Ad Widget

கணித, விஞ்ஞானத்தில் 40 சதவீத சித்தியை எட்டவேண்டும்

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித, விஞ்ஞான பாடத்துறையில் வடமாகாணத்தில் 18 சதவீதமான மாணவர்கள் மாத்திரம் தற்போது சித்தியடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இதனை 40 சதவீதமாக மாற்றுவதற்குரிய செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்பப்பட்டு கொண்டிருக்கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணம்...

வடமாகாணசபையுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் சி.வி. கோரிக்கை

சில அரச அலுவலர்களின் தன்னிச்சையான தன்னலம் கருதிய நடவடிக்கைகள் எமக்கு வருத்தத்தைத் தருகின்றது. எம்மக்களை உதாசீனஞ் செய்து மாற்றாருக்கு மனமகிழ்வை ஊட்டப் பாடுபடும் அவர்களின் மனோநிலை மாற வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரின் நடவடிக்கைகளையும் நாம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா சிதம்பரபுரம் குடியேற்ற கிராம மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம்...
Ad Widget

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ‘உதவிப்பாலம்’

மக்கள் மனமுவந்து தரும் கொடைகளை தேவையுள்ள மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கான 'உதவிப்பாலம்' என்ற கொடை அலகை உருவாக்கி நடத்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மணிமேகலை உணவுக்கூடத்தை, நேற்று செவ்வாய்க்கிழமை (28) திறந்து வைத்து உரையாற்றும் போதே, முதலமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது, 'தமிழ்...

மதுவுக்காக அதிகம் செலவிடும் மாவட்டங்களில் யாழ்ப்பாணம் முதலிடம்- ஜனாதிபதி

நுவரெலியா மாவட்டம் மது பாவனையில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையின் பேரில், மதுவுக்கு முற்றுப்புள்ளி என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இன்று (26) காலை 10.00 மணிக்கு நுவரெலியா...

பிரபாகரன் சரியாக சிந்தித்திருந்தால் மஹிந்த அடையாளம் தெரியாமல் போயிருப்பார்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று சரியாக சிந்தித்திருந்தால் மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒருவர் அடையாளம் தெரியாத ஒருவராகவே இருந்திருப்பார். பிரபாகரனின் மௌனம் மஹிந்தவுக்கு சாதகமாக அமைந்து விட்டது என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். இனவாதத்தால் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது என மஹிந்த உள்ளிட்ட...

தனியொரு மாணவன், மாணவிக்கு பாடசாலையில் விசேட வகுப்பு நடத்த தடை!

தனியொரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர மற்றும் விடுமுறை நாள் விசேட வகுப்புக்களை பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி புலோலி புற்றளை மகா...

தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் வளங்கள் சூறையாடப்படுகின்றன- வடக்கு முதல்வர்

தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் வளங்களை சூறையாட சிலர் முயற்சிப்பதாக வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தாம் கலந்து கொண்டிருந்ததாகவும், இதன்போது வடமாகாணத்துக்கு கிடைக்கப்பெறவுள்ள பொருளாதார மையம் தொடர்பில் சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய வடக்கு...

புதிது புதிதாக கோவில்களை அமைப்பது பயனற்றது வறியோருக்கு உதவுங்கள் : முதலமைச்சர்

இருக்கின்ற கோவில்களில் வழிபாடு செய்வதற்கு மக்கள் இல்லாத நிலையில் புதிது புதிதாக கோவில்களை அமைக்க முயல்வது பயனற்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். துணைவி கலைவாணி சனசமூக நிலையத்தின் 31வது ஆண்டு விழாவும் அமரர் சி. சிதம்பரப்பிள்ளை ஞாபகார்த்த கலைவாணி கலையரங்கு திறப்புவிழாவும் நேற்றைய தினம் துணைவி, சங்கரத்தையில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக...

எமது கல்வியின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை!

கடந்த காலங்களில் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்ட போது அதில் பாரபட்சம் காட்டப்பட்டது, பெரும்பான்மை பாடசாலைகளுக்கு ஒரு மாதிரியாகவும் சிறுபான்மை பாடசாலைகளுக்கு வேறு மாதிரியாகவும் நிதி பகிரப்பட்டது, ஆனால் இன்று நிலைமை அப்படி அல்ல அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரே அளவான நிதி ஒதுக்கப்படுகின்றது என, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். எனவே எமது கல்வியின்...

இலங்கை, இந்திய உறவு ஒருபோதும் முறியாது! யாழில் ஜனாதிபதி

"இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் கடும்போக்காளர்கள் சிலர் பல்வேறு பிழையான வியாக்கியானங்களை முன்வைத்து வருகின்றபோதும் தற்போதைய அரசின் கீழ் இரண்டு நாடுகளும் மிகுந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றன. எனவே, இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகள் ஒருபோதும் பாதிப்படையாது." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்தியாவின் உதவிகளுக்குப் பெரு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அவர்...

மஹிந்த அரசுக்கும் மைத்திரி ரணில் அரசுக்கும் எதுவிதமான வேறுபாடுமில்லை- கோகிலவாணி

நேற்றய ஜெனிவா கூட்டத்தொடர் முடிவடைந்ததன் பின்னர் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பலர் பங்குபற்றி இலங்கை தொடர்பில் தத்தம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். சுவீடன் நாட்டைச் சார்ந்த பேராசிரியர் பீற்றர் சாக் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் போராளியும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும், கடந்த தேர்தலின்போது...

வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம், இந்த ஆண்டு இறுதிக்குள் GSP+ சலுகையை பெற்றுக் கொள்வோம்

நாட்டின் பொருளாதார நிலமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (17) அலரி மாளிகையில் வைத்து விஷேட உரை ஒன்றை நிகழ்த்தி இருந்தார். தனது விஷேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடை நேற்று நீக்கப்பட்டது. நாம் அதிகாரத்திற்கு வந்தால் இந்த தடையை நீக்குவதாக 2014ம் ஆண்டு...

யாழில் அப்துல்கலாமின் சிலை திறந்து வைத்து முதலமைச்சர் உரை

இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி டாக்டர் எ. பி. ஜே. அப்துல் கலாமின் திருவருவச் சிலை இன்று யாழ் பொது நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த திருவுருவச் சிலையினை இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்கா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர். யாழ் பொது நூலகத்தில்...

பிரதமரின் சாதகமான பதிலை எதிர்பார்க்கும் முதலமைச்சர்!

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் இடத்தெரிவு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதகமான பதில் தருவார் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையத்தின் இடத்தெரிவு குறித்து பேசப்பட்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “மத்திய...

வடக்கின் கல்வி நிலை போர் முடிந்த பின் வீழ்ச்சி! முதலமைச்சர் வேதனை

போர் நடந்த காலகட்டத்தில் வட மாகாணத்தில் கல்வி நிலை முன்னேற்றம் கண்டிருந்து, எனினும் தற்போது கல்வி நிலை வீழ்ச்சி கண்டு வருகிறது என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பரந்தன் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். வட மாகாணத்தில் கல்வி நிலை வீழ்ச்சியடைவதானது...

சிறுவர் தொடர்பான விடயங்களில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்!

சிறுவர்கள் தொடர்பான நடவடிக்கைகளில் வெகுஜன ஊடகங்கள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறுவர்கள் தொடர்பான செய்திகளை வௌியிடும் போது, சில ஊடகங்கள் தமது இருப்பு பற்றி சிந்தித்தே செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது ஊடகங்களின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்....

சுன்னாகம் மக்களுக்கு விரைவில் சுத்தமான குடிநீர் ; விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணம் சுன்னாகம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். காக்கை தீவுப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பிளாஸ்ரிக்பொலித்தீன் கழிவு மீள்சுழற்சி நிலையத்தை இன்று திங்கட்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வட பகுதியிலேயே மிகச் சுத்தமான குடி நீர் பெறக்கூடிய இடமாக அமைந்திருந்த சுன்னாகம்...

தனித்துவம் அழிக்கப்படும் போது கலாச்சாரம் பாதுகாக்கப்படவேண்டும்

இனத்தின் தனித்துவம் அழிக்கப்படுகின்ற அல்லது மாற்றியமைக்கப்படுகின்ற சூழ்நிலையில், எமது கலாசாரங்களை பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்' என யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட கலாசார பேரவையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது. இதில் தலைமையுரையாற்றும் போதே மாவட்டச்...

சிறுநீரக நோயை ஒழிக்க தூய குடிநீர் திட்டம்

நாட்டின் தேசிய பிரச்சினையாகியுள்ள சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு தூய குடிநீர் வழங்குவதற்கான சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். வடமத்திய மாகாணத்திலேயே அதிக அளவிலான சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக புள்ளி விவரத் தகவல்கள் கூறுகின்ற போதிலும், இந்த நோய் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று வவுனியா மாவட்டத்தில் நடந்த...

பாராளுமன்றில் (ஒத்திவைப்பு) பிரேரணை- இரா சம்பந்தன்

எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்கள் பாரளுமன்றில் சமர்ப்பித்த பிரேரணை முழுமையாக 2016 ஜூன் மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றம் ஒத்திவைப்பு வேளையில் பொதுமக்கள் முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஒன்று தொடர்பான முன்னகர்வு விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான அறிவித்தலொன்றை இத்தால் தருகின்றேன். இந்த நாட்டில் ஆயுதக் கலவரம் ஒன்று முடிவடைந்து ஏழு வருடங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts