...

கர்ணன் படைப்பகம் நடாத்திய குறும்படப்போட்டியில் கிஷாந்தின் இயக்கத்தில் உருவான “கேளன்” குறும்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இக்குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது. குவியம் மீடியா நிர்வாக இயக்குனர் கனகநாயகம் வரோதயன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர்...

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படத்துக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார். இதற்கிடையே இப்படத்தை திரையிடும் முயற்சியில் கடந்த மார்ச் மாதம் தணிக்கை பெறுவதற்காக இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும்...

யுத்தத்தில் நேரடியான பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்கள் அதன் பின்னரான தற்கால சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சாலைப்பூக்கள் திரைப்படம் யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி படத்தின் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளது என படத்தின் இயக்குனர் சுதர்சன் ரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர்...

தமிழர் தாயக பிரதேசங்களில் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் தற்போதும் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார். ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி பென்ஜமின் டிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜெயப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொண்ட பின்னர், இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு...

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் தல அஜித். இவர் இன்னும் 3 படங்கள் மட்டுமே நடிப்பார் என பிரபல ஜோதிடர் ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு ஜோசியம் பார்க்கும் சங்கரநாராயணன் என்ற ஜோதிடர் தான் இப்படி தெரிவித்துள்ளார். மேலும் அஜித் 2019ல் அரசியலில் குதிப்பார் எனவும் அவர்...

தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் சுமார் 3,200 திரையரங்குகளில் மெர்சல் படம் வெளியாகியது, இந்நிலையில் , மெர்சல் படத்தின் வசூல் 5 நாளில் 150 கோடியை தொட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மெர்சல் படக்குழுவினர் ஆழ்ந்தமகிழ்ச்சியில் உள்ளனர். விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, தெறியை விட அதிகளவு வசூலை மெர்சல்...

ரஜினிகாந்த அரசியலுக்கு வந்தால், அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த அறிவிப்பை விடுத்ததாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. மக்கள் விரும்பினால் தாம் அரசியலுக்கு வரத் தயார் என்றும், அரசியலுக்கு வந்தபின் ரஜினியுடன் பேசத் தயார் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். அத்துடன்,...

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘விவேகம்’. ‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தை தொடர்ந்து விவேகம் படத்தை சிவா இயக்கி இருந்தார். கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டாலும், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, அஜித்துக்கு கையில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம்...

அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த இரண்டு அரசியல் கைதிகள் சுகயீனம் அடைந்ததன் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதியரசன் சுலக்ஷன் மற்றும் ராசத்துறை திருவருள் என்ற இரு கைதிகளே இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உண்ணாவிரதம் மேற்கொண்ட கணேசன் தர்ஸன் என்ற கைதி மரண தண்டனை கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை...

சூழல் மாசை கட்டுப்படுத்தும் வகையில் பொலித்தீன் மற்றும் பிளாிஸ்டிக் பாவனையை முற்றாக தடை செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது. எதிா்வரும் செப்டெம்பா் முதலாம் திகதி தொடக்கம் இத்தடை அமுலுக்கு வரும் எனத் தெரிய வருகின்றது. 20 மைக்குரோனுக்கு குறைந்த தடிப்பையுடைய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பாவனை வியாபாரம் மற்றும் உற்பத்தி ஆகிய அனைத்தும் குறித்த...

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீடு விழாவில் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்யும் விதமாக நடிகர் விஜய் பேசியுள்ளார். விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன்,...

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் உருவாகியிருக்கும் “ஒக்காடு மிகிலாடு” Okkadu Migiladu என்ற திரைப்படத்தின் முன்னோடி காட்சி (trailer) வெளியாகியுள்ளது. குறித்த திரைப்படமானது “நான் திரும்ப வருவேன்” என தமிழ் மொழியில் வெளியாகவுள்ளதுடன், தமிழ் மொழி மூலமான இந்த திரைப்படத்தின் காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நேற்றைய தினம் வெளியாகியுள்ள “நான்...

தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி சம்மேளனமும் சில தினங்களாக முட்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான தொழிலாளர்களை பயன்படுத்தி கொள்ளலாம். பெப்சி தொழிலாளர்களை மட்டுமே படத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார். இதனைத் தொடர்ந்து கோலிவுட்டில் பயங்கரமான பரபரப்பு...

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்'. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது. இந்த படத்தை தொடர்ந்து...

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் படம் 'விவேகம்'. இப்படத்தின் மூலம் உலகநாயகனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டீசர் இந்திய சினிமாவில் புதிய...

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் பி.கார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘2-வது ஆட்டம்’. இதில் புதிய இயக்குனர் பிருதிவி ஆதித்யா அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவருடன் லட்சுமி பிரியா, மைம் கோபி, நந்தினி ராய், சுரேஷ்...

ஜெயம் ரவி - அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான `தனி ஒருவன்' படம் அரவிந்த்சாமிக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அரவிந்த்சாமி தற்போது `சதுரங்கவேட்டை 2', `வணங்காமுடி', `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் `நரகாசூரன்' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில், சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு...

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் `விவேகம்'. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் `விவேகம்' தான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதுடன், `கபாலி',...

All posts loaded
No more posts