- Wednesday
- November 27th, 2024
தனக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ராஜபக்சக்களினால் ஆபத்து இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், சுதந்திரக் கட்சியை விட்டு மஹிந்த ராஜபக்ச பல தடவை வெளியேறியிருந்தார்....
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய ஆளுநர் ஒருவர் வட மாகாணத்திற்கு கிடைத்துள்ளார். அதற்கு நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் தெங்கு பயிர்ச்செய்கைக்கான இராஜாங்க அமைச்சர் ரெஜினோல்ட் குரே, வடமாகாணத்திற்கான ஆளுநராக இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில்...
மற்றவர் வளர்ச்சி கண்டு மனதில் பொறாமைத் தீ மூளாமல் இருக்க விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (12.02.2016) இடம்பெற்ற வருடாந்த மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு உரையாற்றும்போது, வெற்றி தோல்விகளைச்...
நாட்டில் முன்னிருந்த அரசியல் தலைவர்கள் மின்சாரக் கதிரைக்கு செல்வதில் இருந்து விடுபட்டமைக்கு காரணம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததனாலேயே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தான் மின்சாரக் கதிரைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று அன்றிருந்த அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டிருந்த போதும் அவர்களை அதிலிருந்து காப்பாற்ற...
தனது தந்தையின் பதவி நிரந்தரமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி இருந்தன. தந்தைக்கு இணையாக அவரது மகள் சத்துரிக்கா, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தனது தந்தையின் ஜனாதிபதி பதவி நிரந்தரமில்லை என்று...
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் ரூபா 9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முழங்காவில் பேரூந்து நிலையம் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. முழங்காவில் பிரதான பேரூந்து நிலையத்தை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நேற்று காலை 8.30 மணியளவில்...
எமது மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவம் கையகப்படுத்தி, அதனை அனுபவித்து வருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி முழங்காவில் பிரதேசம் ஒரு சிறந்த...
சர்வதேச கண்காணிப்பாளர்களுடைய பங்களிப்புடனேயே போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற சரத் பொன்சேகா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதை வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களினது பங்களிப்பும், ஆலோசனைகளும் அவசியானது. இராணுவத்தினருக்கு...
இலங்கையின் நீதித்துறை கடந்த சில காலமாகவே அதிக அளவில் அரசியல் மயமாக்கப்பட்டு, சமநிலையை இழந்து, நம்ப முடியாத நிலையை எட்டியதால்தான், இலங்கையில் நடந்து முடிந்த போரில் இருதரப்புகளாலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற உருவக்கப்பட வேண்டிய பொறிமுறைகளில் சர்வதேச வல்லுநர்கள் பங்கு பெறுவதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் பிரேரித்ததாக ஐ.நா. மனித...
தமிழரின் தேசம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதா இல்லை மக்கள் கூட்டம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதா என்பது தொடர்பில் தமிழ்த் தலைமைகளினுள் விவாதங்கள் காணப்படுவதே தற்போதைய யதார்த்தமாகவுள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்களே இறுதிதீர்மானம் எடுக்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்...
இலங்கையின் சுதந்திர தினமானது தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினமாகவே பார்க்கப்படுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி கந்தசாமி கோவிக்கு அருகில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கத்தினால் நேற்று எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காலை 09.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களும்...
எமது அழகிய தாய் திருநாட்டினை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று(04) இலங்கைத் திரு நாட்டின் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு காலிமுகத்திடலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். காலிமுகத்திடலில் நேற்று ஏற்பாடாகியிருந்த சுதந்திரதின வைபவத்திற்கு ஜனாதிபதி தம்...
அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் வலியுறுத்துவோம்! – மாவை சேனாதிராசா
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும்படி, இலங்கை வரவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் நேரில் வலியுறுத்துவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து ஐக்கிய...
தமீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து...
புதிய அரசியலமைப்புக்கு ஆலோசனை வழங்கும் வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவிடம், போருக்கான காரணங்கள் மற்றும் அதன் பின்புலங்கள் தொடர்பான புராதன ஆவணங்களை கையளிக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில், இனப்பிரச்சினை தீர்வுத் திட்டத்துக்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, வடமாகாண சபை உறுப்பினர்கள்...
எத்தனை இடர்கள் வந்தபோதும் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. நம்பிக்கைதான் வாழ்க்கையின் அடித்தளம். அந்த நம்பிக்கையை நாம் இழந்து மனம் துவண்டுவிழாமல் இருப்பதற்கு விழாக்கள் உதவுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். புளியம்பொக்கணையில் சனிக்கிழமை (31.01..2016) ஹற்றன் நாஷனல் வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு...
2015ஆம் ஆண்டு க.பொத உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 9 மாகாணங்களில் வட மாகாணம் முதலிடம் பெற்றுள்ளது. 25 மாவட்டங்களில் யாழ் மாவட்டமே முதலிடம் பெற்றுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (27) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் நடைபெற்ற சமுர்தி 'சிப்தொர' புலமை பரிசில் வழங்கல் நிகழ்வில்...
தனக்கு தமிழ் மொழியில் உரையாற்ற முடியாமல் போனமை வருத்தமளிப்பதாகவும் அதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் மக்கள் ஆட்சி முறை ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தினை எதிர்ப்பவர்கள் கொலை செய்யப்படவில்லை....
மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப புதிய கட்சியை உருவாக்க இது சிறந்த சந்தர்ப்பம் என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஆர்.சம்பந்தன் இந்த அரசாங்கம் அமைய ஒத்துழைப்பு வழங்கியவர் என்பதால், அவரிடம் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து மக்களின் எதிர்ப்புகள் தொடர்பான கருத்துக்களை பிரதிபலிக்க முடியாது எனவும்...
இலங்கை மக்கள் எப்போதும் எமது மனதிலும் இடம் பிடித்தவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களுக்கான உதவிகளையும் செயற்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் . அதனால் இலங்கை நாடு எமக்கு அயல் நாடாக தெரியவில்லை. இது எங்களுடைய வீடாகக் காணப் படுகின்றது என யாழ் இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஐன் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்திய நாட்டின் 67 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று...
Loading posts...
All posts loaded
No more posts