Ad Widget

வௌிநாட்டு முதலீட்டாளர் உதவியுடன் வடக்கில் புதிய வாய்ப்புக்கள் – முல்லைத்தீவில் ஜனாதிபதி

வடக்கு இளைஞர் யுவதிகளின் பிரச்சினையாகவுள்ள தொழில் பிரச்சினைக்குத் தீர்வாக உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் பல புதிய முதலீட்டு வாய்ப்புகளை எதிர்காலத்தில் வட மாகாணத்தில் ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்குடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹைத்ரமணி ஆடைத்தொழிற்சாலையை நேற்று முற்பகல் திறந்துவைத்து உரையாற்றும்...

ஈழ மகா காவியம் எழுதுவேன்! முல்லைத்தீவில் வைரமுத்து உருக்கமான பேச்சு

முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். இதன்போது சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து “ஈழ மகாகாவியம் எழுதுவதை என் வாழ் நாளின் பெரும்பணியாகக் கருதுகிறேன்” என, குறிப்பிட்டார். கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தத் தியாகத் திரு மண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். என்...
Ad Widget

மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய சம்பந்தன் தலைமையில் உழைப்போம்! – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அரசியல் தீர்வு தொடர்பாக ஒருமித்து செயற்படுவோம். எல்லோருமாக சேர்ந்து மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய தலைவர் சம்பந்தன் தலைமையில் உழைப்போம் என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய...

வடக்கில் உபயோகிக்கப்படாமல் இருக்கும் காணிகளை கையேற்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது அரசு!: வடக்கு முதல்வர்

வடமாகாணத்தில் உபயோகிக்கப்படாமல் இருக்கும் காணிகளை கையேற்க வேண்டுமென்று அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ். பொதுநூலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற 2016-2018 காலப்பகுதியில் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் தன்னிறைவு காணும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்...

தமிழீழத்தை உருவாக்குவதற்கான சித்தாந்தம் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை! – ஜனாதிபதி

புலிப் பயங்கரவாதம் யுத்த களத்தில் தோற்கடிக்கப்பட்டபோதும் இந்த நாட்டில் தமிழீழத்தை உருவாக்குவதற்கான அவர்களது சித்தாந்தம் தோற்கடிக்கப்படவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுத்த ரீதியில் தோல்வியடைந்த பயங்கரவாதிகளை சித்தாந்த ரீதியாக தோல்வியடையச் செய்யும் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு புதிய அரசு பாடுபடுகிறது என்றும் குறிப்பிட்டார். இந்தப் பொறுப்பை உரியவாறு நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்போது, நாட்டின்...

அரசியல் கைதிகள் என எவரும் இல்லை!

போட் சிட்டி எனப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துடன் இலங்கை முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சீனாவின் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். சுவிஸர்லாந்தில் நேற்று ஆரம்பமாகியுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள, ரணில் விக்ரமசிங்க, ஊடகவிலயாளர் சந்திப்பில் கலந்து...

இறைச்சிக்காக மாடுகள் வெட்டுவதைத் தடை செய்ய நடவடிக்கை!

இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை முற்றாகத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாட்டிறைச்சி தேவைப்படுவோருக்காக வெளிநாடுகளிலிருந்து அதனை இறக்குமதி செய்ய முடியும் என்றும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாட்டுப் பொங்கல் பண்டிகையில் முக்கியத்துவம் பெறும் ஒரு விலங்கு என்பதுடன் மத ரீதியிலும் மக்கள் வாழ்விலும் பெரும் மதிப்பைப்...

சகல சமயத் தலைவர்களிடமும் ஜனாதிபதி கோரிக்கை

நாட்டிலுள்ள அனைத்து மக்களின் அச்சம், சந்தேகங்களை நீக்கி சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத் திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்ல முன்வருமாறு சகல சமயத் தலைவர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது, நீதி அல்லது புதிதாக நிறைவேற்றப்படும் சட்டமூலங்களால் மட்டுமே இயன்றதல்ல...

இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிக்க சர்வதேச மட்டத்தில் போட்டி நிலவுகிறது

புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு நாட்டிற்குள் எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தற்போது அனைத்து உலக நாடுகளினதும் ஆசீர்வாதம் கிடைத்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதன் காரணமாக அரசியல் சந்தர்ப்பவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் வழங்கிக் கொண்டிருக்காமல், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் பொறுப்பேற்ற வேலைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். பொலன்னறுவை நகரத்தின் சுற்றுவட்டப் பாதையின்...

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கோ பௌத்த மதத்திற்கோ பாதிப்பு ஏற்படப் போவதில்லை; நாட்டை பிரிப்பதற்கு இடமில்லை

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதம் சீர்குலையப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை அலரி மாளிகையில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அதன்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், புதிய...

சிங்கள மக்களைப் போன்று தமிழ் மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும்- சந்திரிகா

கடும்போக்கு வாதிகள் வடக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். சிங்கள மக்களைப் போன்று ஏனைய இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தற்போதைய அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார். யாழ்ப்பாணம் மருதனார் மடம் - இராமநாதன் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த...

6 மாதங்­களில் ஒரு­தொ­குதி காணிகள் விடு­விக்­கப்­படும் : டி.எம்.சுவா­மி­நாதன்

அடுத்த ஆறு­மாத காலப்­ப­கு­தியில் மேலுமொ­ரு­ தொ­குதி காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ள­தாக சிறைச்­சாலை, மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து சமய விவ­கார அலு­வ­ல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார். யாழ்.வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடை­பெற்ற தேசிய தைப்­பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார், அவர் மேலும் உரையாற்றுகையில், நீண்­ட­கா­ல­மாக தமிழ்­மக்கள் சூரிய பக­வா­னுக்கு நன்­றி­செ­லுத்தும் முக­மாக இந்­நாளை...

தைப்பொங்கல் என்பது தேசிய நிகழ்வு; அது யாழ்ப்பாண நிகழ்வல்ல- ரணில்

தைப்பொங்கல் என்பது தேசிய நிகழ்வு. அது யாழ்ப்பாண நிகழ்வோ இந்து நிகழ்வோ அல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார். உலக சுற்றுச்சூழலில் மாற்றங்கள் நிகழ்வது போன்று உலக...

நான் தீவிரவாதியல்ல; சிங்கள மக்களுடன் எதிர்ப்போ கோபமோ இல்லை- முதலமைச்சர் சீ.வி

தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில், சர்வமதங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கதே. 1960 களில் சர்வமத சம்மேளனத்தின் உப செயலாளராக நான் இருந்தேன். பிரதமர் டட்லி சேனாநாயக பிரதமராக இருந்த காலத்தில் எங்கள் சம்மேளனம் இதையே செய்தது....

போதைப்பொருட்கள் குறித்து அவதானமாக இருங்கள்! – மன்னாரில் முதலமைச்சர் அறிவுரை

அவசர உலகத்தில் திடீர் பணக்காரர்களாக வருவதற்கே விரும்புகின்றார்கள் இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். மன்னாரில் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப கூட கட்டடங்களை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சீரிய வாழ்க்கை முறை, ஒழுக்கம், வர்த்தகத்தின் உண்மைத்தன்மை, மார்க்கத்தின் வழிமுறை அனைத்தையுந் தொலைத்து விட்டு என்ன இழிதொழில் செய்தாவது திடீர் பணக்காரர்களாக...

செல்வநாயகத்தின் கோரிக்கை அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகி இருக்க மாட்டார்

புதிய அரசியலமைப்பு முறை ஒன்றை உருவாக்குவதற்கான பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமாகின. இதன்போது அரசியலமைப்பு சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்பித்தார். புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் பாராளுமன்ற அரசியலமைப்பு சபைக்குறிய உறுப்பினர்கள்...

பிரபாகரனின் குழந்தை என்பதற்காக கொடிய முறையில் அந்தக் குழந்தை கொல்லப்பட்டுள்ளது – மகாத்மா காந்தியின் பேரன்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ புலிகளுடனான போரில் வென்றிருக்கலாம் ஆனால் போரின்போது மேற்கொண்ட குற்றங்களை மறைக்க முடியாது. இந்த வெற்றியின் மூலம் துப்பாக்கிகள் மௌனமாகிய அதேநேரம் சமாதானப் பேச்சுக்களும் மெளனமாகி விட்டன.இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி. மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓர் ஆண்டு பூர்த்தி விழா நேற்று கொழும்பில்...

தேவையான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க பின்நிற்க மாட்டேன்

வாழ்க்கையில் தான் அதிகமாக சந்தோஷப்பட்ட நாள் எதுவென்று யாராவது என்னிடம் கேட்டால், அது கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி அப்போதைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தினமாகும். ஜனநாயக அரச நிவாகத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு நேற்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால...

நல்லாட்சியை கைநழுவ விடமாட்டேன் – பிரதமர்

பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன மற்றும் பிரதான கட்சிகள் என்று இல்லாமல் அனைத்து கட்சிகளையும் எம்முடன் இனைத்துகொண்டு நல்லாட்சியை முன்னெடுப்போம். அனைத்து மக்களும் எம்மோடு இருப்பதால் நல்லாட்சியை ஒரு போதும் கைநழுவ விட மாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த ஆண்டில்...

அரச அலுவலகங்களின் அரசியல் பேசாதீர்கள்

அரச அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள், சக அலுவலர்களுடன் சதா பேசிக் கொண்டிருப்பதையும் வேலையில் இருக்கும் போது அரசியல் பேசுவதையும் ஒரு பழக்கமாக்காதீர்கள். கட்டுப்பாடற்று கடமைகளை மறந்து பணிகளில் ஈடுபடுவதைப் பழகிக் கொள்ளாதீர்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள், திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 700 பேருக்கான நியமனங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts