Ad Widget

யாழில் பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பின் அறிவியுங்கள்!

பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பதற்கு அனுமதிக்காதீர்கள், அவ்வாறு பிச்சை எடுப்பவர்களைக் கண்டால், யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு அறிவியுங்கள் என யாழ். விழிப்புலனற்றோர் சங்க தலைவர். எஸ்.அற்புதராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் 40வது ஆண்டு நிறைவு நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விழிப்புலனற்றோரால் முடியாதது என...

குளங்களின் நீர் பற்றாக் குறை தொடர்பாக ஆராயப்படுகின்றது

'குளங்களின் நீர் பற்றாக்குறை தொடர்பாக விவசாய அமைச்சருடனும் மத்திய அமைச்சுக்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றோம். இக்குளங்களைப் புனரமைத்தல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குளங்களை ஒன்றாக இணைத்து நீர் மட்டங்களைக் கூட்டுதல், அதன் மூலம் இரண்டு போக பயிர்ச் செய்கைகளுக்கான நீரைத் தேக்கி வைத்தல் ஆகிய திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. இவ்வாராய்ச்சிகள் முடிவடைந்ததும் உங்கள் குளங்கள்...
Ad Widget

வலசைப் பறவைகளின் வருகை வடக்கு மண்ணுக்கு வரப்பிரசாதம்

பூமியின் வடக்குப்பகுதியில் பனிபடிய ஆரம்பிக்கும்போது அப்பிரதேசங்களில் வாழுகின்ற பறவைகள் இரைதேடுவதற்காக வெப்பப்பிரதேசங்களை நோக்கி கூட்டம் கூட்டமாகக் குடிபெயர்கின்றன. குளிர்விலகும்போது தங்கள் சொந்த இடங்களுக்கு பாதை தவறாமல் திரும்பிச்செல்கின்றன. வலசை போகும் இந்தப் பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமாக இலங்கையில் வடக்கு மாகாணத்தில் பல இடங்கள் உள்ளன. இது வடக்கு மண்ணுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்...

கிடுகு வீடாக இருப்பினும் மின் இணைப்பு வழங்கவேண்டும்!

யாழ் மாவட்டத்தில் மின்சார வசதிகள் இல்லாத சுமார் 8000 ஆயிரம் பேருக்கு எதிர்வரும் மூன்று மாதத்துக்குள் மின்சார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். இல்லையேல் கிராம அலுவலர்களே அதற்கான பொறுப்பாளிகள் ஆவர் என மிக்சக்தி பிரதி அமைச்சர் அஜித்.பீபெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற (வெள்ளிக்கிழமை) அனைவருக்கும் மின்சாரம் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு...

அரசு தவறினால் தீர்வை வென்றிட தமிழ் மக்கள் போராட்டம் நடாத்துவார்கள்

தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அரசாங்கத்துக்கும் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும். அத்தகைய அரசியல் தீர்வைக் கொண்டு வர அவர்கள் முன்வரத் தவறினால் தமக்கான அரசியல் தீர்வு என்ன என்பதை தமிழ் மக்களே தீர்மானித்து அதை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள். இவ்வாறு...

டென்மார்க் பாராளுமன்றவளாகத்தில் கஜேந்திரகுமார் ஆற்றிய உரை

டென்மார்க் பாராளுமன்ற வளாகத்தில் டேனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய சர்வதேச சட்டங்களும், மனித உரிமை மீறல்களும் என்னும் வரலாற்றுப்புகழ் மிக்க மாநாடு 11.05.2016 சனிக்கிழமை முற்பகல் 09.15ற்கு ஆரம்பித்து 12.00 மணிவரை சிறப்பாக நடந்தேறியது. சிறீலங்காவில் நடைபெற்ற, நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள், நில அபகரிப்புக்கள் போர்க்குற்றங்கள் போன்றன தொடர்பாக...

பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை

அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்படும் பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை. நீண்டகாலத்துக்கு பாவிக்கும் வகையில் அது இல்லை என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ.பெரேரா தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற அனைவருக்கும் மின்சாரம் நிகழ்ச்சித் திட்டதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...

பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுத்தால் எவ­ரையும் குற்­றம்­சாட்­ட ­மு­டி­யாது

தமிழ் சமூ­கத்தின் மீது நம்­பிக்­கை­யின்றி போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு மத்­தியில் இரா­ணு­வத்­தி­னரை தொடர்ந்தும் நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொள்­ளு­மாயின் மற்­றொரு பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுத்தால் எவ­ரையும் குற்­றஞ்­சாட்­ட­மு­டி­யாது என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டிக்­காட்­டி­யுள்ளார். அதே­நேரம் சமஷ்டி பிரி­வினை அல்ல என்­பதை வலி­யு­றுத்­தி­யவர் மத்­திய அர­சாங்­கத்தின் நேர­டித்­த­லை­யீ­டு­களால் வடக்கு மாகா­ண­சபை தொடர்ந்தும் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குற்­றம்­சாட்­டி­யுள்ளார்....

கையூட்டல், ஊழல், முறைகேடுகளை ஒழிப்பதே பிரதான நோக்கம்

இலங்கையினுள் ஊழலை ஒழிப்பதே தற்போதைய அரசின் பிரதான நோக்கம் என அதிபர் மைத்திபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மைத்ரிபால சிறிசேன லண்டன் நகரில் நேற்று இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார். கையூட்டல், ஊழல் மற்றும் முறைகேடுகள் என்பவற்றை தடுப்பதற்காக புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து...

50% அதிகமான மாணவர்கள் பகிடிவதைகளால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளர்

பல்கலைக்கழகத்தினுல் நம்பமுடியாத சித்திரவதைகள் மற்றும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போது, பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் இருந்து, 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் பகிடிவதைகளால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தான் இவ்வாறான பகிடிவதைகளை எதிர்ப்பதாகவும்,...

ஊடக சுதந்திரம் என்பது காட்டுக் குதிரைக்கான சுதந்திரம் இல்லை

ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் காட்டுக் குதிரைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் இல்லை. ஜனநாயகத்தின் 4ஆவது தூணாகிய ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும். பிழையான, பொய்யான செய்திகளை வெளியிடக்கூடாது' என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்று புதன்கிழமை (11) எச்சரிக்கை செய்தார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில், 'யாழ்ப்பாணத்திலுள்ள நீதவான்...

கூட்டமைப்புக்குள் கழுத்தறுப்புக்கள் இடம்பெறுகின்றன

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கழுத்தறுப்புக்கள், கருவறுப்புக்கள் மற்றும் வெட்டுக்குத்துக்கள் என்பன தாராளமாக நடக்கின்றன' என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான எம்.அன்டனி ஜெயநாதன் பகிரங்கமாக தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இதன்போது உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்திலேயே ஜெயநாதன் இவ்வாறு கூறினார்....

ஆசிரியர்கள் மாணவர்களின் இலட்சிய வழிகாட்டிகளாகத் திகழவேண்டும்

ஆசிரியர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டிகள். மாணவர்களுக்கு பாடங்களைத் தெளிவாகப் புரியவைத்துப் பரீட்சைகளில் சித்திஅடைய வைப்பதில் வழிகாட்டிகளாக விளங்குகின்றார்கள். இது வாழ்வதற்கு உழைப்பதற்கு அவசியமானது. ஆனால், இது மட்டும் போதாது. மாணவன் வாழ்க்கையிலும் நல்லதொரு மனிதனாக வெற்றிபெற வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் இலட்சிய வழிகாட்டிகளாகவும் திகழவேண்டும் என்று விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிசன்...

வடக்கில் சமஷ்டியை கோரக் கூடாது என கூற எந்தக் கொம்பனுக்கும் உரிமை இல்லை!

சாத்வீக போராட்டங்களை சர்வதேச ரீதியில் மேற்கொண்டு காணி சுவீகரிப்பு மற்றும் ஏனைய உரிமைகளை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை இயக்கதின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 30வது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, கடந்த காலத்தினைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் எமது எதிர்காலம் பற்றியும்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் மேதின உரை

விஜயகுமார் அவர்களின் மேதின உரை (வீடியோ)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார் அவர்களின் மேதின உரை..

செல்வராசா கஜேந்திரன் அவர்களின் மேதின உரை (வீடியோ)

வடக்கு மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது வேதனையளிக்கிறது

யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். வேம்படி மகளிர் கல்லூயில் நேற்று காலை 9.30 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது. மாநாட்டில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். எதிர்கால மாணவர்களின் கல்வியும் வளமான சமுதாயமும் என்னும் தொனிப் பொருளிலான இம்மநாட்டில் யாழ் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சுமார்...

வடக்கில் பால் உற்பத்தியில் 40 விழுக்காடு பால் வெளியே செல்கிறது

வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுப்பாலில் 40 விழுக்காடு பால் வடக்கைவிட்டு தனியார் நிறுவனங்களால் வெளியே எடுத்துச்செல்லப்படுவதாக கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (04.05.2016) கால்நடை வளர்ப்பாளர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது...

நடேஷ்வரா கல்லூரிக்கு செல்வதற்கு இராணுவம் இன்னும் தடையாகவுள்ளது!

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வலி வடக்கு நடேஷ்வரா இந்துக் கல்லூரிக்குச் செல்ல இன்னும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருவதாகவும், குறித்த பாடசாலைக்கு செல்ல வேண்டுமாயின் பாடசாலையின் அதிபருடன் வாருங்கள் என இராணுவத்தினர் கோருவதாகவும் வலி வடக்கு மீள்குடியேற்றத் தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மே...
Loading posts...

All posts loaded

No more posts