அழிவை நோக்கிய பயணம் : யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு விட்டது!!

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதம் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏதும் நிகழுமாக இருந்தால் பேரனர்த்தம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (புதன்கிழமை) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், தற்போது இலங்கையில் மத ரீதியான யுத்தம் ஒன்று ஏற்படும்...

சர்வகட்சி மாநாடு சர்வதேசத்தின் நன்மதிப்பை இழக்கச்செய்யும்! : மாவை

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சர்வகட்சி மாநாடு உள்ளிட்ட மூன்று விடயங்களை செயற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை, பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் செயற்பாட்டை இழுத்தடிக்கும் சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் யாப்பை உருவாக்கி...
Ad Widget

அரசியல் அமைப்பு குறித்து சர்வகட்சி, சர்வமத மாநாடு : ஜனாதிபதி

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் அங்கத்துவத்துடனான சர்வகட்சி மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய சர்வமத மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக காணப்படும் சில தவறான அபிப்பிராயங்களை நீக்கும் பொருட்டு எதிர்காலத்தில் 3 படிமுறைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அதற்கேற்ப...

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரச துறையில் தொழில்வாய்ப்பு

திறமையான விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரச துறையில் தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பத்தரமுல்ல அப்பேகம வளாகத்தில் நேற்று இடம்பெற்ற சர்வதேச வெள்ளைபிரபு தின நிகழ்வில் உரையாற்றிய சமூக வழுவுட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இன்னும் 20 வருடங்களில் தமிழிஸ் என்ற புதிய மொழி உருவாகும்! : முதலமைச்சர் சி.வி கவலை

இன்னும் இருபது வருடங்களில் தமிழ் மொழி மறைந்து தமிழிஸ் என்ற புது மொழி வழக்கத்திற்கு வந்துவிடும் நிலை உருவாகியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், முன்பு வானொலி ஒலிபரப்புக்களில் பேசப்படுகின்ற தமிழ்...

தவறான அரசியல் தீர்மானமே பிரபாகரனை உருவாக்கியது: ஜனாதிபதி

தேவையான நேரத்தில் சரியான தீரமானங்களை எடுக்கத் தவறியதாலேயே இன முரண்பாடுகள் ஏற்பட்டன. அவ்வாறான தவறான அரசியல் தீர்மானங்களே விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கியதென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து...

அடுத்த தீபாவளி ஒளிமயமாய் இருக்கும் என்கிறார் சம்பந்தன்

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டுள்ளதோடு, அடுத்த வருட தீபாவளி பண்டிகை இந்த வருடத்தை விட மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் அமையுமென்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித்...

வடக்கு மாகாணத்தின் கலாசாரம் அபாய நிலையில் இருக்கிறது: சர்வேஸ்வரன்

வடக்கு மாகாணத்தினுடைய அடையாளம், கலாசாரம் என்பன தற்போது அபாய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ் வடமராட்சி கரவெட்டி வேதாரணியேஸ்வர வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து...

நீங்கள் உயர்த்தவேண்டியது கறுப்புக் கொடிகளை அல்ல, சமாதானத்திற்கான வெள்ளைக் கொடிகளையே!: ஜனாதிபதி

நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவே என்னை ஜனாதிபதி ஆக்கினார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்கு வரும் போது, சில பிரச்சினைகள் இடம்பெற்றன. போராட்டங்கள் இடம்பெற்றன. பல வருடகாலமாக அரசியல் செய்பவன் என்ற...

சமூகப் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்த இளைஞர்கள் முன்வரவேண்டும்: சீ.வீ.கே

சனசமூக நிலையங்களில் இளைஞர்கள் கூட்டாக செயல்படுவது போன்று சமூகப் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்தவும் இளைஞர்கள் அனைவரும் முன்வரவேண்டும் என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் 61வது ஆண்டு விழாவில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்...

அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்: அடைக்கலநாதன்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆகியோர் இந்த...

போர் பாதித்த சமூகத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது : பொ.ஐங்கரநேசன்

ஆசிரியப்பணி மகத்தானது. அதுவும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ஆசிரியப்பணி அதிமகத்தானது. போர் சமூகக் கட்டுமானங்களைப் பாதித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் வகுப்பறையில் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது. தமது கற்பித்தல் கடமைகளுக்கு மேலதிகமாக, பெற்றோர்களது கடமைகளையும் சேர்த்தே மேற்கொள்ள வேண்டியுள்ளது. மனப்பூர்வமாக இந்தப் புண்ணிய கைங்கரியத்தை நிறைவேற்றி வருகின்ற ஆசிரியர்கள் தெய்வத்துக்கு நிகராகப் போற்றப்படக் கூடியவர்கள்...

அடுத்த தலைமைக்கு வழிவிடுதல் சிறந்த தலைமைத்துவப் பண்பு : ஐங்கரநேசன்

சனசமூக நிலையங்களின் தலைவர்கள் தொடங்கி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரை எங்களிடையே எண்ணற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களிற் பலர் ஆயுட்காலம் முழுவதும் தலைவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். இயலாத நிலையிலும் பதவியை அடுத்தவர்களிடம் கையளிக்கும் மனப்பாங்கு இவர்களிடம் இல்லை. உண்மையில், அடுத்த தலைமைக்கு வழிவிடுதல்தான் சிறந்த தலைமைத்துவப் பண்புகளில் முதன்மையானது என்று முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை...

ஆயுதப் போராட்டம் காத்திருக்கிறது! : பாராளுமன்றத்தில் இரா.சம்மந்தன்

ஆயுதப் போராட்டத்திற்கு காரணமாக அமைந்த விடயங்கள் தொடர்ந்தும் நாட்டில் நீடிப்பது பாரிய பிரச்சனையாக உள்ளதென இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இத்தகைய இனவாதச் செயற்பாடுகள் விரைவில் நீக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நாட்டை காக்கின்றோம் எனக் கூறி சிலர் மேற்கொள்ளும் இனவாதச் செயற்பாடுகள், இறுதியில் துன்பத்திலேயே முடிவடையுமென...

வடக்கு மாகாணசபையின் அரசியல் அறம் தாழ்ந்துபோயுள்ளது : ஐங்கரநேசன்

வடக்கு மாகாணசபை பலம் பெற்று விடக் கூடாது என்பதற்காகத் தெற்கு முன்னெடுத்த சதிக்கு எம்மவர்கள் சிலரும் தெரிந்தோ தெரியாமாலோ துணை போனதன் மூலம் வடக்கு மாகாணசபையின் அரசியல் அறம் தாழ்ந்து போயுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தாவடி வேதவிநாயகர் விளையாட்டுக்கழகத்தின் வாணிவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.10.2017) நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமவிருந்தினராகக்...

வித்தியாவுக்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு எப்போது கிடைக்கும்?

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வழங்கப்பட்ட போதிலும், வவுனியாவில் கொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவிக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதென வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார். வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையை பொறுத்தவரை, சிறுவர்களுக்கான சட்டங்கள் இருக்கின்றதா...

மைத்திரி அரசாங்கம், தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை : பசில் ராஜபக்‌ஷ

தமிழர்களின் வாக்கின் மூலம் ஆட்சிக்கு வந்த மைத்திரி அரசாங்கம், தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வடக்குக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்‌ஷ, அங்கு தமது புதிய கட்சியான பொதுஜன முன்னனியின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இதன் ஒரு கட்டமாக, யாழில்...

அரசாங்கம் இழைத்துவரும் துரோகத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை!

நாட்டில் அரசாங்கம் இழைத்துவரும் துரோகத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போவதாக, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைரான, பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில், இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “நாட்டில் அரசாங்கம் செய்து வருகின்ற துரோகச் செயல்களுக்கு, தமிழ்த் தேசியக்...

வித்தியாவின் கொலையில் குற்றவாளிகள் வெளியே! : மாவை

வித்தியாவின் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நபர்கள், “இன்னும் குற்றவாளிகள் வெளியே உள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்கள். இது மிகவும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், நேற்றைய தினம் மாணவி...

பிரபாகரன் ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன்! : கிளிநொச்சியில் பாரதிராஜா

நிகழ்காலத்தில் வாழ்ந்த ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன் யாழ். மண்ணில் பிறந்தான். அவன் தமிழர்களுக்கு ஓர் அடையாளத்தினை சொல்லிவிட்டுச் சென்றான் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், இது ஓர் தனி ஈழமான பிறந்திருக்க வேண்டியதற்காக போராடிய...
Loading posts...

All posts loaded

No more posts