- Tuesday
- November 26th, 2024
வட மாகாண சபையினால் பல விதமான அபிவிருத்தி திட்டங்களை மருந்தங்கேணியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையும் யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து மருதங்கேணியில் நடத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும்...
இலங்கையில் இந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஆடி அமாவாசை தினத்தையொட்டி, கீரிமலையில் நடைபெற்ற பிதுர் கடன் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்த வைபவத்தில் கல்வி ராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணனும் கலந்து...
முன்னாள் போராளிகளை சர்வதேச ரீதியிலான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவை திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் உரையாற்றியபோதே வடக்கு முதலமைச்சரிடம் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்....
இலங்கையின் மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற விடயங்கள் மக்கள் மனதை விட்டு அகலாது எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எனினும், இது நல்லிணக்கத்துக்குத் தடையாக அமைந்துவிடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். "யுத்தம் நடந்தது...
தாங்கிக் கொள்ள முடியாத அளவு கடன் சுமையில் நாட்டை இழுத்துப்போடும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் நிலை தற்போதைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இலங்கை தற்போது 09 இலட்சம் கோடி ரூபா கடன் சுமையை எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். கடந்த ஆட்சியாளர்கள் தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றி இருந்தால் நாடு இவ்வாறான ஒரு நிலமைக்கு...
வடக்கில் ஏனைய மரங்களைவிடப் பனை மரங்களே அதிகம். மற்றெல்லா மரங்களையும் விட அதிக பயன்தரக்கூடியவையும் பனைகள்தான். ஆனால், அரிய வளமான பனைகள்பற்றி ஆய்வாளர்கள் அதிகம் கண்டுகொள்வதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விசனம் தெரிவித்துள்ளார். வடமாகாண பனை அபிவிருத்தி வார இறுதி நாளான நேற்று வியாழக்கிழமை (28.07.2016) பனை அபிவிருத்தி ஆய்வரங்கு யாழ்...
தரமான வாழ்வு வாழ்ந்த தமிழ் மக்கள், தரங்கெட்டு வாழ்வதற்கு இடமளிக்கக் கூடாதென, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடி மேற்கில் அமைந்துள்ள சரஸ்வரதி சனசமூக நிலையத்தின் புதிய கட்டிட திறப்புவிழா, இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே, வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- ”போரானது எம்மை...
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், நாட்டினுள் நிர்மாணிக்கப்பட்டுள்ள இன ஒற்றுமையை பாதிக்கும் வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள பாத யாத்திரையை தோற்றடிக்க செய்ய வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்ற வேளையில், அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி...
தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ஓலைச் சுவடிகளிலேயே எழுதப்பட்டது. சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், தேவாரத் திருமுறைகள், சித்த மருத்துவ நூல்கள் என்று தமிழை வளப்படுத்திய அத்தனை நூல்களும் ஓலைச் சுவடிகள் வழியாகவே எங்களிடம் கையளிக்கப்பட்டன. தமிழை வளர்த்தது பனை. பனை இல்லாமல் இருந்திருந்தால் தமிழுக்கு இவ்வளவு வளங்களும் வந்து சேர்ந்திராது. தமிழை வளர்த்த...
வடமாகாண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபையை நிராகரித்து மத்திய அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதை வடமாகாண சபை உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 57 ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடமாகாண சபை முதலமைச்சர் இவ்வாறு...
'இணையத்தளத்துக்கு அடிமையாதல் என்பது, ஒருவித மனநோயாகும்' என்று கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரமணி ரட்ணவீர தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், 'தற்போதுள்ள நவீன தொழில்நுட்பமானது, கல்வியுடன் ஒன்றிணைந்த ஒரு சாதனமாகும். ஆனால், அவ்வாறான இணைய மற்றும் தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் என்பது, ஒரு நபருடைய மனநலத்தை பாதிக்கும்'...
"தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.சுமார் 80 லட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் ஜேர்மன் அரசின் உதவியில்கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
'புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது, அதற்கு எதிரான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது, நாட்டைப் பிரிப்பதற்கான நடவடிக்கை அல்ல. எல்லோரையும் ஒன்றாக, ஒரே குடையின் கீழ் வைத்து, சமாதானமாக வாழக்கூடிய நிலைமையினை உருவாக்கவே புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துகின்றோம்' என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்கலைக்கழகங்கள் தேசிய நல்லிணக்கத்தின் கேந்திர...
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு பக்குவமான படித்த முஸ்லிம் நபரை எமது முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராகவிருக்கின்றோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலேயே வடக்கு கிழக்கு இணைந்திருக்க வேண்டுமென திடமாக வலியுறுத்தி வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனை முஸ்லிம்...
ஊடகங்களின் பொறுப்பு, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்வதே தவிர அவர்களை வழிகெடுப்பது அல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பேராதனை ஸ்ரீ சுபோதிராம விகாரையில், நேற்று (09) பிற்பகல் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இன்னும் இரு வாரங்களுள்...
"இலங்கையின் உள்நாட்டு நிர்வாகத்திலோ அல்லது நீதித்துறையின் செயற்பாடுகளிலோ வெளிநாட்டு நீதிபதிகளோ அல்லது சர்வதேச நீதித்துறை சார்ந்தவர்களோ தலையிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை." இவ்வாறு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பாணந்துறை நகரசபை விளையாட்டரங்கில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீ ராமான்ய மகா நிக்காயாவின் முக்கிய சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு...
நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கும் பிரதான தூண்களாக அரசதுறையும் தனியார்துறையும் விளங்குகின்றன. அத்தோடு, நாட்டின், குறிப்பாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தைத் தாங்கும் மூன்றாவது தூணாகக் கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்துங்கள் என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகிழக்கு வடபகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் சர்வதேச கூட்டுறவு தினவிழா நேற்று வெள்ளிக்கிழமை (08.07.2016) கொண்டாடப்பட்டது. புத்தூரில் அமைந்துள்ள சங்க...
“வடமாகாண சபைக்கு சொந்தமான பல சுற்றுலா மையங்களை இரானுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்” என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். வடமாகாண சுற்றுலா மையம் நேற்று மாங்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “2010ஆம் ஆண்டு போர் முடிந்துவிட்ட...
என்னுடன் குரோதம் இருந்தால் என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடையுங்கள். அதைவிடுத்து எனது பிரதேச கிராம மக்களை பழிவாங்க வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ஆட்சிக் காலத்தில் குடிசைகள் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக வசதியான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹுங்கம அத்புடுவ விஹாரையில் இடம்பெற்ற மத வைபவத்தில்...
மத்திய வங்கியின் நம்பகத் தன்மை மற்றும் நற்பெயரினை நிலைநிறுத்துவதனையே எனது முதன்மையான பொறுப்பாக கருதுகின்றேன் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, அதற்கான நியமனக் கடிதத்தினை நேற்று (04) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்....
Loading posts...
All posts loaded
No more posts