- Tuesday
- November 26th, 2024
எமது அலுவலர்களில் சிலர் இராணுவத்திற்குப் பயந்து தமது முறையான சட்ட ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடாது எமக்குப் பாதகமான முறையில் நடந்து கொள்வது வரவேற்கத்தக்கதல்ல. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட துறை சார் கூட்டம் வவுனியாவில் உள்ள உதவி உள்ளூராட்சி ஆணையாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முதலமைச்சர்...
யுத்த காலத்தில் குண்டுத்தாக்குதல்களுக்கு இலக்காகி உடலில் செல் துகள்களுடன் வாழும் மாணவ மாணவியர், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் முதியவர்களுக்கு அரசாங்கம் உதவி வழங்குமென பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். நேற்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியவேளையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் உடல் அவயமொன்றிலிருந்த செல் துகள்களை ஒரு பாடசாலை மாணவன் 5...
அரசியலை மறந்து சிங்கள மொழி ஆற்றல் விருத்தியை மேற்படுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள மாணவர்கள் கட்டாயமாக தமிழ் மொழியினை கற்க முன்வந்துள்ளனர். விரைவில் தமிழ் பேசும் சிங்கள அலுவலகர்கள் வட, கிழக்கு மாகாணங்களுக்கு வர இருக்கின்றனர். அதனால் முன்னெச்சரிக்கையாக வட,...
யாழில் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் வாள்வெட்டு உள்ளிட்ட சம்பவங்களின் பின்னணியில், அரச புலனாய்வு பிரிவினரே செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்.வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்- ”போராட்ட காலத்தில்கூட எமது மாணவர்களின் கல்வியில் குறைவு ஏற்படவில்லை. கல்வியில்...
போர் முடிவடையும் வரை ஈ.பி.டி.பி.க்கு அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் மஹிந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திடம் கையளித்த போது...
நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தெஹிவளை - கல்சிசை நகரமண்டபத்தில்...
'நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் எமது பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிட்டது என்று கூற முடியாது. எமது பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. எமது மக்களின் தொழில்வாய்ப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் அரசாங்க வேலைகளில் உள்வாங்குவதில் புறுக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் முழுநாள் விவாதம் ஒன்றை நாம் நாடாளுமன்றத்தில் செய்யவுள்ளோம். ஜனாதிபதி, பிரதமரின்...
இன்று உள்ள அரசியல் தலைவர்கள் இனவாதிகள் அல்ல, அதனால் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலில், எதிர்க்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் காலத்திலேயே, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் கிடைப்பதற்கு வழியமைக்க வேண்டும் என, மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதற்காக...
பழைய ஆட்சியில் மக்களுக்கு நடந்த பல சம்பவங்கள் தற்போது இடம்பெறுவதில்லை, எனினும் அது எமது மக்களின் பிரச்சினைக்கு முடிவு அல்ல, எமது பிரச்சினைக்கு முடிவு வரவேண்டும் எமது மக்களுக்கு நிரந்தரமான, நியாமான தீர்வு வரவேண்டும், என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து...
தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்களை மீளக் கையளிக்கமுடியாது எனக் கூறுவதற்கு இராணுவத்தினருக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அரசாங்கம் மக்களின் சொந்த நிலங்களை விடுவித்து அவர்களை அவர்களது காணிகளில் குடியமர்த்த மறுக்குமானால் நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடுவதுடன், மக்கள் போராட்டத்தை...
வடமாகாண மக்களின் மனம் அறியாது நிலை அறியாது உறுப்பினர்கள் பலர் செயற்பட்டு வருகின்றார்கள். செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போது சிறுபிள்ளைத்தனமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள். பல நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர்மறையான காரியங்களிலேயே சிலர் தம் காலத்தைக்...
எதிர்வரும் காலங்களில் தேசிய கீதம் தமிழில் பாடப்படவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த நிகழ்வுக்கு நான் அழைத்துவரப்பட்டதன் பின்னர் இங்கே தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. இதனை நான் கேட்டுக்கொண்டிருந்தபோதே என்...
"நீண்ட கால இடப்பெயர்வின் பின்னர் சொந்த இடங்களில் மீளக்குடியமரும் போது, நீங்கள் பல சவால்களுக்கு முகம் கொடுக்கின்றீர்கள். இதனை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்." இவ்வாறு நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் டொரே ஹற்ரெம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை வந்த அவர், மக்கள் மீள்குடியமர்வுக்கு கடந்த வருடம் அனுமதிக்கப்பட்ட வளலாய்க்குச் சென்றார். அங்கு மீளக்குடியமர்ந்த மக்களுக்கு...
சிறீலங்கா முழுவதும் போலியோ நோய்த் தடுப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கையை மேற்கொண்ட தினமான தேசிய நோய்த் தடுப்புத் தினமன்று, நீங்கள் ஆயுதங்களை கீழே வைக்கத் தயாரானால் நாமும் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்துவதற்கு தயார் என விடுதலைப்புலிகள் கடிதம் மூலமாக அறிவித்திருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் தலைநகர்...
வடக்கு மாகாண கல்வி வளர்ச்சியானது போர்க் காலத்தில் வீழ்ச்சியடையாது காணப்பட்டிருந்தது. எனினும் போருக்கு பிந்திய ஏழாண்டுகளில் கல்வி வளர்ச்சியானது பாரியளவில் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வலிகாம வலய ஆசிரிய மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
"ஒரு புரட்சிகரமான ஆட்சி மாற்றத்துடன் எனது அரசு பல்லின சமூக சூழலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும், நிலையான அபிவிருத்தி சூழலுக்குமான வழியை ஏற்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது. தற்போது எமது மக்கள் சுதந்தரமாகவும் மனித உரிமைகள் மதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளார்கள்." இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பான் இஷி – சிமா நகரில் நேற்று நடைபெற்ற ஜி -...
யாழ்ப்பாணம் இப்போது போதைப்பொருட்கள் கடத்தல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா போதைப்பொருட்கள் இங்கு கடத்தி வரப்படுகின்றன. எனவே, இக் கடத்தலைத் தடுப்பதற்கு கரையோரங்களில் வாழ்கின்ற பொதுமக்களே எமக்கு கூடுதலாக உதவ வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார். யாழ். சென் பற்றிக்ஸ் வீதியில் உள்ள சென். றோக்ஸ் சனசமூக...
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்புகளிலிருந்து விடுபட்ட பின்னர் இயற்கை அனர்த்தத்தை மறந்துவிடுகின்றனர் எனபதை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அனர்த்தங்களைத் தவிர்க்க - பாதிப்புகளைக் குறைக்க - மக்களைப் பாதுகாக்க நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று திட்டங்களை வகுக்கவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். நாட்டின் நலன்கருதி இதுபோன்ற விடயங்களில் நாம் அனைவரும் ஒன்றாக...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத்...
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற சர்வோதய அமைப்பின் நிகழ்வில் யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்வில் உரையாற்றும் போது எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாணத்தை 1970 ஆம் ஆண்டில் இருந்தவாறு மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு யாழ்ப்பாணத்தை மாற்றுவதற்கு தன்னுடன் இணைந்து அனைவரும் ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சமூகத்தில் ஒவ்வொருவருக்கும்...
Loading posts...
All posts loaded
No more posts