- Sunday
- February 23rd, 2025

பூமி இன்று சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து விரைவிலேயே பல நாடுகளின் கரையோரப் பகுதிகளைக் கடல் மூழ்கடித்துவிடும் என்று எச்சரிக்கப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாடும் அதன் கழுத்துப்பகுதியான ஆனையிறவுப்பகுதியில் கடல்நீர் புகுவதால் பெருநிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. இப்படி, ஓசோன்படையில் ஓட்டை, காடுகள் அழிப்பு, காலநிலையில் மாற்றம் என்று பல்வேறு சுற்றுச்சூழல்...

இலங்கையில் உள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர், அவர் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சிறந்த வருமான மார்க்கத்தை வழங்குவதே நல்லாட்சி அரசின் நோக்கம் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்....

புதிய வருடத்திலாவது வடமாகாணத்திற்கு தேவையான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும் என முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். க.பொ.த. உயர்த்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் சிறந்த பெறுபேற்றை பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்....

நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் தென்பகுதி அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா, கிடாய்ச்சூரியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வடக்குக் கிழக்கினைப் பொறுத்தவரையில் தமிழ்பேசும் மக்களாகிய நாம் ஒரு திருப்பு முனையில்...

மத்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கின்ற திட்டங்களை விரைந்து செயற்படுத்தி அவை மக்களை சென்றடையும் வகையில் நடைமுறைப்படுத்தாவிடின் அவற்றை தவறவிட்டு விடுவோம் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்தார். 2018 ஆம் ஆண்டிற்கான அரச கரும சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர்...

தங்களுடைய உயிரைத் துச்சமாக நினைத்து எங்களின் இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்களை நாங்கள் தூக்கி வீசிவிட முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில்...

சீரடி சாயி பாபா இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒன்றுபடுத்தி அதில் வெற்றியுங் கண்டார் : முதலமைச்சர்
சீரடி சாயி பாபாவின் வியாழக்கிழமை பஜனை கொட்டாஞ்சேனை புதிய செட்டித் தெரு, சாயி மந்திரில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்வறது இதில் வடமாகாண முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா………. அன்புடைய சாயி பக்தர்களே, சகோதர சகோதரிகளே! என்னை ஒரு சில வார்த்தைகள் இங்கு பேச அழைத்தமைக்காக உங்கள் ஒழுங்கமைப்பாளர்களுக்கு எனது நன்றியை முதற்கண் தெரிவித்துக்...

பூமி எமது தாய். எமது மொழியில் மட்டும் அல்ல் உலகில் பேசப்படுகின்ற எல்லா மொழிகளிலுமே பூமித்தாய் என்றும் பூமாதேவி என்றும் பூமிக்கு உயிர்கொடுத்துத்தான் அழைத்து வருகிறார்கள். ஆனால், பூமியின் பிள்ளைகள் போல நாங்கள் நடந்து கொள்வதில்லை. தலைமுறைகளுக்கும் சொத்துச் சேர்ப்பதற்கு ஆசைப்படுகின்ற நாங்கள் அளவுகணக்கில்லாமல் வளங்களைச் சுரண்டிப் பூமியில் ஒட்டுண்ணிகளாகவே வாழ்ந்து வருகிறோம். அதன் விளைவுதான்...

வட. மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபைக்கான உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் குடியிருப்பு வட்டாரத்தில் போட்டியிடும், இ.கௌதமனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது...

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல் நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கோரியுள்ளார். யாழ். மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். வரலாற்றில்...

பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் குறித்த அவரது அக்கறையும் ஒன்று. உலக சூழல்தினத்துக்காகத் தங்கள் மாணவர் தினத்தையே மாற்றி அமைத்தவர் அவர். நான் அறிந்த ஆயுதப் போராட்டத் தலைமைகளில் சுற்றுச்சூழல் மீது இப்படி அக்கறை கொண்ட ஒரு தலைவராகப்...

இப்போது யுத்தம் இல்லை. ஆனால், இலங்கை அரசாங்கம் சத்தம் இல்லாமல் தமிழ்ச் சிறுபான்மை இனத்தைப் பெரும்பான்மைக்குள் கரைத்து, முழு இலங்கையையும் பௌத்த சிங்கள நாடாகக் கட்டமைக்கும் முயற்சியை இப்போதும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அரசாங்கம் எமக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கத் தவறினால், எமது பிரதேசத்தை ஆட்சி செய்யும் அரசியல் அதிகாரத்தை எங்களிடம் தரத்தவறினால், நாங்கள் இப்போது...

இயற்கையோடு ஒன்றி வாழும் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகைமாத விழா சங்கிலியன் பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி ஆரம்பமானது தமிழ்த்;தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகை மாத விழா இன்று சனிக்கிழமை (18.011.2017) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி...

அரசியல் அமைப்பை கொண்டு இன ஒற்றுமையை கட்டியெழுப்புவதை விட பௌத்த தர்மத்தின் மூலம் சாந்தி சமாதானத்தினை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குர்ரே தெரிவித்துள்ளார். புத்தூர் மடிக்கே பஞ்ச ஹீத வித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் புதிய நூலக கட்டிடடத்தினை திறந்துவைத்து உரை நிகழ்த்தினார். இங்கு...

இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கான ஒரு மார்க்கமாக அரசியலமைப்பினைப் பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வரவுசெலுவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மஹிந்தவிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ”புதிய அரசியலமைப்பினை...

“புதிய அரசமைப்புத் தொடர்பில் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவானது, தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும். அதனால் இனியும் அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது. அவர்கள் சின்னத்தில் (வீட்டுச் சின்னம்), தேர்தலில் போட்டியிடவும் முடியாது” என, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். பொது நூலகத்தில் நேற்று (12) நடைபெற்ற தமிழ் மக்கள்...

தமிழ் மக்களின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டிகள், முரண்பாடுகள் காரணமாக, ஒட்டுமொத்த தமிழினமும் அழிவுப் பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதென, வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பொதுநூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று (12) காலை இடம்பெற்ற, தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு...

பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய கல்வித்திட்டம்அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஹம்பாந்தோட்ட சர்வதேச துறைமுகம் எக்காரணம் கொண்டும் சீனாவுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மாத்தறை ஒருங்கிணைப்பு அழுவலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்ட...

“2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம், இளைஞர்களுக்கு இனிப்பானதாக அமையும்” என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இணைய ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல், ஊடக அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றபோதே, அமைச்சர் மேற்படி தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கொடும் பிடிக்குள் சிக்கியிருந்த ஊடகத்துறைக்கு, இப்போது அதிகமாகவே சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தச்...

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் எங்கள் மத்தியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாக, விடுதலை புலிகளின் திருமலை மாவட்ட புலனாய்வு துறை தளபதிகளில் ஒருவராக இருந்த அன்பு என அழைக்கப்படும் இன்பராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளினால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர்...

All posts loaded
No more posts