- Thursday
- November 21st, 2024
1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் 13 திருத்த சாசனத்தின் மூலம் வடக்கு கிழக்கு இணைப்பு இருந்து வந்த நிலையில் 18 வருடத்திற்குப் பின்னர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் பிரிக்கப்பட்டிருக்கின்றது என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார். கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்...
முட்கம்பிகளுக்குள்ளே இருந்த எமது இனத்தின் பலம் விடுதலைப் புலிகளின் காலத்திலேயே உச்ச நிலையில் இருந்தது என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நற்பட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில்...
நிலையான ஓர் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும், கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். கல்முனையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...
அரசாங்கத்திற்கான கூட்டமைப்பின் ஆதரவானது ஒரு இராஜதந்திரமே தவிர, அதனை அரசாங்கத்திடம் சோரம் போவதாக கூற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”உலக நாடுகள்...
தென்னிலங்கைச் சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகள் எல்லாம் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கெல்லாம் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளில் போட்டியிடுபவர்கள் எல்லோரும் எமது அயலவர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்களாக உள்ளார்கள். தங்கள் வேலை வாய்ப்பு மற்றும் இதர சலுகைகளை எதிர்பார்த்தே இவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது வெள்ளிடைமலை. தெரிந்த முகம் என்பதற்காக இவர்களுக்கு நாங்கள் வாக்களித்தால், நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலையை...
ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் வியாழக்கிழமை ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு...
நாட்டைத் துண்டாடவோ அல்லது பிளவுபடுத்தவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் எவருக்கும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை, செவனபிட்டிய பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில், “இன்று நாட்டிற்குத் தேவையாக இருப்பது மன்னராட்சி...
இதுவரை மக்கள் ஆதரித்துவந்த தரப்புக்கள் தொடர்ந்தும் கோமாளித்தன அரசியல் செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் இவ்வாறு கோமாளித்தன அரசியல் செய்வதற்கா கடந்த 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில்...
தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் நாற்பது வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எவ்வாறு சுனாமிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதோ அதே போல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய...
வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களே இலங்கை அரசியலில் இன்று அதிகம் பேசப்படும் தமிழ் அரசியல் தலைவராக உள்ளார். ஒரு புறம் அவரது அரசியல் எதிராளிகள் அவரை அரசியல் அனுபவம் இல்லாதவர் என்றும், நிர்வாகம் தெரியாதவர் என்றும், அபிவிருத்திக்கு எதிரானவர் என்றும், வடக்கு மாகாணத்துக்கு வருகின்ற நிதியைச் சரிவரப் பயன்படுத்தத் தெரியாமல் திருப்பி அனுப்புகின்றார் என்றும்...
இனத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் இன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா ஆதங்கம் வெளியிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், முன்னாள் போராளிகளோ ஒரு சைக்கிள்கூட இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என அவர்...
அரசாங்கத்திடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பழிபோடுபவர்கள், தமிழினத்தின் விடுதலைக்கோ தேசத்தை கட்டியெழுப்புவதற்கோ பொருத்தமற்றவர்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் விஞ்ஞாபனத்தினை...
பிரித்தானியரிடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபின் உருவாக்கப்பட்ட மூன்று அரசியல் யாப்புக்களை தமிழ்த் தரப்புக்கள் நிராகரித்திருந்த நிலையில் அதிலும் மோசமான அரசியல் யாப்பினை தமிழ்த் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ள முன்வந்திருப்பது இந்தத் தீவிலே தமிழர்களை வாழ்வுரிமை அற்றவர்களாகவே ஆக்கும் எனக் எச்சரித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் எமது தேசியத் தலைவரால் விடுதலைப் போராட்டம்...
எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் என சட்டத்தரணி சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (26.01.2018) கரவெட்டியில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய அவர், “எங்கள் தலைவன் பிறந்த வரலாற்றுப் பெருமைவாய்ந்த இந்த...
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மாற்று அரசியல் தலைமை தேவை என்னும் அவசியம் தற்போது உணரப்பட்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, பெரியார்குளத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் கௌதமனை ஆதரித்து மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், “கடந்த காலத்தில் தமிழ்த்தலைமைகளை நம்பி வாக்களித்த மக்களின்...
கூட்டமைப்பின் தலைமையை ‘உங்களால் முடியாவிட்டால் அரசியலை விட்டுப் போங்கள்’ என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவேசமாக உரையாற்றியுள்ளார். வவுனியா, பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு உரையாற்றியுள்ளார். இது குறித்து அவர்...
நல்லாட்சி அரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரப்போகின்றோமா என்பதை கருத்தில் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை நகரசபை வேட்பாளர்களுடனான மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...
”தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அரசாங்கம் தருவதனை பெற்றுக்கொள்ள முடியாது. எமக்கு விருப்பமில்லாத தீர்வினை எம்மீது திணிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் இன்னும் 20 வருடங்களின் பின்னர் வடக்கு கிழக்கை சேராதவர்கள் வடக்கு கிழக்கை ஆட்சிசெய்ய, அவர்களின் கீழ் நாம் வாழும் நிலை ஏற்படும்” என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்...
தமிழ் மக்களின் பிரச்சினைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, காணி உரிமை மற்றும் காணாமல் போனோர் ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார். கட்சியின் உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடும் , வேட்பாளர் அறிமுகமும் நேற்றய தினம் (வெள்ளிக்கிழமை) யாழில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும்...
நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு நல்லொழுக்கமுள்ள மக்கள் பிரதிநிதிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்ய வேண்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குராங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தில் உள்ள தவறுகளை சரி செய்யும் ஊழல் மோசடியற்ற மக்கள் சார்பு...
Loading posts...
All posts loaded
No more posts