- Sunday
- February 23rd, 2025

பொலிகண்டி ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி, பொலிகண்டி ஒற்றுமை விளையாட்டுக் கழக கடற்கரை மைதானத்தில் நேற்று (03) மாலை நடைபெற்றது. இதன்போதே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “விளையாட்டுப் போட்டிகள், அதில் பங்குபற்றுபவர்களின் சோர்வைப் போக்கி உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்துவது மட்டுமன்றி, பார்வையாளர்களாக வீற்றிருக்கின்றவர்களுக்கும்...

வடக்கின் யுத்தத்தினால் கணவர்களை இழந்த பெண்களின் வாழ்வாதார உதவிகள் என்பது தற்போதைய அரசிலும் கட்டியேழுப்ப முடியாத நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றது. அதற்கான நடவடிக்கையினை மத்திய அரசின் மகளிர் அமைச்சு எடுக்க முன்வர வேண்டும் என்று மகளிர் விவகாரம், புனர்வாழ்வு அளித்தல் சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும்,தொழில் முனைவோரும், மேன்பாடும், வார்த்தகமும், வாணிபம்...

சமுர்த்தி திட்டத்தை மிகவும் பலமிக்கதாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கன பொறுப்பை குறையின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெற்ற சமுர்த்தி சமூக பலம் – 2017 தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டிய அனைத்து சமூகங்களையும் பலப்படுத்தும் திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம்...

அரசாங்க சேவையில் உள்ளவர்கள் மக்களின் நன்மதிப்பை பெறும்வகையில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் தமது சேவைகளை வழங்க முன்வரவேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்க சேவையில் ஏதேனும் ஒரு துறை மக்களின் எதிர்ப்புக்கும் வெறுப்புக்கும் உள்ளானால் அது தொடர்பில் அத்துறைகளின் தலைவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி தமது மனச்சாட்சிக்கு ஏற்ப நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும்...

அமைச்சராக பொறுப்பெடுத்துள்ள நிலையில் பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுத்து வருவதுடன், வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியும் எப்போது பறிக்கப்படும் என்ற அச்சமும் உள்ளதாக வட மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள், புனர்வாழ்வு மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து...

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் என சிறுவா் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நில மெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை...

கையடக்க தொலைபேசி பாவனை மனிதனை அரைப் பைத்தியங்களாக வீதியில் உலாவரும் நிலைமைக்கு தள்ளியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். புத்தகத்திருவிழா நேற்று மாலை மாநகரசபை சுகாதாரப் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,...

அறிவுரீதியாகவும், இராஜதந்திர ரீதியிலும் தமிழ் மக்களுக்கான தீர்வு நோக்கி எமது தலைவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அதிலே நாம் வெற்றியடைவோம். ஆனால், அபவிருத்தியை நோக்கிப் பயணிப்பதையும், தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற இரண்டும் வடமாகாணசபையினால் சாதிக்கமுடியும். ஆனால் நாம் அதனைச் சாதிக்கத் தவறிவிட்டோம் என வடமாகாண சபை உறுப்பினராகப் பதவி ஏற்றுள்ள ஜெயசேகரம் தனது கன்னி உரையில் தெரிவித்துள்ளார்....

அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு உட்படுத்தியுள்ளமை நாட்டின் ஜனநாயகத்தை மேலும் உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மூன்று தசாப்தங்களின் பின்னர் நேற்று (வியாழக்கிழமை) காங்கேசன்துறையில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்....

கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகளினதும் ஊடகங்களினதும் பொதுமக்களினதும் பேசு பொருளாக வடக்கு மாகாணசபையே இருந்து வருகிறது. அமைச்சர்களின் ஊழல், அமைச்சரவை மாற்றம், முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்று வடக்கு மாகாணசபை தொடர்பாகவே எல்லா இடங்களிலும் பேசப்பட்டு வருகிறது. இந்தக் குழப்பங்கள் அரசியல் தீர்வில் இருந்து தமிழ்மக்களைத் திசை திருப்பும் சதியே தவிர வேறு எதுவும்...

விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு யோசனையை ஏற்றிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005 ஆம் ஆண்டே ஜனாதிபதியாகியிருப்பார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடந்து உரையாற்றிய அவர், ‘1977 இல்...

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் தொடர்ந்தும் இணைந்து செயற்படவேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். ‘சிரேஷ்ட அரசியல்வாதியான ரணில் விக்கிரசிங்க நான்காவது தடவையாகவும்...

எந்தவொரு நாட்டு பிரஜைக்கும் துளியளவேனும் பாகுபாடு காட்டாத வகையிலான அரசியல் தீர்வொன்றை இந்த நாடாளுமன்றத்துக்குள் அடைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவு செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இந்தப் பிரேரணைக்கு நன்றி தெரிவித்து...

ஆசிரியர்கள் நல்ல மனநிலையுடன் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் நிறைவுசெய்வதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுராதபுரம் வலிசிங்க சரத்சந்ர மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிட தொகுதியை இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி அவர்களது அறிவை மேம்படுத்துவதற்காக அதிபர்,...

மேற்கத்திய நாடுகள் தெரிவிப்பது போன்று வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா என்பது தொடர்பிலும் ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு...

“இன்று பலரும், நுண் நிதிக் கடன்களைப் பெற்று, வீட்டில் தொலைக்காட்சிகளையும் டிஸ் அன்டனாக்களையும் பொருத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை விட, வீட்டுக்கொரு வடிகட்டும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பொருத்துவதன்மூலம், சுத்தமான குடிநீரைப் பருகமுடியும்” என்று, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா தாலிக்குளம் அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை, மாணவர்களின்...

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாட்டில் சமாதானம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”உண்மையான சமாதானம் ஏற்பட வேண்டுமாக...

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர் அவரைக் கொலை செய்வதற்காகவே வந்தார் என வட.மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைப் பிரிவின் ஏற்பாட்டில் சாதாரண தர பரீட்சையில் அதி உயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு...

கலாசார சீரழிவு மலிந்த ஒரு இனமாக நாங்கள் மாறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கும் விடயம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாவாந்துறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நூலகத் திறப்பு விழாவில் உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு நூலகம் அப் பகுதியில் உள்ள...

வடக்கு மாகாணசபை மூன்றரை வருடங்களைக் கடந்துவிட்ட போதும் ஊழல்கள் செய்ததைத் தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை. பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளதே தவிர வினைத்திறனாகச் செயற்படல்லை என்று சிலரால் மாகாணசபையிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவர்கள் மக்கள் மத்தியிலும் இதே கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். வடமாகாண சபை வினைத்திறன் அற்றதென்று இவ்வாறு விமர்சிப்பவர்கள் திட்டமிட்டு அரசியல் உள்நோக்கத்துடனேயே அதனைச் செய்து...

All posts loaded
No more posts