- Tuesday
- November 26th, 2024
நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு கிட்டப்படவேண்டும். அதன்மூலம் மக்கள் அந்த அங்கிகாரத்தை பயன்படுத்தும் நிலை இருக்கவேண்டும். இந்த பொறுப்பை அரசாங்கம் ஐ.நாவில் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கும் தொழிலாளர்கள் இன்று கூறுகின்ற குறைபாடுகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. இவ்வாறானதொரு தீர்வு எட்டப்படும்போது பல குறைகள் தீர்க்கப்படும்' என்று எதிர்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்...
சேவையாளர்களாக நாட்டுக்கும் மக்களுக்கும் தௌிவான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்படவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெற்ற மேதின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாடு தற்போது பொருளாதார ரீதியில் பின்நோக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இவ்வாறான சிக்கலான மற்றும் நெருக்கடியான சூழலில் முன்னோக்கி செல்ல அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும்...
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த கூட்டுறவுத்துறையின் இன்றைய சரிவுக்கு கூட்டுறவு அமைப்புகளினுள்ளே கட்சி அரசியல் புகுந்ததும் ஒரு காரணம். ஒருபோதும் கூட்டுறவு அமைப்புகள் கட்சி அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது. கட்சிகளின் தொண்டர்படையாக இயங்கக் கூடாது என்று வடக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண கூட்டுறவாளர்களின் மேதினப் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.05.2016) கிளிநொச்சி கூட்டுறவுக்...
இலங்கையின் வடக்கே, இராணுவ முகாம் ஒன்றுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அத்துமீறி நுழைந்ததாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளதாக பிரதமர் விமர்சித்துப் பேசியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20-வது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றியிருந்த போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார். கிளிநொச்சியில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றின்போது, எதிர்க் கட்சித்...
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் தனி மாநிலம் எனக்கூறி தமிழ் - சிங்கள மக்களிடையே மீண்டும் ஒரு பிரிவினையை அரசியல்வாதிகள் ஏற்படுத்தக்கூடாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கேட்டுள்ளார். அத்துடன் கடந்த கால சம்பவங்களை மறந்து சிங்கள மொழியைக் கற்றுக்கொண்டு அனைவருடனும் இணைந்து வாழக்கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் போராளிகளுக்கு அமைச்சர் கூறியுள்ளார்....
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் புதியதொரு அரசியல் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். அவ்வாறே நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மைக்காக புதிய அரசியல் தீர்மானங்கள் பலவற்றை மே முதலாம் திகதிக்குப் பின் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டு மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து ஊழல் மோசடிகள் எதுவும்...
முஸ்லிம் மக்களுக்கு என்ன தேவை என்பதை வடமாகாண சபை கூற முடியாது. அதை அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா, நெளுக்குளம் பகுதியில் சதொச விற்பனை நிலையத்தின் 317 வது கிளையினை திறந்து வைத்த பின் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்...
"நாட்டைப் பிரிக்காது நாம் தனித்து வாழும் அதே நேரம் சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ ஆசைப்படுகின்றோம். அதனை வலியுறுத்தியே அரசியல் தீர்வுத் திட்டத்துக்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரைவை நாம் தயாரித்திருக்கின்றோம்." இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். "நாம் பிரிந்து செல்ல விரும்பாது ஒருங்கிணைந்து வாழ முன்வந்துள்ளமையால் சிங்கள மக்கள் எங்களுக்குச் சகல ஒத்துழைப்பையும்...
மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எந்தவொரு வரி யோசனையையும் செயற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொருளாதார நிபுணர்கள் என்ன கூறினாலும், மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த முடியாது என, அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பற்றி சிந்திக்காத பொருளாதார நிபுணர்கள் இருப்பின் அவர்கள் பணியை விட்டு நீங்கிச் செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்....
வடக்கு மாகாணசபையின் மூலம் வழங்கப்படும் நியமனங்களில் எமக்குத் தெரிந்தவர், எமக்கு வாக்களித்தவர் என்று எந்த முன்னுரிமைகளும் வழங்கப்படுவதில்லை. பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நீதியரசர் ஒருவரை முதல்வராகக்கொண்டு இயக்கப்படும் மாகாண நிர்வாகத்தில் நியமனங்கள் யாவும் நீதியான முறையில் தகுதிகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையால் முகாமைத்துவ உதவியாளர்கள், சாரதிகள், அலுவலகப்...
"காணி சுவீகரிப்பு இனிமேலும் தொடருமாக இருந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும். இதனை நாம் நல்லாட்சி அரசுக்கு இங்கிருந்து எச்சரிக்கின்றோம்." - இவ்வாறு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று சபையில் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
சம்பூர் அனல் மின் நிலைய விடயத்தில் இந்தியா மக்கள் நலன் கருதி சிந்தித்து செயற்படும் என நான் நம்புகின்றேன். இந்தியாவுடனும் இலங்கை அரசுடனும் பேச்சு நடத்தி இவ்விடயத்தில் நல்ல முடிவை நாம் காண்போம் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மூதூருக்கு நேற்று விஜயம் செய்த அவர் சம்பூர்...
நிதி, அறிவு, திறமை ஆகியவை உள்ளடங்கலாக புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதாரம் மற்றும் மனிதவளம் ஆகியவற்றின் வினைத்திறன் மிக்கதான ஒழுங்கமைப்பும் ஒருங்கமைப்புமே தமிழ் மக்களின் சுபீட்சதின் திறவுகோலாக அமைய முடியும் என்று வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் லண்டன் ஹரோவில் நேற்று பிரமாண்டமான முறையில்...
வடக்கில் அண்மைக்காலமாகப் பல தனியார் நிறுவனங்கள் புதிய பயிரினங்களை விவசாயிகளிடையே அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிறுவனங்களின் நம்பகத்தன்மையைத் தெரிந்து கொள்ளாமல், வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். எழுதுமட்டுவாழ் பிரதேச கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (10.04.2016) நடைபெற்றது....
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் எதிர்காலத்தில் நாட்டை பிரிப்பதற்கான ஆயுதக் கிளர்ச்சிகள் மீண்டும் தலைதூக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகாவின் மக்கள் புரட்சி சுதந்திர வெற்றியின் 60ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும்...
செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் கூட தமிழ் மக்களுக்காக என்று மட்டும் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை, தமிழ் பேசும் மக்கள் என்றே நடைபெற்றிருக்கின்றன, தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் எங்களுடைய ஒற்றுமை மூலம் தான் அதிகாரப் பகிர்வின் முழுமையைப் பெறமுடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர்...
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கும் பங்களிப்புச் செய்யும் எல்லா அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி விருதுகள் வழங்கும் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பங்களிப்புகளை வழங்கும் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பில் முன்னுரிமை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்...
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் 23 சதவீதமான மாணவர்கள், காலை உணவை உட்கொள்ளாமலேயே பாடசாலைக்குச் செல்கின்றனர்' என்று யாழ்ப்பாணம் பாடசாலை மருத்துவ அதிகாரி மருத்துவர் வைத்திலிங்கம் யோகேஸ்வரன் தெரிவித்தார். 'வேதநாயகம் தபேந்திரனின் யாழ்ப்பாண நினைவுகள் - 3' நூல் வெளியீட்டு நிகழ்வில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்றது....
ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தனது அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல எனவும், நாடாளுமன்றத்தின் பொறுப்பு எனவும் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தான் நாடாளுமன்றத்துக்குப் பூரண அனுமதியை வழங்கியிருப்பதாகவும்...
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வால்பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம் என அவர் ஆதரவு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எந்த யோசனையாக இருந்தாலும் அதனை நாடாளுமன்றில் முன்வையுங்கள். அதை நாம் கருத்திற்கொள்வோம் என்றும் தெரிவித்தார். சிறிகொத்தவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஆலோசனை கூறி, கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில்...
Loading posts...
All posts loaded
No more posts