முரண்பாடுகளால் தமிழர்கள் அழிவை சந்தித்தனர் – கே.வி.குகேந்திரன்

முரண்பாடுகளை வளர்த்து கொண்டிருப்பதனால் மூன்று தசாப்த காலம் எமது இனம் அழிவுகளை சந்திக்க வேண்டி நேர்ந்ததாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் தெற்கு இளைஞர் அணியின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....

வடமாகாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறவில்லை – ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி

வடமாகாணத்தில் கடந்த 30 வருடகாலமாக பெண்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறவில்லை என்பதுடன், பெண்கள் இரவு வேளையிலும் தைரியமாக நடமாடித்திரிந்ததாகவும் யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார். யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு ஸ்ரிக்கர் நாவலர் கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (08) வெளியிடப்பட்டது. இதில்...
Ad Widget

யாழ்.ஊடகங்களுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அறிவுரை

பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான விடயங்களை மோசமாக பிரசுரிப்பதை தவிர்த்து வன்முறைக்கானதீர்வை ஊடகங்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் கிருத்திகா தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற பால்நிலை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், பெண்கள் வன்முறைக்குள்ளாக்கப்படும் விடயத்தை தவிர்த்து வன்முறைக்குள்ளான...

சீருடை அணிந்தாலும் நாமும் மனிதர்கள் தான்; தீர்வு விரைவில் என்கிறார் புதிய கட்டளைத்தளபதி

சீருடை அணிந்தாலும் நாமும் மனிதர்கள் தான் உங்கள் பிரச்சினைகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். எனது பதவிக்காலத்தில் முடிந்தவரை தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என யாழ்.மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதி கண்ணகி நலன்புரி மக்களிடம் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகத் அல்விஸ் நேற்று கண்ணகி நலன்புரி நிலையத்திற்குச் சென்று...

பிழையான சிந்தனைகளை மாற்றி வடக்கு மாகாணத்தை பாதுகாப்போம்!

வடக்கு மாகாணம் இதுரைகாலம் பாதிப்புற்றவாறு இனியும் பாதிப்புக்குள்ளாக விடக்கூடாது. எமது பிழையான நடத்தைகளை, வழிமுறைகளை, சிந்தனைகளை மாற்ற நாம் முன்வர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம், தாய்ப்பாலூட்டல் ஊக்குவிப்பு மையம், இளையோர் நேய சுகாதார நிலையம் என்பன சனிக்கிழமை திறந்து...

கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு என்பதை வெளியிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்’

ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குகின்றது என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கடந்த 25 வருடங்களாக நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களுடன் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் மருதனார் மடம்...

ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் – சுரேஸ் எம்.பி

"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் வலி.வடக்கு மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் மருதனார்மடத்தில் உள்ள விவசாய பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது....

யுத்த வெற்றியின் 75% எனக்கே சொந்தம் – சந்திரிகா

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் 75 சதவீதத்தை நானே வெற்றிகொண்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற, எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'இந்த யுத்தத்தை நடத்தியதும் அதில் வெற்றிகொண்டதும் சரத் பொன்சேகாவே. யுத்தத்தின் 75 சதவீதமானவை எங்களது, அரசாங்கத்தின்போதே வெற்றிகொள்ளப்பட்டது. நாம்...

அதிக முதலீடு செய்வதற்கான வழிகளை ஊடகங்கள் செய்வதில்லை – டக்ளஸ்

மக்கள் அதிக முதலீடு செய்வதற்கான வழிகளை ஊடகங்கள் செய்வதில்லை என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா புதன்கிழமை (03) தெரிவித்தார். இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் முதலீட்டு ஊக்குவிப்பு கருத்தரங்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...

பொன்சேகாவுக்கு நடந்ததே எனக்கும் நடக்கும் – மைத்திரிபால

கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை அடுத்து, அப்போதைய பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவை இந்த அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது. அவருக்கு நடந்தவற்றை விட பல மடங்கு அதிகமானவை தனக்கு நடக்கும் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களை, நேற்று புதன்கிழமை கொழும்பு –...

ஜனவரி 08க்குப் பின்னரும் நானே ஜனாதிபதி

ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னரும் நானே இந்த நாட்டின் ஜனாதிபதி என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் 8ம் திகதியின் பின்னரும் நானே ஜனாதிபதி அதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. நாட்டில் நிலவிய அரிசி தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்து அதனை...

நட்புறவை பேணுவதன் மூலம் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்: தெல்லிப்பளை பொலிஸ் பொறுப்பதிகாரி

பொதுமக்கள் பொலிஸாருடன் மிக நெருங்கிய நட்புறவை பேணுவதன் மூலம் குற்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும் என தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.என்.எஸ்.கஸ்தூரியாராச்சி புதன்கிழமை (03) தெரிவித்தார். பிரதேசத்திலுள்ள குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொறுப்பதிகாரி தொடர்ந்து கூறுகையில், எமது பொலிஸ் நிலையத்தில் கடந்த வருடத்தை (2013) விட இவ்வருடம் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன. பொதுமக்களின் ஆதரவுடன் சமூகத்தில்...

தேசிய கல்வியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த அழகியல் பாடங்களை அடுத்த ஆண்டுமுதல் கற்பிக்க நடவடிக்கை – டக்ளஸ்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த அழகியல் பாடங்களை அடுத்த ஆண்டுமுதல் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, மேலும் கல்லூரியின் வளங்களை மேலும் நிறைவு செய்து சிறப்பான வளங்களோடு இயங்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு...

சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது தடுக்கப்படல் வேண்டும் – சூசையானந்தன்

சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது சட்டபூர்வமாக தடுக்கப்பட வேண்டும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஏ.எஸ்.சூசையானந்தன் திங்கட்கிழமை (01) தெரிவித்தார். சிறுவர் தொழிலாளர்கள் பற்றி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சிறுவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். கடற்றொழில் மிகவும் கடினமான ஒரு தொழில். சிறுவர்கள்...

எனது அரசில் குறைகள் உண்டு – மகிந்த

ஆட்சியிலுள்ள அரசில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கப்பம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஊடகவியலாளர்களில் 70 வீதமானவர்கள் அரசிற்கு விரோதமான வகையிலேயே இவர்கள் தகவல்களை வெளியிடுகின்றனர். நீதிமன்றின் நடவடிக்கைகளுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் தலை வணங்குகின்றேன்....

உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கியுள்ளேன் – சந்திரிக்கா

உயிரைப் பணயம் வைத்து நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். (more…)

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சாதகமான முடிவிணையே எடுக்கும்

வடக்கு மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கின்றது என்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்னாவதென்பதையும் வடக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளது. கூட்டமைப்பின் பலம் அரசாங்கத்திற்கு தெரியாவிடின் கடந்த கால தேர்தல் முடிவுகளை மீட்டுப்பாருங்கள் என தெரிவிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சாதகமான முடிவிணையே எடுக்கும்...

ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது தடவையும் ஆட்சிக்கு வந்தால் அவர் ஒரு சர்வாதிகாரியே!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாகவும் ஆட்சிக்கு வருவாரானால் அவர் நிச்சயமாக ஒரு சர்வாதிகாரியே. இவ்வாறு தெரிவித்துள்ளார் பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. பொலன்னறுவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றகையில் தெரிவித்தவை வருமாறு:- நாடாளுமன்றத்தில் மூன்றில்...

மரணித்தவர்கள் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயமே!

எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். (more…)

ஜனாதிபதியின் உரை

பதினெட்டாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கம் (more…)
Loading posts...

All posts loaded

No more posts